இந்தியாவில் ஈகாமர்ஸ் சந்தையின் வழியாக நாட்டின் ரீடைல் சந்தையைப் பெரிய அளவில் கைப்பற்ற வேண்டும் எனத் திட்டம் தீட்டி வரும் பல்வேறு நிறுவனங்கள் மத்தியில் முதன்மையாக இருப்பது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அமேசான் ஆகிய நிறுவனங்கள் தான். இந்நிலையில் இவ்விரு நிறுவனங்களுக்கும் போட்டியாகக் களத்தில் இறங்கத் திட்டமிட்டுள்ளது இந்தியாவின் மாபெரும் தொழிற்துறை நிறுவனமான டாடா குழுமம்.
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் ஜியோ மார்ட் அறிமுகத்திற்குப் பின் இந்திய ரீடைல் சந்தை மிகப்பெரிய மாற்றத்தை அடைந்துள்ளது. குறிப்பாக ஜியோமார்ட் மற்றும் அமேசான் மத்தியிலான போட்டி உச்சத்தை அடைந்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.
இந்த இருமுனை போட்டியில், தற்போது 3வது நிறுவனமாக டாடா களத்தில் இறங்க முடிவு செய்துள்ளது.
சூப்பர் ஆப்
அமேசான், ஜியோவுக்குப் போட்டியாக டாடா குழுமம் பல்வேறு சேவைகளைக் கொண்ட ஒரு சூப்பர் ஆப்-ஐ அறிமுகம் செய்ய முடிவு செய்து அதற்கான பணிகளைத் துவங்கியுள்ள நிலையில், இந்தச் சூப்பர் ஆப் மக்களின் சேவைக்கு டிசம்பர் அல்லது 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் கிடைத்துள்ளது.
பல்வேறு சேவைகள்
இப்புதிய சூப்பர் ஆப்-ல் வாடிக்கையாளர்களுக்குப் பல்வேறு சேவைகளும், பொருட்களும் ஓரே இடத்தில் கிடைக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட உள்ளதாகவும், இதில் டாடா குழுமத்தின் டாடா கிளிக், ஈஸ்டோர் ஸ்டார்குவிக், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை பிராண்டான க்ரோமா ஆகிய அனைத்து சேவைகளும் ஓரே இடத்தில் கிடைக்கும் வண்ணம் உருவாக்கப்பட உள்ளது.
என் சந்திரசேகரன்
ஒரு செயலிக்குள், பல்வேறு சேவைகளை அளிக்கும் செயலிகளை இணைத்து வாடிக்கையாளர்களுக்குக் கொடுப்பதே சூப்பர் ஆப். இந்தியாவில் தற்போது டாடா குழுமத்திற்கு மிகப்பெரிய வர்த்தக வாய்ப்பு இருக்கும் நிலையில் இதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதில் டாடா குழுமம் உறுதியாக உள்ளது என டாடா குழுமத்தின் தலைமை நிர்வாகமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் என் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
இந்திய மக்கள்
டாடா குழுமம் இந்திய மக்களைப் பல வகையில் இணைத்தும், வர்த்தகம் செய்து வரும் நிலையில், எங்களது வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட அனுபவத்தைக் கொடுப்பது மட்டும் அல்லாமல் புதிய வாடிக்கையாளர்களையும், புதிய சந்தையை இணைக்கும் திட்டத்தோடு இந்தச் சூப்பர் ஆப் உருவாக்கப்பட உள்ளது என என் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
கன்ஸ்யூமர் இண்டர்நெட்
கடந்த சில மாதத்தில் இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ மிகப்பெரிய அளவில் வர்த்தகத்தில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளது. குறிப்பாக ரீடைல் வர்த்தகத்தில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது. மறுமுனையில் டிசிஎஸ் போன் மிகப்பெரிய டெக் ஜாம்பவான் நிறுவனத்தை வைத்துக்கொண்டும் கன்ஸ்யூமர் இண்டர்நெட் சேவையில் இன்னும் இறங்காமல் உள்ளது டாடா.
டாடா அறிமுகம் செய்யப்போகும் சூப்பர் ஆப் தான் டாடா குழுமத்தின் முதல் கன்ஸ்யூமர் இண்டர்நெட் வர்த்தகத்தின் முக்கியப் படியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications