இந்தியாவின் செமிகண்டக்டர் பயணத்தில் முக்கிய மைல்கல்லாக டாடா குழுமம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திட்டத்தைத் தமிழ்நாட்டுக்குக் கொண்டு வராமல் அசாம் மாநிலத்தில் அமைக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளது.
டாடா குழுமம் திருச்சி அருகே மணப்பாறை சிப்கட்டில் மிகப்பெரிய இடத்தைக் கைப்பற்றியுள்ளது, இந்த இடத்தில் செமிகண்டக்டர் சிப் தொழிற்சாலை கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முன்பு தகவல் வெளியானது.

ஆனால் ஜனவரி மாதம் தமிழ்நாட்டுக்கு அடுத்தாகக் குஜராத் மாநிலத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது, இதில் பேசிய டாடா சன்ஸ் சேர்மன் என் சந்திரசேகரன், செமிகண்டக்டர் தயாரிப்பு தொழிற்சாலையை Dholera-வில் அமைக்கக் குஜராத் மாநில அரசுடன் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாகத் தெரிவித்தார்.
இதற்கு மத்தியில் மத்திய அரசு தரப்பில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அசாம் மாநிலத்தில் செமிகண்டக்டர் பேக்கேஜிங் ஆலைக்கான டாடா குழுமத்தின் திட்டம் மதிப்பீட்டில் இருப்பதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார்.
அசாமில் உள்ள கவுகாத்தி பல்கலைக்கழகத்தில் டிஜிட்டல் இந்தியா-வின் எதிர்காலத் திறன் உச்சி மாநாட்டில் பேசிய ராஜீவ் சந்திரசேகர், அசாமில் விரைவில் ரூ.25,000 கோடி மதிப்பிலான செமிகண்டக்டர் பேக்கேஜிங் ஆலை தொடங்க உள்ளது. அசாமில் செமிகண்டக்டர் அலை அமைப்பது குறித்த டாடா குழுமத்தின் விண்ணப்பம் தற்போது இது மதிப்பீடு செய்யப்பட உள்ளது எனத் தெரிவித்தார்.
டாடா எலக்ட்ரானிக்ஸ் சுமார் ரூ.40,000 கோடி முதலீட்டில் மாநிலத்தில் செமிகண்டக்டர் அவுட்சோர்ஸ் செமிகண்டக்டர் அசெம்பிளி மற்றும் டெஸ்ட் (OSAT) அமைப்பதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துள்ளதாக அசாம் முதல்வர் ஹிமந்தா சர்மா கூறிய இரண்டு மாதங்களுக்குப் பிறகு ராஜீவ் சந்திரசேகர் இதுகுறித்து பேசியுள்ளார்.
டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் Jagiroad பகுதியில் 40000 கோடி ரூபாய் முதலீட்டில் Electronic Centre அமைக்க இந்திய அரசிடம் தனது திட்டத்தை முன்வைத்துள்ளதாகவும், இது அசாம் மாநிலத்திற்கு மிகப்பெரிய குட் நியூஸ் என்றும் டிசம்பர் 9, 2023 டிவிட்டர் பதிவில் அசாம் முதல்வர் ஹிமந்தா சர்மா தெரிவித்தார்.
இந்தத் தொழிற்சாலைக்கு 1000 ஊழியர்கள் தேவைப்படுவதாக டாடா எலக்ட்ரானிக்ஸ் அசாம் மாநில அரசிடம் தெரிவித்த நிலையில், டாடா குழும உதவியுடன் 1000 பேருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.
செமிகண்டக்டர் பிரிவில் பல கட்டங்கள் உள்ளது, செமிகண்டக்டர் ஃபேப்ரிகேஷன், செமிகண்டக்டர் டிசைன், செமிகண்டக்டர் அசம்பிளி & பேகேஜிங், செமிகண்டக்டர் டெஸ்டிங் ஆகியவை உள்ளது. தற்போது டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் அசாம் மாநிலத்தில் நிறுவ திட்டமிட்டு உள்ளது செமிகண்டக்டர் அசம்பிளி, பேகேஜிங், டெஸ்டிங் பிரிவு.
டாடா எலக்ட்ரானிக்ஸ் இதுவரையில் திருச்சி, கிருஷ்ணகிரி, கர்நாடக மாநிலம் கோலார், குஜராத், அசாம் எனப் பல மாநிலத்தில் OSAT தொழிற்சாலை அமைக்கத் திட்டமிட்டு முயற்சிகளை மேற்கொண்டு உள்ளது. ஆனால் முதல் முறையாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் இருந்து குறிப்பாக இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அவர்களிடம் இருந்து பரிசீலனை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications