டாடா பவர், பூட்டானின் டிருக் கிரீன் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் ( Druk Green Power Corporation Ltd - DGPC) உடன் இணைந்து, அந்நாட்டில் சுமார் 5,000 MW புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (கிளீன் எனர்ஜி) உற்பத்தி தளத்தை உருவாக்கும் ஒரு மிகப்பெரிய திட்டத்தை மேற்கொள்ளும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
சமீபத்தில் இந்தியாவின் முன்னணி வர்த்தக சாம்ராஜ்ஜியங்கள் அண்டை நாடுகளுடன் அடுத்தடுத்து மாபெரும் திட்டத்திற்காக ஒப்பந்தம் கையெழுத்திட்டு வருகிறது. இந்தியாவின் உற்பத்தி திறன் அதிகரித்தது வாயிலாகவும், பல துறையில் நிபுணதுவம் பெற்ற காரணத்தால் பூட்டான், இலங்கை, பங்களாதேஷ் நாட்டில் அடுத்தடுத்து முக்கிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இந்த வரிசையில் உலகளவில் 30க்கும் அதிகமான நாடுகளில் வர்த்தகம் செய்யும் டாடா குழுமம், பூட்டான் நாட்டின் டிருக் ஹோல்டிங்ஸ் அண்ட் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் லிமிடெட்டின் (Druk Holding and Investments Ltd) துணை நிறுவனமான DGPC உடன் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
டிருக் குழுமம் தான் பூட்டான் நாட்டின் ஒரே மின் உற்பத்தி நிறுவனமாகும், இந்த புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் ஆசியாவின் வளர்ந்து வரும் கிளீன் எனர்ஜி துறையின் இரண்டு முன்னணி மின்சார நிறுவனங்கள் மிகப்பெரிய கூட்டணி அமைத்துள்ளது.
இந்த கூட்டணி மூலம் 4,500 MW நீர் மின் நிலையத்தை உருவாக்க உள்ளது, இந்த நீர் மின் நிலைய திட்டத்தில் 1,125 MW டோர்ஜிலுங் நீர் மின் திட்டம் (HEP), 740 MW கோங்ரி நீர்த்தேக்கம், 1,800 MW ஜெரி பம்ப்ட் ஸ்டோரேஜ் திட்டம் மற்றும் 364 MW சாம்கார்ச்சு IV திட்டம் ஆகியவை அடங்கும். இந்த திட்டங்கள் படிப்படியாக செயல்படுத்தப்படும்.
நீர் மின் நிலைய திட்டத்துடன், டாடா பவரின் துணை நிறுவனமான டாடா பவர் ரெனூவபிள் எனர்ஜி லிமிடெட் (TPREL), 500 MW சோலார் எனர்ஜி திட்டங்களை உருவாக்க உள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று பூட்டான் நாட்டின் திம்புவில் DGPC நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தாஷோ செவாங் ரிஞ்சின் மற்றும் டாடா பவரின் சிஇஓ மற்றும் எம்டி பிரவீர் சிங்கா ஆகியோரால் கையெழுத்திடப்பட்டது. இந்த நிகழ்வின் போது பூட்டான் நாட்டின் பிரதமர் தாஷோ செரிங் டோப்கே, டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன் என பல முக்கிய நபர்கள் கலந்துக்கொண்டனர்.
டாடா பவர் மற்றும் DGPC ஆகியவை 2008 ஆம் ஆண்டு முதல் பல திட்டத்தில் இணைந்து செயல்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications