இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமம் ஆக விளங்கும் டாடா குழுமம் நீண்ட காலமாக மிஸ்திரி குடும்பத்துடன் சட்டச் சிக்கல்களைச் சந்தித்து வருகிறது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் டாடா குழுமத்தின் மிகப்பெரிய பங்குதாரர் ஆக விளங்கும் மிஸ்திரி குடும்பம் வைத்துள்ள டாடா பங்குகளை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது.
இந்தப் பங்கு கைப்பற்றல் மூலம் டாடா குழுமம் மற்றும் மிஸ்திரி குடும்பம் மத்தியிலான பிரச்சனை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
18 சதவீத பங்குகள்
டாடா குழுமம் மற்றும் மிஸ்திரி குடும்பம் மத்தியிலான வழக்குத் தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன சார்பாக வாதாடிய வழக்கறிஞர், மிஸ்திரி குடும்பத்தின் Shapoorji Pallonji குருப் தற்போது மிகப்பெரிய கடனில் தவித்து வரும் நிலையில், நிலுவையில் உள்ள கடனை செலுத்தக் கடன் பெற விரும்பினால் மிஸ்திரி குடும்பம் வைத்துள்ள 18 சதவீத டாடா குழுமத்தின் பங்குகளை டாடா சன்ஸ் வாங்கத் தயாராக உள்ளது எனத் தெரிவித்துள்ளது.
கடன்
ஆனால் மிஸ்திரி குடும்பத்தின் Shapoorji Pallonji குருப், டாடா குழுமப் பங்குகளை விற்பனை செய்ய விரும்பவில்லை, ஆனால் இந்தப் பங்குகளை அடமானமாக வைத்து கடன் பெற தயாராக உள்ளது என அறிவித்துள்ளது.
Shapoorji Pallonji குருப் முதலீடுகள் நம்பகத்தன்மையாக இல்லை, இதனால் பங்குகளை அடமானமாகப் பெற்றால் அது கடனை தொகையைப் பாதிக்கும் என டாடா குழுமம் பதில் அளித்துள்ளது.
விற்பனை தடை
மேலும் Shapoorji Pallonji குருப் கட்டுப்பாட்டில் இருக்கும் டாடா குழுமப் பங்குகளை விற்பனை செய்ய அக்டோபர் 28ஆம் தேதி வரையில் தடை பெற்றுள்ளது டாடா குழுமம். இதனால் மிஸ்திரி குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் டாடா பங்குகளை நிதி தேவைக்காக வெளி முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்ய முடியாது.
113 பில்லியன் டாலர்
பலோன்ஜி மிஸ்திரி மற்றும் அவரது குடும்பத்தின கட்டுப்பாட்டில் Shapoorji Pallonji குருப் உள்ளது, சாப்ட்வேர் முதல் கார் வரையில் இருக்கும் 113 பில்லியன் டாலர் மதிப்பிலான டாடா சாம்ராஜ்ஜியத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தில் 18 சதவீத பங்குகளின் மொத்த மதிப்பு 20.34 பில்லியன் டாலர்.
1 பில்லியன் டாலர் கடன்
இந்நிலையில் ரியல் எஸ்டேட், இன்பரா, ஹோம் அப்லையன்ஸ் பிரிவில் இருக்கும் மிஸ்திரி குடும்பம் தனது கடன் சுமையைக் குறைக்க டாடா சன்ஸ் பங்குகளை அடமானம் வைத்து சுமார் 1 பில்லியன் டாலர் அளவிலான தொகையைக் கடனாகப் பெற முயற்சி செய்து வருகிறது, ஆனால் நீதிமன்ற தடையால் டாடா பங்குகளைப் பயன்படுத்த முடியாமல் உள்ளது Shapoorji Pallonji குருப்.
Shapoorji Pallonji குருப் தற்போது 1.3 பில்லியன் டாலர் அளவிலான கடனில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கியப் பிரச்சனை
டாடா குழுமத்தின் தலைவராக 2013ஆம் ஆண்டு டாடா சன்ஸ் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராகப் பலோன்ஜி மிஸ்திரி-யின் மகனான சைரஸ் மிஸ்திரி நியமிக்கப்பட்ட, பல்வேறு பிரச்சனைகள் மற்றும் மோசமான நிர்வாக முடிவுகளின் எதிரொலியாக 24ஆம் தேதி அக்டோபர் 2016ல் சைரஸ் மிஸ்திரி டாடா சன்ஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதன் பின்பு தான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், டிசிஎஸ் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ-வான என் சந்திரசேகரன் டாடா சன்ஸ் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
சைரஸ் மிஸ்திரி-யின் பதவி நீக்கம் இன்று வரை டாடா குழுமம் வழக்குகளை எதிர்கொண்டு வருகிறது.


Click it and Unblock the Notifications