இந்திய கார்பரேட் நிறுவனங்கள் மத்தியில் ஹாட் டாப்பிக் ஆக விளங்கும் டாடா சன்ஸ் - சைர்ஸ் மிஸ்திரி-யின் எஸ்பி குரூப் மத்தியிலான வழக்கு பங்கு பரிமாற்ற திட்டத்தின் மூலம் முடியும் என அனைவரும் எதிர்பார்த்து வந்த நிலையில், டாடா சன்ஸ், எஸ்பி குரூப் பரிந்துரை செய்துள்ள திட்டம் நான்சென்ஸ் என அறிவித்துள்ளது.
இதனால் டாடா சன்ஸ் - சைர்ஸ் மிஸ்திரி-யின் எஸ்பி குரூப் மத்தியிலான பிரச்சனை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா சன்ஸ் - எஸ்பி குரூப்
டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தில் டாடா குடும்பத்திற்கு அடுத்து அதிகளவிலான பங்குகளை வைத்துள்ளது ஷாபூர்ஜி பலோன்ஜி குடும்பம்.
இந்த ஷாபூர்ஜி பலோன்ஜி குடும்பத்தின் சார்பாக டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்த சைரஸ் மிஸ்திரியை வெளியேற்றியதன் வாயிலாக டாடா சன்ஸ் மற்றும் எஸ்பி குரூப் இடையில் பிரச்சனை வெடித்தது வழக்குத் தொடுக்கப்பட்டது.
எஸ்பி குரூப்
இந்த வழக்கின் வாயிலாக டாடா சன்ஸ் எஸ்பி குரூப் வைத்திருக்கும் டாடா பங்குகளை விற்பனை செய்யக் கூடாது எனத் தடை உத்தரவைப் பெற்றது.
எஸ்பி குரூப் தற்போது பெரும் நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமையில் இருக்கும் காரணத்தால் வழக்கை முடிக்கும் நோக்கில் டாடா சன்ஸ் நிர்வாகத்தில் வெளியேற முடிவு செய்து டாடா சன்ஸ் பங்குகளை டாடா குடும்பத்திற்கே கொடுப்பதாக அறிவித்தது.
பங்கு பரிமாற்றம்
டாடா சன்ஸ் நிறுவனத்தில் ஷாபூர்ஜி பலோன்ஜி குடும்பம் சுமார் 18.4 சதவீத பங்குகளை வைத்துள்ளது. இந்தப் பங்குகளுக்கு இணையான மதிப்பிற்குப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள டாடா குழுமத்தின் இதர நிறுவனப் பங்குகளைக் கொடுத்தால் போதுமானது என ஷாபூர்ஜி பலோன்ஜி குடும்பத்தின் சார்பாக எஸ்பி குரூப் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
டாடா சன்ஸ் பதில்
இந்தப் பரிந்துரை குறித்த விவாதத்தில் டாடா சன்ஸ் உச்ச நீதிமன்றத்தில், எஸ்பி குரூப் தற்போது சமர்ப்பித்த பரிந்துரை சுத்த 'நான்சென்ஸ்', இதுபோன்ற திட்டத்தை ஏற்க முடியாது, டாடா சன்ஸ் இதை முற்றிலும் மறுக்கிறது. என டாடா சன்ஸ் தெரிவித்துள்ளது.
பங்குதாரர்
இதேபோல் எஸ்பி குருப் இந்த வழக்கில் வெற்றிபெற்றால், நீதிமன்றம் டாடா குழுமத்தில் அதிகப் பங்குகளை வைத்துள்ள பங்குதாரர்-ஐ எஸ்பி குரூப் வைத்துள்ள பங்குகளைச் சந்தை விலைக்கு வாங்க உத்தரவிடலாம்.
மதிப்பீடு பிரச்சனை
எஸ்பி குரூப் வைத்துள்ள டாடா சன்ஸ் பங்குகளின் மதிப்பு சுமார் 1.78 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிற்கு மதிப்பிட்டு நீதிமன்றத்தில் சில வாரங்களுக்கு முன் அறிவித்தது. இதற்கு டாடா சன்ஸ் நிறுவனம் மறுப்பு தெரிவித்து எஸ்பி குரூப் வைத்துள்ள பங்குகளின் மதிப்பு 70,000 முதல் 80,000 கோடி ரூபாய் மட்டுமே.
எஸ்பி குரூப் டாடா-வின் பிராண்டு வேல்யூ-வையும் சேர்த்துக் கணக்கிட்டு உள்ளது. 2020ல் படி டாடாவின் பிராண்டு வேல்யூ 1.46 லட்சம் கோடி ரூபாய்
பிராண்டு மதிப்பு
எஸ்பி குரூப் டாடா-வின் பிராண்டு மதிப்பு மோசமான நிலைக்குத் தள்ளிவிட்டு எப்படிப் பிராண்டு மதிப்பையும் சேர்ந்து தனது பங்கு இருப்புடன் கணக்கிடுகிறது. இதைக் கண்டிப்பாக ஏற்க முடியாது என டாடா சன்ஸ் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications