வோல்டாஸ், டாடா மோட்டார்ஸ், இந்தியன் ஹோட்டல்ஸ், டைட்டன் நிறுவனம், டாடா கம்யூனிகேஷன்ஸ் மற்றும் டாடா கன்சியூமர் ப்ராடக்ஸ் உள்ளிட்ட டாடா குழும நிறுவனங்கள், மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் அதிகரித்த பங்குகளில் அடங்கும்.
டாடா மெட்டாலிக்ஸ், டாடா பவர் மற்றும் டாடா எல்க்ஸி உள்ளிட்ட 29 டாடா குழும பங்குகளில், மியூச்சுவல் பண்டுகளில் முதலீடுகள் குறைந்துள்ளதாக பிரைம் டேட்டா பேஸ் மூலம் அறிய முடிகிறது.
ஜே எல் ஆர்
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தினை பொறுத்தவரையில், மியூச்சுவல் பண்டுகள், ஜே எல் ஆரில் 6.97%ல் இருந்து, 7.73% ஆக அதிகரித்துள்ளது. இதே வோல்டாஸ் நிறுவனத்தில் 14.10%ல் இருந்து, 15.58% ஆக அதிகரித்துள்ளது. 148 அடிப்படை புள்ளிகள் கடந்த ஆண்டினை காட்டிலும் அதிகரித்துள்ளது. இந்தியன் ஹோட்டல்ஸ் 93 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து, 22.40% ஆக அதிகரித்துள்ளது. இது முன்னதாக 21.47% ஆக இருந்தது.
டைட்டன் & டாடா கன்சியூமர் ப்ராடக்ஸ்
மியூச்சுவல் பண்டுகள் ஜுவல்லரி உற்பத்தியாளரான டைட்டன் நிறுவனத்தில், 52 அடிப்படை புள்ளிகள் முதலீடுகள் அதிகரித்துள்ளது. இதே டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் 9.51%ல் இருந்து, 9.74% ஆக அதிகரித்துள்ளது. இதில் டாடா கன்சியூமர் ப்ராடக்ஸ் நிறுவனத்தில் 12 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து, 5.84% ஆக முதலீடுகள் அதிகரித்துள்ளது. இது முன்னதாக 9.51% ஆக முதலீடு இருந்தது.
டாடா ஸ்டீல் & டிசிஎஸ்
டாடா ஸ்டீல் நிறுவனத்தில் 8.27%ல் இருந்து, 8.35% ஆக முதலீடுகள் அதிகரித்துள்ளது. டாடாவின் டிசிஎஸ் நிறுவனத்தில் 3.39% ஆக இருந்த முதலீடு, 3.32% ஆக இருந்தது.
டாடா குழுமத்தில் உள்ள அதிக மதிப்புடைய நிறுவனங்களில் டிசிஎஸ் இருக்கும். அதனை தொடர்ந்து டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், டைட்டன், டாடா கெமிக்கல்ஸ் நிறுவனங்ககும் அடங்கும்.
டாடா மெட்டாலிக்ஸ்
டாடா கெமிக்கல்ஸ், டாடா காபி, டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப் மற்றும் டாடா டெலிசர்வீசஸ் (மகாராஷ்டிரா) மற்றும் சில டாடா குழும பங்குகள் கடந்த மாதத்தினை காட்டிலும் முதலீடுகளை அதிகரித்துள்ளன.
டாடா மெட்டாலிக்ஸ் நிறுவனத்தில் மியூச்சுவல் நிறுவனத்தில் 183 அடிப்படை புள்ளிகள் குறைந்து, 6.81% ஆக குறைந்துள்ளது. இது 8.63% ஆக குறைந்துள்ளது.
டாடா பவர் & டாடா எல்க்ஸி
டாடா பவர் நிறுவனத்தில் மியூச்சுவல் பண்டுகள் 39 அடிப்படை புள்ளிகள் குறைந்து, 3.70% ஆக முதலீடு குறைந்துள்ளது. இது முன்னதாக 4.10% ஆக இருந்தது.
இதே டாடா எல்க்ஸி நிறுவனத்தில் 13 அடிப்படை புள்ளிகள் குறைந்தும், ட்ரெண்ட் நிறுவனத்தில் 0.01% குறைந்தும் சரிவினைக் கண்டுள்ளன.
ஏன் வாங்கலாம்?
பொதுவாக மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் தங்களது போர்ட்போலியோவில் சேர்க்கும் பங்குகள், முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய பங்குகளாக உள்ளன. பெரும்பாலும் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் நிபுணர்களை வைத்து ஆராய்ந்து, அதன் பின்னரே வாங்கி வைக்கின்றன. பெரும்பாலும் இப்பங்குகள் நீண்டகால நோக்கில் நல்ல லாபம் ஈட்டலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. ஆக இப்பங்குகள் முதலீட்டாளர்களால் உன்னிப்பாக கவனிக்கப்படுகின்றன.
அதிகரிக்கலாம்
குறிப்பாக டாடா குழும பங்குகள் சிலவை நீண்டகால நோக்கில் ஏற்றம் காணலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். இதுவும் டாடா குழும பங்குகளுக்கு ஆதரவாக அமையலாம்.


Click it and Unblock the Notifications