டாடா குழுமம் தனது ஈகாமர்ஸ் வர்த்தகத் தாகத்தைத் தீர்த்துக்கொள்ளவும் வேகமாக இத்துறை வர்த்தகத்தில் வளர வேண்டும் என்பதற்காகச் சந்தையில் முன்னணி நிறுவனங்களைக் கைப்பற்றித் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்து மளிகை பொருட்கள் விற்பனைக்காகப் பிக் பேஸ்கட் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்நிலையில் கொரோனா காலத்தில் நாட்டின் முக்கிய வர்த்தகத் தளமாக மாறியுள்ள ஆன்லைன் மருத்து விற்பனை துறையில் டாடா குழுமம் இறங்க முடிவு செய்துள்ளது. ஜியோ நெட்மெட்ஸ் நிறுவனத்தைக் கைபற்றித் தனது ஆன்லைன் பார்மா வர்த்தகத்தை விரிவாக்கம் செய்தது போல் டாடா குழுமம் தற்போது 1MG நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்திய ஈகாமர்ஸ் வர்த்தகத்தில் அமேசான், ஜியோமார்ட், பிளிப்கார்ட் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் இந்நிறுவனங்களுக்குப் போட்டியாக டாடா களத்தில் இறங்கி மிகப்பெரிய அளவிலான மாற்றத்தைக் கொண்டு வரப் போகிறது.
முக்கியப் பேச்சுவார்த்தை
டாடா குரூப், தற்போது ஆன்லைன் பார்மஸி நிறுவனமான 1MG நிறுவனத்தில் பெரிய அளவிலான பங்குகளைக் கைப்பற்றி இந்நிறுவனத்தின் நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்த முடிவு செய்துள்ளது.
இந்நிறுவனப் பங்குகளைக் கைப்பற்றுவதன் மூலம் 1MG நிறுவனத்தின் ஆன்ஸைன் பார்மஸி வர்த்தகத்தை டாடா உருவாக்கும் புதிய சூப்பர் ஆப் மற்றும் ஈகாமர்ஸ் தளத்தில் இணைக்க வாய்ப்பு உண்டு.
இந்தியச் சந்தை
டாடா குரூப் மற்றும் 1MG நிறுவனங்கள் மத்தியிலான பேச்சுவார்த்தை உறுதியாகும் பட்சத்தில் இந்திய ஈ-பார்மஸி புதிய பரிமான வளர்ச்சியை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காரணம் இதே துறையில் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் வர்த்தக விரிவாக்கம் செய்யும் முடிவில் உள்ளது.
ரிலையன்ஸ் ரீடைல்
சமீபத்தில் ரிலையன்ஸ் ரீடைல் தனது ஜியோமார்ட் தளத்திலும், புதிதாக உருவாக்கப்படும் ஜியோ சூப்பர் ஆப்-ல் ஆன்லைன் மருத்து விற்பனை சேவையை அளிப்பதற்காகப் புதிதாக நிறுவனத்தை உருவாக்காமல் ஏற்கனவே இப்பிரிவில் சிறந்து விளங்கும் நெட்மெட்ஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனமான Vitalic நிறுவனத்தில் சுமார் 60 சதவீத பங்குகளை 620 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
1MG நிறுவனம்
சிகோயா கேப்பிடல் முதலீட்டில் இயங்கும் 1MG நிறுவனம் இதுவரை 100 மில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை ஈட்டியுள்ளது. டாடா குழுமம் இந்நிறுவன பங்குகளைக் கைப்பற்றினாலும், இந்நிறுவனத்தின் நிர்வாகம் மற்றும் வர்த்தக மேலாண்மை அனைத்தும் 1MG நிறுவனத்தின் கையில் தான் இருக்கும்படி தான் டாடா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அமேசான்
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடைல் - நெட்மெட்ஸ் 620 கோடி ரூபாய் ஒப்பந்தத்திற்கு அமேசானும் கிளவுட்டெயில் நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்து தனது அமேசான் ஈகாமர்ஸ் தளத்தில் ஈ-பார்ஸி வர்த்தகத்தைத் துவங்கியுள்ளது.
Cloudtail நிறுவனத்தில் அமேசான் சுமார் 24 சதவீத பங்குகளை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications