என்னதான் இன்றைய காலகட்டத்தில் பல முதலீடுகள் இருந்தாலும், மக்கள் மத்தியில் தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட்களுக்கு இருக்கும் மவுசு என்பது மிக அதிகம்.
அதிலும் இன்றைய காலகட்டத்தில் பலரும் தங்கத்தில் முதலீடு செய்வது, தேவைப்படும்போது விற்கவும், தேவைப்படும் போது வாங்கிக் கொள்ளலாம் என்று தான். இது பல காலங்களாக உள்ள ஒரு பழக்கம் என்றே கூறலாம்.
ஆனால் அப்படி வாங்கும்போதும், விற்கும் போதும் நீங்கள் எவ்வளவு வரி செலுத்துகிறீர்கள் தெரியுமா?
Array
பொதுவாக ரியல் எஸ்டேட் முதலீடுகளில் கடந்த சில ஆண்டுகளில் பெரிய அளவிலான லாபம் இல்லை. மறுபுறம் தங்கம் கடந்த ஆண்டில் லாபம் கொடுத்திருந்தாலும், நீண்டகால நோக்கில் அதே அளவிலான லாபம் கொடுக்குமா என்ற கேள்விக்குறியும் உள்ளது. ஆக இன்றைய காலகட்டத்தில் தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் என்பது சொந்த பயன்பாட்டிற்காக வைத்திருப்பதை தவிர, அதிக முதலீடு நல்ல வருவாயை கொடுக்கலாம் என்பது தவறானது.
தங்கம் மீதான வரிகள்
அதோடு இந்த இரு முதலீடுகளிலும் நீங்கள் முதலீடு செய்யும் போது குறுகிய கால மற்றும் நீண்டகால மூலதன வரிகள் உள்ளன. அவற்றை பார்த்து முதலீடு செய்யலாம். தங்கத்திற்கு குறுகிய கால நீண்டகால மூலதன ஆதாய வரி கணக்கிடப்படுகிறது. நீங்கள் தங்கத்தினை வாங்கி மூன்றாண்டுகளுக்குள் விற்கப்பட்டால் அது குறுகிய காலமாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இது உங்களுக்கு பொருந்தக்கூடிய வரி அடுக்கின் படி வரி விதிக்கப்படும்.
ஒரு வேளை மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தங்கத்தினை விற்றால், அது நீண்டகாலமாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதற்காக உங்களுக்கு 20.8 சதவீதம் வரி விதிக்கப்படும்.
தங்க பத்திரம் மீதான வரிகள்
தங்க பத்திரத்தில் திட்டத்தில் முதலீடு செய்து 8 வருடங்கள் முதிர்வடையும் வரை காத்திருந்தால், நீண்டகால மூலதன ஆதாய வரி இல்லை.
ஒரு வேளை உங்களால் எட்டு வருடம் வரை நீடிக்க முடியவில்லை என்றால் நீங்கள் உங்கள் தங்கப் பத்திரத்தை எக்ஸ்சேஞ்சில் விற்றுக் கொள்ளலாம் (அல்லது) குறைந்தது ஐந்து வருடம் தாண்டினால் உங்கள் தங்கப் பத்திரத்தை நீங்கள் பணமாக மாற்றலாம். ஆனால் இந்த இரண்டிலும் மூலதன நீண்டகால ஆதாய வரியாக 20.8% செலுத்த வேண்டியிருக்கும். .
இதே குறுகிய கால மூலதன ஆதாய வரியாக நீங்கள் தங்க பத்திரத்தினை வாங்கி மூன்றாண்டுகளுக்குள் விற்கப்பட்டால், அது குறுகிய காலமாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இது உங்களுக்கு பொருந்தக்கூடிய வரி அடுக்கின் படி வரி விதிக்கப்படும்.
வட்டி வருவாய்க்கும் வரி உண்டு?
இந்த தங்க பத்திரங்களுக்கு வருடத்திற்கு 2.5 சதவீத வட்டி விகிதம் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும். இந்த வட்டி உங்கள் வருமானமாக சேர்க்கப்பட்டு, அதற்கு நீங்கள் வருமான வரியும் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், இதில் குறிப்பிடப்படவேண்டிய விஷயம் என்னவெனில், வட்டி வருவாயில் டிடிஎஸ் விதிக்கப்படுவதில்லை.
ரியல் எஸ்டேட் மீதான வரிகள்
ரியல் எஸ்டேட் துறையினை பொறுத்தவரையில், நீங்கள் முதலீடு செய்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டால், அது நீண்டகால முதலீடாக எடுத்துக் கொள்ளப்படும்.
ரியல் எஸ்டேட் முதலீட்டில் குறுகிய கால முதலீட்டிற்கு உங்களுக்கு பொருந்தக்கூடிய வரி அடுக்கின் படி வரி விதிக்கப்படும். இதே நீண்டகால மூலதன ஆதாய வரியாக 20.8% செலுத்த வேண்டியிருக்கும்.
More From GoodReturns

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

பெங்களூருவில் வீடு வாங்கி லாபம் பார்க்கணுமா? இந்த ஏரியால தான் செம வளர்ச்சி!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!



Click it and Unblock the Notifications