பங்குச் சந்தையில் முதலீடு செய்வதும் பிசினஸில் முதலீடு செய்வது போன்றது. கடையை திறந்து காத்திருந்தால்தான் வாடிக்கையாளர்கள் வருவார்கள் அதுபோல், பங்குகளில் முதலீடு செய்து விட்டு பொறுமையாக இருந்தால்தான் லாபம் பார்க்க முடியும். பங்குச் சந்தையில் பெரிய அளவில் லாபம் அல்லது ஆதாயம் பார்க்க வேண்டுமானால் நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்தால் மட்டுமே சாத்தியமாகும்.
சரியான பங்குகளை தேர்வு செய்து, அதில் முதலீடு செய்து விட்டு பொறுமையாக இருந்தால், நிச்சயம் நம் செல்வம் எதிர்பார்த்ததை காட்டிலும் பெரிய அளவில் பெருகும். அதற்கு நல்ல உதாரணம் டிசிபிஎல் பேக்கேஜிங் பங்குகளை சொல்லலாம்.

1987ல் தொடங்கப்பட்ட டிசிபிஎல் பேக்கேஜிங் லிமிடெட் நிறுவனம் காகித அட்டை அடிப்படையிலான பேக்கேஜிங் பொருட்கள் மற்றும் நெகிழ்வான பேக்கேஜிங் தயாரிப்புகள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. பல்வேறு துறைகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு நிலையான பேக்கேஜிங் தீர்வுகளை வழங்கும் முன்னணி உற்பத்தியாளர்களில் ஒருவர்.
மேலும் இந்தியாவின் மிகப்பெரிய மடிப்பு அட்டைப்பெட்டி தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனம் தொடர்ந்து லாபம் ஈட்டி வருகிறது மற்றும் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்து வருகிறது. இதனால் இந்நிறுவன பங்குக்கு முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு காணப்படுகிறது.
2023-24ம் நிதியாண்டில் டிசிபிஎல் பேக்கேஜிங் லிமிடெட் நிறுவனம் வருவாயாக ரூ.1,458.21 கோடி ஈட்டியுள்ளது. மேலும் அந்த நிதியாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.106.54 கோடி ஈட்டியுள்ளது. மேலும் 2024 செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனம் வருவாயாக ரூ.431.64 கோடியும், நிகர லாபமாக ரூ.35.81 கோடியும் ஈட்டியுள்ளது. கடந்த டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனம் வருவாயாக ரூ.457.60 கோடியும், நிகர லாபமாக ரூ.38.21 கோடியும் ஈட்டியிருந்தது. கடந்த வர்த்தக தினத்தில் மும்பை பங்குச் சந்தையில் டிசிபிஎல் பேக்கேஜிங் லிமிடெட் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.93 சதவீதம் உயர்ந்து ரூ.4,364.85ஆக இருந்தது.
நீண்ட கால அடிப்படையில் டிசிபிஎல் பேக்கேஜிங் லிமிடெட் நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளது. உதாரணமாக கடந்த 22 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கின் விலை 545 மடங்கு உயர்ந்துள்ளது. 2002 மார்ச் 13ம் தேதியன்று பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் ரூ.7.95ஆக இருந்த இந்நிறுவன பங்கின் விலை தற்போது ரூ.4,364 என்ற அளவில் அதிகரித்துள்ளது. கடந்த 22 ஆண்டுகளுக்கு முன் ஒருவர் இந்நிறுவன பங்கில் முதலீடு செய்து இருந்தால் இது இன்று ரூ.5.45 கோடியாக பெருகியிருக்கும். கடந்த பத்து ஆண்டுகளில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு 1,000 சதவீதம் ஆதாயம் கொடுத்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இப்பங்கின் விலை 2,200 சதவீதம் உயர்ந்துள்ளது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications