ரூ. 8,000 கோடி லாபத்தில் டிசிஎஸ்.. முதலீட்டாளர்களுக்கு ரூ.1,622 கோடி ஈவுத்தொகை..!

இந்திய ஐடி துறையின் தலைவனாக வளம் வரும் டாடா குழுமத்தின் ஐடி சேவை நிறுவனம் டிசிஸ் மார்ச் காலாண்டில் மட்டும் சுமார் 8,049 கோடி ரூபாய் லாபத்தை பெற்று அசத்தியுள்ளது. ஆனால் சந்தை கணிப்புகளையும், கடந்த நிதியாண்டில் இதேகாலட்டத்தை ஒப்பிடுகையில் டிசிஎஸ் பெற்றுள்ள இந்த லாபத்தின் அளவு குறைவு என்பதால் முதலீட்டாளர்களுக்கு இது ஏமாற்றத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளையில் முதலீட்டாளர்களை குஷிப்படுத்தும் வகையில் சுமார் 1,622 கோடி ரூபாய் மதிப்பிலான ஈவுத்தொகை கொடுத்து உள்ளது டிசிஎஸ் நிர்வாகம்.

 லாபம்

லாபம்

மார்ச் காலாண்டில் டிசிஎஸ் நிறுவனம் 8,216 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை அடையும் என்று சந்தை கணிப்புகள் வெளியாகியிருந்தது. கொரோனா பாதிக்கப்பட்ட இந்த நேரத்தில் டிசிஎஸ் கணிப்புகளை ஈடுசெய்யுமா என்ற சந்தேகம் முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்தது.

இந்நிலையில் டிசிஎஸ் தற்போது பெற்றுள்ள 8,049 கோடி ரூபாய் லாப அளவு கடந்த நிதியாண்டின் மார்ச் காலாண்டை விடவும் 0.94 சதவீத குறைவாகும்.

 

வருவாய்

வருவாய்

மார்ச் காலாண்டில் டிசிஎஸ் நிறுவனம் 8,216 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை அடையும் என்று சந்தை கணிப்புகள் வெளியாகியிருந்தது. கொரோனா பாதிக்கப்பட்ட இந்த நேரத்தில் டிசிஎஸ் கணிப்புகளை ஈடுசெய்யுமா என்ற சந்தேகம் முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்தது.

இந்நிலையில் டிசிஎஸ் தற்போது பெற்றுள்ள 8,049 கோடி ரூபாய் லாப அளவு கடந்த நிதியாண்டின் மார்ச் காலாண்டை விடவும் 0.94 சதவீத குறைவாகும்.

 

வருவாய்

வருவாய்

2020 மார்ச் காலாண்டில் டிசிஎஸ் சுமார் 39,946 கோடி ரூபாய் அளவிலான வருவாய் பெற்று இருந்தது. இது கடந்த நிதியாண்டை விடவும் 5 சதவீத அதிகமாகும்.

இதேபோல் ஒரு பங்கிற்கு 6 ரூபாய் வீதம் முதலீட்டாளர்களுக்கு சுமார் 1,622 கோடி ரூபாய் அளவிலான இறுதி ஈவுத்தொகையை (final dividend) கொடுத்துள்ளது. கொரோனா பாதிப்பால் வெளிநாட்டு வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் டிசிஎஸ் நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு சாதகமான முடிவை எடுத்துள்ளது.

 

டாடா சன்ஸ்

டாடா சன்ஸ்

மார்ச் மாத துவக்கத்தில் டிசிஎஸ் interim dividendஆக ஒரு பங்கிற்கு 12 ரூபாய் கொடுப்பதாக அறிவித்தது, தற்போது final dividendஆக ஒரு பங்கிற்கு 6 ரூபாய் என மொத்தம் 18 ரூபாய் பெற வீதிம் சுமார் 4,866 கோடி ரூபாய் அளவிலான ஈவுத்தொகையை டிசிஎஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் பெற உள்ளது.

டிசிஎஸ் நிறுவனத்தில் சுமார் 72 சதவீத பங்குகளை டாடா சன்ஸ் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

மொத்த வருமானம்

மொத்த வருமானம்

2020 மார்ச் காலாண்டில் டிசிஎஸ் 80,490 கோடி ரூபாயை வருமானமாக பெற்றது, இதுவே கடந்த நிதியாண்டில் 81,260 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஒரு பங்கிற்கான வருமானம் கடந்த நிதியாண்டின் மார்ச் காலாண்டில் இருந்த 21.65 ரூபாயில் இருந்து தற்போது 21.45 ரூபாயாக குறைந்துள்ளது.

 

மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை

மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை

மார்ச் மாத முடிவில் டிசிஎஸ் நிறுவனத்தில் சுமார் 4,48,464 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள், இதில் 36.2 சதவீத ஊழியர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+