டாடா குழுமத்திற்கு சொந்தமான டிசிஎஸ் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. டிசிஎஸ் நிறுவனத்தின் நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமாகவே இந்திய ஐடி துறையிலேயே தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது . அந்த வகையில் டிசிஎஸ் நிறுவனம் ஒரு முக்கியமான அறிவிப்பை தற்போது வெளியிட்டு இருக்கிறது .
2025- 26 ஆம் நிதியாண்டுக்கான ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலாண்டு நிதி முடிவுகளை வெளியிடுவதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது டிசிஎஸ். அக்டோபர் 9ஆம் தேதி நிறுவனத்தின் காலாண்டு வாரிய குழு கூட்டம் நடைபெறும் என்றும் அதே நாளில் நிதி முடிவுகள் வெளியாகும் என்றும் டிசிஎஸ் நிறுவனம் கூறியுள்ளது.

இது தொடர்பாக மும்பை பங்குச்சந்தையில் தாக்கல் செய்திருக்கு, ஆவணத்தில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தின் வாரிய குழு உறுப்பினர்கள் கூட்டம் வரும் அக்டோபர் 9ஆம் தேதி நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என கூறி இருக்கிறது. இதே நாளில் நிறுவனத்தின் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலாண்டு நிதி முடிவுகள் ஆய்வு செய்யப்பட்டு அதே நாளில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டுக்கான இரண்டாவது இடைக்கால ஈவுத்தொகை தொடர்பான அறிவிப்பும் இந்த கூட்டத்தின் முடிவில் வெளியிடப்படும் என்று டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. டிசிஎஸ் நிறுவனத்தை பொருத்தவரை முதலீட்டாளர்களுக்கு எவ்வளவு தொகை ஈவுத்தொகையாக கிடைக்கும் என்ற தகவலை அக்டோபர் 9ஆம் தேதி வெளியிட உள்ளது.
ஈவுத்தொகை பெறுவதற்கான ரெக்கார்ட் தேதியாக அக்டோபர் 15ஆம் தேதி இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டுக்கு டிசிஎஸ் நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்குக்கு 11 ரூபாயை இடைக்கால ஈவுத் தொகையாக வழங்கியிருந்தது. இந்த முறை எவ்வளவு வழங்கும் என்று எதிர்பார்ப்பு முதலீட்டாளர்கள் மத்தியில் இருக்கிறது.
நடப்பாண்டின் முதல் காலாண்டில் அதன் நிகர லாபம் 4.38% என உயர்ந்திருந்தது. டிசிஎஸ் நிறுவன சந்தை மூலதன மதிப்பு தற்போதைக்கு 11.12 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. டிசிஎஸ் நிறுவனத்தை பொருத்தவரை செப்டம்பர் 24ஆம் தேதி ஆன இன்று ஒரு பங்கின் மதிப்பு 3 ,036 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது.
டிசிஎஸ் நிறுவன பங்கு இந்த ஆண்டு முதலீட்டாளர்களுக்கு பெரிய அளவில் லாபத்தை ஈட்டி தரவில்லை . கடந்த ஓராண்டு காலமாக இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு சுமார் 28% வரை சரிவடைந்து இருக்கிறது. ஐடி துறை மந்த நிலை , அமெரிக்க அதிபர் டிரம்பின் விசா கெடுபிடிகள் , வரி விகிதங்கள், டாலர் மதிப்பு , ஏஐ வருகை என பல சவால்களுக்கு மத்தியிலும் இந்த காலாண்டு முடிவு வெளியாக உள்ளது. குறிப்பாக டிசிஎஸ் 2% ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவிப்பு வெளியான பின்னர் அந்நிறுவன நடவடிக்கைகல் மோசமாகி விட்டது என ஊழியர்களே புகார் கூறும் நிலையில் நிறுவனத்தின் மீதான நன்மதிப்பு சற்றே குறைந்துவிட்டது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!



Click it and Unblock the Notifications