ஒவ்வொருவரின் வாழ்க்கையை மாற்றியதில் பெரும் பங்கு ஆசிரியர்களுக்கு உண்டு, வாழ்வில் பெரும் பகுதி நேரத்தை வீட்டை தாண்டி பள்ளி கல்லூரிகளில் தான் அனைவரும் செலவிடுகிறோம். இதனால் ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் ஆசிரியர்களின் பங்கீடு மிகவும் முக்கியமானது.
இத்தகைய பெருமைமிக்க ஆசிரியர்களை அனைத்து தரப்பு மக்களும் கொண்டாட வேண்டும் என்ற காரணத்திற்காக மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரும், ஆசிரியருமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் தேசிய ஆசிரியர் தினமாக இந்தியா கொண்டாடி வருகிறது.

ஆசிரியர்களின் வாழ்க்கை, பணிகள் கடந்த 20 - 25 வருடத்தில் பல வகையில் மாறியிருந்தாலும், அவர்களின் கடமை என்னவோ ஒன்று தான். அனைத்து மாணவர்களையும் கல்வியிலும், ஒழுக்கத்திலும் மேம்பட்டவர்களாக மெருகேற்ற வேண்டும் என்பது தான். இதை ஆசிரியராகவும் இருந்தும் செய்யலாம், சிஇஓ-வாக இருந்தும் செய்ய முடியும் என பலர் நிரூபித்துக்காட்டியுள்ளனர்.
ஆம், ஆசிரியராக இருந்து ஒரு நிறுவனத்தின் சிஇஓவாக இருந்து தொடர்ந்து கல்வி மற்றும் கல்வி துறையில் பெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய 5 பேரை பற்றிதான் இப்போது பார்க்கப்போகிறோம்.
1981 இல் கேரளாவில் பிறந்த பைஜூ ரவீந்தரன் ஆரம்பத்தில் கப்பலில் பணிபுரிந்தார், ஆனால் கல்வித்துறையில் அவருக்கு இருந்த ஆர்வம் காரணமாக 2003 இல் பள்ளி ஆசிரியரானார். இதை தொடர்ந்து 2007 இல், ஆன்லைன் கல்வி துறையில் ஏற்பட்ட புரட்சியில் தனக்கான அடித்தளத்தை பைஜூஸ் நிறுவனத்தின் மூலம் அமைத்தார்.
கடந்த 15 வருடத்தில் பைஜூஸ் முன்னணி ஆன்லைன் கல்வி நிறுவனமாக உயர்ந்துள்ளது. பைஜூஸ் கேட், ஜேஇஇ மெயின்ஸ் மற்றும் ஐஐடி போன்ற தேர்வுகளுக்கான வீடியோ டுடோரியல்கள் மற்றும் கன்டென்ட் வழங்குவது மட்டும் அல்லாமல் பள்ளி கல்வியில் அனைத்து வகுப்புகளுக்கும் இன்டிராக்ட்டிவ் கல்வி சேவைகளை வழங்கும் நிறுவனமாக உள்ளது.
பைஜூஸ் நிறுவனம் 2015 இல் குறிப்பிடத்தக்க அளவிலான முதலீட்டை பெற்று 20 பில்லியன் டாலருக்கும் அதிகப்படியான மதிப்பீட்டை பெற்ற நிறுவனமாக உயர்ந்தது. கொரோனா காலத்தில் பைஜூஸ் மிகப்பெரிய அளவிலான வர்த்தகத்தை பெற்றது. ஆனால் அதன் பின்பு பெரும் வீழ்ச்சியை சந்தித்தாலும் இன்று வரையில் பைஜூ ரவீந்தரன் பில்லியனராக தான் உள்ளார்.
ஐஐடி கான்பூரில் இயற்பியல் படித்து வந்த அலக் பான்டே 3வது ஆண்டில் கல்லூரியை விட்டு வெளியேறி ஆசிரியர் ஆனார். 2014ல் யூடியூப் சேனல் துவங்கி பல லட்சம் பேருக்கு இயற்பியல் பாடம் நடத்தியது மூலம் பிரபலமானார்.
இந்த வெற்றியை தொடர்ந்து 2017ல் Physics Wallah என்னும் நிறுவனத்தை துவங்கி 1 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை பெற்று இன்று பல ஆயிரம் கோடி மதிப்பிலான நிறுவனத்திற்கு உரிமையாளராக இருப்பது மட்டும் அல்லாமல் 2022ல் பத்மஸ்ரீ விருதை பெற்றார்.
IAS தேர்வில் வெற்றிப்பெற்று ஆசிரியரான விகாஸ் திவ்யகீர்த்தி UPSC தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு தனி டிஜிட்டல் சேவை தளத்தை உருவாக முடிவு செய்தார். மேலும் ஹிந்தி மொழியில் பாடம் நடத்த முடிவு செய்து Drishti IAS Coaching-ஐ துவங்கிய அவர் பெரும் வெற்றியை கண்டார்.
இப்படி ஆசிரியராக இருந்து தற்போது ஒரு நிறுவனத்திற்கு சிஇஓவாக உயர்ந்தது மட்டும் அல்லாமல் பல ஆயிரம் கோடிக்கு அதிபதியாகியுள்ளனர்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications