ஹைதராபாத்:தெலங்கானாவில் அம்மாநில சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 30ம் தேதியன்று ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. எதிர்வரும் தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில், முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.), பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே நிலவும் மும்முனை போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2014ல் ஆந்திராவிலிருந்து பிரிக்கப்பட்டு தெலங்கானா மாநிலம் உருவானது. அது முதல் அம்மாநிலத்தில் முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் கே.சந்திரசேகர் தலைமையிலான அரசு, தற்போது வேலையின்மை மற்றும் பணவீக்கத்துக்கு எதிராக போராடி வருகிறது.
அதேசமயம், நிதி நிலவரம், போன்றவற்றில் மாநிலம் சிறப்பாக உள்ளது. தெலங்கானாவின் பொருளாதார சூழல் எப்படி இருக்கிறது என்பதை நாம் பார்க்கலாம்.
பொருளாதார வளர்ச்சி: கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து கடந்த 2021-22ம் நிதியாண்டில் நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் மாநிலமாக தெலங்கானா இருந்தது. அந்த நிதியாண்டில் தெலங்கானாவின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) வளர்ச்சி 11.97 சதவீதமாக இருந்தது. ஆனால் அடுத்த 2022-23ம் நிதியாண்டில் தெலங்கானாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.76 சதவீதமாக குறைந்தது. பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பியதே காரணம். மேலும், கொரேனாவுக்கு முந்தைய ஆண்டுகளை காட்டிலும் கடந்த நிதியாண்டில் தெலங்கானாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது.
நிதிப்பற்றாக்குறை: அரசின் கடன் அல்லாத வருவாய்க்கும், செலவுக்கும் இடையிலான வித்தியாசம் நிதிப் பற்றாக்குறையாகும். கடந்த சில ஆண்டுகளாக தெலங்கான அரசு நிதிப் பற்றாக்குறை தொடர்ந்து குறைத்து வருகிறது. இது நல்ல விஷயமாகும். 2021-22ம் நிதியாண்டில் தெலங்கானாவின் நிதிப் பற்றாக்குறை 4.06 சதவீதமாக இருந்தது. 2022-23ம் நிதியாண்டில் தெலங்கானாவின் நிதிப் பற்றாக்குறை 3.21 சதவீதமாக குறைந்தது. நடப்பு 2023-24ம் நிதியாண்டில் தெலங்கானாவின் நிதிப் பற்றாக்குறை 2.7 சதவீதமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேலையின்மை: தெலங்கானாவின் வேலையின்மை விகிதம் நாட்டின் சராசரி வேலையின்மை விகிதத்தை காட்டிலும் அதிகமாக உள்ளது. 2022-23 நிதியாண்டு கால தொழிலாளர் போர்ஸ் கணக்கெடுப்பு புள்ளிவிவரத்தின்படி, தெலங்கானாவின் வேலையின்மை விகிதம் 4.4 சதவீதமாக உள்ளது. அதேசமயம் நாட்டின் சராசரி வேலையின்மை விகிதம் 3.2 சதவீதம் மட்டுமே.
வறுமை: தெலங்கானாவில் மொத்த மக்கள் தொகையில் 5.88 சதவீதம் பேர் மட்டுமே பல பரிமாண வறுமையின் கீழ் வாழ்கின்றனர். இது தேசிய சராசரியான 14.96 சதவீதத்தை காட்டிலும் மிக குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
தனிநபர் வருவாய்: தெலங்கானாவின் தனிநபர் வருவாய் தேசிய சராசரியை காட்டிலும் அதிகமாகும். 2021-22ம் நிதியாண்டில் தெலங்கானாவின் தனிநபர் வருமானம் ரூ.1.58 லட்சமாக இருந்தது. அதேசமயம் நாட்டின் சராசரி தனிநபர் வருமானம் ரூ.91,481 மட்டுமே.
பணவீக்கம்: தெலங்கானாவில் பணவீக்கம் தேசிய சராசரியை காட்டிலும் அதிகமாகவே உள்ளது. 2020-21ம் நிதியாண்டில் தெலங்கானாவில் பணவீக்கம் 8.7 சதவீதமாக இருந்தது. அதேசமயம் அந்த நிதியாண்டில் நாட்டின் சராசரி பணவீக்கம் 6.2 சதவீதம்தான். 2021-22ம் நிதியாண்டில் தேசிய பணவீக்கம் சராசரி 5.5 சதவீதமாக இருந்தது அப்போது தெலங்கானாவின் பணவீக்கம் 6.4 சதவீதமாக இருந்தது.
சேவைகள் துறை: தெலங்கானா பொருளாதாரத்துக்கு அச்சாணியாக சேவைத் துறை உள்ளது. கடந்த 2022-23ம் நிதியாண்டில் அம்மாநிலத்தின் சேவைகள் துறை 9.3 சதவீதம் வளர்ச்சி கண்டது. அதேசமயம், விவசாயம் மற்றும் உற்பத்தி துறைகள் முறையே 3.4 சதவீதம் மற்றும் 2.22 சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டன.
அன்னிய நேரடி முதலீடு: அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில் தெலங்கானா சிறப்பாக செயல்பட்டுள்ளது. 2019 அக்டோபர் முதல் 2023 ஜூன் வரையிலான காலத்தில் தெலங்கானா மாநிலம் 557.6 கோடி டாலரை அன்னிய நேரடி முதலீடாக ஈர்த்துள்ளது. 2019 முதல் நாட்டில் அன்னிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதில் தெலங்கானா 7வது இடத்தில் இருந்து வருகிறது.
ஸ்டார்ட்அப்: நாட்டில் அதிகம் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உள்ள மாநிலங்களில் தெலங்கானா எட்டாவது இடத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் மொத்தம் 4,426 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உள்ளன. அந்நிறுவனங்கள் 49,766 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குகின்றன. தெலங்கானா அரசு தனது ஸ்டார்ட்அப் அமைப்பை ஊக்குவிப்பதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
மொபைல் இணைப்பு: டிஜிட்டல் பயன்பாட்டில் தெலங்கானா மாநிலம் முன்னணியில் உள்ளது. அம்மாநிலத்தில் 3.31 கோடி போர் மொபைல் இணைப்பு பெற்றுள்ளனர். மாநிலத்தின் தொலைதொடர்பு அடர்த்தி 86.66 சதவீதமாக உள்ளது. அதாவது நூறு மக்களில் 86.66 பேர் தொலைத்தொடர்பு சேவையை பயன்படுத்துகின்றனர். இது தேசிய சராசரியான 63.53 சதவீதத்தை காட்டிலும் அதிகம்.
மத்திய அரசின் திட்டங்கள்: தெலங்கானாவில் 1.13 கோடிக்கும் அதிகமான மக்கள் வங்கிகளில் ஜன்தன் கணக்குகளை தொடங்கியுள்ளனர். அதாவது அம்மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 32.55 சதவீதம் பேர் பிரதமர் மந்திரி ஜன்தன் யோஜானா திட்டத்தின் கீழ், வங்கி கணக்கை தொடங்கினர்.
பிரதமர் மந்திரி உஜ்வாலா திட்டத்தின் மூலம் தெலங்கானாவில் 11.5 லட்சம் பயனாளிகள சமையல் எரிவாயு இணைப்பை பெற்றுள்னர். இது மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 3.29 சதவீதமாகும்.

மாநில அரசின் திட்டங்கள்: தெலங்கானா அரசின் கல்யாண லெட்சுமி திட்டத்தின்கீழ், பெண்ணின் திருமண செலவுக்காக மணமகளின் தாயின் வங்கி கணக்குக்கு ரூ.1,00,116 செலுத்தப்படும். பெண் வீட்டின் ஆண்டு குடும்ப வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருந்தால் மட்டுமே இந்த திட்டத்தின் பலனை பெற முடியும்.
ரைத்து பந்து திட்டத்தின்கீழ், பயிர்கள் நடவு நடக்கும் பருவமழையின்போது விவசாயிகளுக்கு உதவும் வகையில், ஒரு ஏக்கர் நிலத்துக்கு ரூ.5 ஆயிரம் அவர்களது வங்கி கணக்கில் மாநில அரசு செலுத்தும். இந்த திட்டத்தின்கீழ், 58 லட்சம் விவசாயிகள் பயன் பெறுகின்றனர். வேலைவாய்ப்பின்மை விவகாரம் ராவுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்றால், அசாதுதீன் ஓவைசி தலைமையிலான ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியும் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் கூறப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications