எகிறியடிக்கும் தங்கம் விலை!. 60வது கிளையை திறக்கும் தங்கமயில்!. எத்தனை சலுகைகள் தரபோறாங்க தெரியுமா?

மதுரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தங்கமயில் நிறுவனம் தமிழகத்தில் 59 கிளைகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. தங்கமயில் ஜுவல்லரி, வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இதனைத் தொடர்ந்து வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கும் வகையில், தனது 60வது கிளையை சென்னையில் இன்று தொடங்கியுள்ளது தங்கமயில் ஜுவல்லரி, .

தங்கத்தையும் இந்தியர்களையும் பிரிக்கவே முடியாது. அதிக அளவில் தங்கத்தை வாங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முக்கிய இடத்தில் உள்ளது. அதிலும் தமிழ்நாட்டில் தங்கத்தின் நுகர்வு மிக அதிகம். தங்கத்தை ஆபரணமாக மட்டும் பார்க்காமல், சிறந்த முதலீடாகவும் பலரும் பார்க்கின்றனர். அதனால் தங்கத்தை வாங்குவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனடிப்படையில், வைர மற்றும் தங்க நகைத் துறையில் மிட்கேப் நிறுவனமாக தங்கமயில் ஜூவல்லரி விளங்கி வருகிறது.

எகிறியடிக்கும் தங்கம் விலை!. 60வது கிளையை திறக்கும் தங்கமயில்!. எத்தனை சலுகைகள் தரபோறாங்க தெரியுமா?

தங்கம் விலை உயர்ந்தாலும் தங்கத்தின் மீதான மோகம் மக்களிடையே குறையவில்லை. அந்தவகையில், தங்கமயில் ஜுவல்லரி நிறுவனம், பல்வேறு திட்டங்களை வகுத்து, அதிரடி சலுகைகள் உள்ளிட்டவைகளை அவ்வப்போது அறிவித்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. இந்த நிறுவனம் அறிவித்த சலுகைகளில் ஒன்றான தங்கமயில் "DIGI GOLD" திட்டத்திற்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. இந்தநிலையில் மேலும் ஒரு புதிய முயற்சியாக தனது 60வது கிளையை சென்னை உஸ்மான் சாலையில், தொடங்கவுள்ளது தங்கமயில் ஜுவல்லரி.

முதன்முதலாக, கடந்த, 1991ல், மதுரையில் வெறும் 300 சதுர அடியில் முதல் கடை திறக்கப்பட்டது. அதன்படி 33 ஆண்டுகளாக ஜுவல்லரி வர்த்தகத்தில் நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது. தமிழகத்தின் தென் பகுதிகளில் 33 கடைகள் உட்பட, மாநிலம் முழுதும் 23 மாவட்டங்களில், 60 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. இன்றைய 60வது கிளை திறப்பு விழாவை கொண்டாடும் வகையில், 10 கிராம் தங்கத்திற்கு அரை கிராம் தங்க நாணயம் இலவசமாக வழங்கப்படும் என்ற சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தங்கமயில் ஜூவல்லரி நிறுவனத்தின் இணை இயக்குநர் ரமேஷ் உள்ளிட்டோர் கூறுகையில், தென் மாநிலங்களில், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் நிறுவனமாக தங்க மயில் ஜுவல்லரி நிறுவனம் உள்ளது. எங்கள் நிறுவனத்துக்கு, 100 சதவீதம் ஹால்மார்க் தங்க நகைகளை விற்பனை செய்த முதல் நிறுவனம் என்ற பெருமையும் உண்டு. மொத்தம், 2,900 ஊழியர்கள், 30 லட்சம் வாடிக்கையாளர்களை இந்நிறுவனம் வைத்துள்ளது. இதுதவிர, 50,000 ரூபாய்க்கு மேல் நகை வாங்குவோருக்கு, பல்வேறு பரிசு பொருட்களும் வழங்கப்படும். சென்னை மக்களின் எதிர்பார்ப்பை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று கூறியுள்ளனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+