பாரம்பரியப் பொட்டுகளை (Bindis) அலங்காரப் பொருட்களாகவும், மீண்டும் பயன்படுத்தக்கூடிய அழகிய ஆபரணங்களாகவும் மாற்றி, தனித்துவமான ஒரு பயணத்தை மேற்கொண்டுள்ளது பெங்களூருவை தளமாக கொண்ட 'தி பிந்தி ப்ராஜெக்ட்' (The Bindi Project) என்ற நிறுவனம். 2022 டிசம்பரில் தொடங்கப்பட்ட இந்த கைவினை கலைப் பொட்டு பிராண்டின் நிறுவனர் மேக்னா கன்னா, தனது நீண்டகால தொழில் அனுபவத்தை கொண்டு இந்தப் புதிய முயற்சிக்கு புத்துயிர் அளித்துள்ளார்.
புனேயில் மார்கெட்டிங் மற்றும் நிதிப் பிரிவில் MBA பட்டம் பெற்ற மேக்னா, கார்ப்பரேட் உலகில் கால் பதித்தார். இருப்பினும், அந்தப் பணி தனக்கானது அல்ல என்பதை உணர்ந்த அவர், 2001 ஜூலை 4ஆம் தேதி பணியில் சேர்ந்ததாகவும், 2002, ஜூலை 5ஆம் தேதி விலகிவிட்டதாகவும் நான் சொந்தமாகச் சிலவற்றை செய்ய விரும்பியதாகவும் அவர் நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.

கார்ப்பரேட் பணியை விட்டு விலகிய பிறகு, கடந்த 2002 ஆம் ஆண்டு அவர் Levitate என்ற கைவினை நகைத் தொழிலைத் தொடங்கினார். அப்போது தென்னிந்தியாவில் தங்க நகைகள் பிரபலமாக இருந்த நிலையில், மூக்குத்திகள் தயாரிப்பு குறைவாக இருந்ததை கண்டறிந்தார்.
பெங்களூருவில் இருந்து ஜோத்பூருக்கு ரயிலில் பயணம் செய்து, சில கைவினைஞர்களுடன் இணைந்து மூக்குத்திகளை வடிவமைக்கத் தொடங்கினார். 2002 முதல் 2020 ஆண்டு வரை லெவிடேட் ஒரு வெற்றிகரமான பிராண்டாக செயல்பட்ட நிலையில், 2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று காரணமாக அவர் அந்த தொழிலை நிறுத்தினார்.
சுமார் 2022 ஆம் ஆண்டு, மேக்னா தனது பாட்டியின் தங்கப் பொட்டு குறித்து ஒரு நண்பருடன் பேசியபோது, இன்று சந்தையில் உள்ள பொட்டுகள் பெரும்பாலும் எளிமையாகவும், தூக்கி எறியக் கூடியதாகவும் இருப்பதை அவர் கவனித்தார். இதைத் தொடர்ந்து, நாங்கள் 'தி பிந்தி ப்ராஜெக்ட்'-ஐ தொடங்க முடிவு செய்தோம். கைவினைப் பொட்டுகளை ஸ்டேட்மென்ட் பொட்டுகளாக உருவாக்க விரும்பினேன் என்று மேக்னா தெரிவித்துள்ளார்.
2022 டிசம்பரில் வெறும் ரூ. 5 லட்சம் சுயமுதலீட்டில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. 'லெவிடேட்' பிராண்டில் இருந்து எஞ்சியிருந்த உடைந்த நகைப் பாகங்களை வைத்தே ஆரம்பத்தில் வடிவமைப்பு, அலங்காரங்கள் மற்றும் பேக்கேஜிங் ஆகியவற்றை தானே செய்து வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். படைப்பாற்றல், வெளிப்பாடு மற்றும் கலாச்சாரம் ஆகிய 3 தூண்களின் அடிப்படையில் செயல்படும் இந்த பிராண்டின் பொட்டுகள், பாரம்பரிய மற்றும் நவீன உடைகளுடன் அணியும் அளவிற்குப் பல்துறைத் திறன் கொண்டவை என்று அவர் கூறியுள்ளார்.
இந்த பிராண்ட் திருவிழா, துணி மற்றும் சமகாலப் பொட்டுகள் போன்ற பல்வேறு பிரிவுகளில் ஈடுபட்டுள்ளது. அமானி, துர்கா, கல்யாணி, காளி, பௌலோமி, ரூஹானி மற்றும் காமாக்யா போன்ற பாரம்பரியம் நிறைந்த கலெக்ஷன்களை அவர்கள் கொண்டுள்ளனர். மேலும், அதன் ஆரம்பம் முதல் முற்றிலும் அசல் வடிவமைப்புகளை உருவாக்குவதில் உறுதியாக உள்ளது.
தற்போது வரை, 'தி பிந்தி ப்ராஜெக்ட்' இந்தியா முழுவதும் 1,500-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்துள்ளதுடன், கரீனா கபூர், தமன்னா பாட்டியா, சோனம் கபூர் மற்றும் கஜோல் போன்ற பாலிவுட் நடிகைகளையும் கவர்ந்துள்ளது. செயல்பாட்டின் முதல் ஆண்டிலேயே, இந்த பிராண்டின் வருவாய் ரூ. 10 லட்சத்தை தொட்டது. அதைத் தொடர்ந்து, இந்தாண்டு வருவாய் ரூ. 20 லட்சமாக இரட்டிப்பாகியுள்ளது.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!



Click it and Unblock the Notifications