இன்றுள்ள பெண்கள் பலரும் படிக்கும்போதே தொழில் முனைவர்கள் மற்றும் தொழிலதிபர்களாக தங்களை முன்னேற்றி வருகின்றனர். அந்த வரிசையில் குர்கானைச் சேர்ந்த 29 வயதான நீலம் சிங் என்பவர் 40 கோடி வருமானம் ஈட்டும் தொழிலை நடத்தி வருகிறார்.
கல்லூரி காலத்தில் அவர் மனதில் தோன்றிய தொழில்முனைவோர் ஆசை அவரை வெற்றிபெற்ற பெண் தொழிலதிபராக மாற்றியது எப்படி என்ற சுவாரஸ்யமான வெற்றி கதை.
யார் இந்த நீலம் சிங்!
நீலம் சிங் குர்கானில் பிறந்து வளர்ந்தவர். இவர் Dayalbagh Educational Institute பி.காம் படிப்பை முடித்துள்ளார். அதன்பின் ஹைதராபாத்தில் உள்ள ICFAI-யில் (IBS) மார்க்கெட்டிங் துறையில் எம்பிஏ படிப்பை முடித்துள்ளார்.
இவரின் தந்தை ஒரு பள்ளி முதல்வர், அவர் உத்திரபிரதேச மாநிலம், ஆக்ராவைச் சேர்ந்தவர். நீலம் சிங் தனது எம்பிஏ படிப்பை முடித்த உடன் Genpact எனும் நிறுவனத்தில் வரும் 5 லட்சம் சம்பளத்திற்கு பணியாற்றி வந்துள்ளார்.
தொழில்முனைவோர் ஆசை
ஆனால் அவரின் தொழில்முனைவோர் ஆசை அவரை விடவில்லை. அதனால் அவர் கார்ப்பரேட் நிறுவனங்களின் 5 ஆண்டுகள் பணிபுரிந்து அவர் தொழில் தொடங்க தேவையான பணத்தை சம்பாதித்துள்ளார். அதன் பின் 2016 ஆண்டு வேலையை விடுத்துள்ளார்.
தொழில்முனைவோர் ஆசை!
நீலம் சிங் எம்பிஏ படிக்குபோதே ஃபாஸ்ட் புட் உணவகத்தை தொடங்க விரும்பியுள்ளார். அச்சமயம் கல்லூரியில் நடந்த மூன்று நாள் விழா ஒன்றில் ஒரு சிறிய உணவகத்தை அமைத்து, அதன் விற்பனை மூலம் சுமார் ரூ.1 லட்சம் லாபம் ஈட்டியுள்ளார்.
அவர் பெற்றோரிடமிருந்து பணம் ஏதும் பெறாமல் தனது சொந்த உழைப்பில் சேமித்த பணத்தை வைத்து குர்கானில் 2018 ஆம் ஆண்டு தி பர்கர் கம்பெனி-யை (The Burger Company) தொடங்கினார். குர்கானில் உள்ள குளோபல் ஃபோயர் மாலில் அவரது முதல் கடையை திறந்தார்.
ஐந்தாண்டுகளில் 40 கோடி வருமானம்!
2018 ஆம் ஆண்டு நீலம் சிங் தொடங்கிய தி பர்கர் கம்பெனி ஐந்து ஆண்டுகளில் நல்ல வளர்ச்சி அடைந்து அந்நிறுவனத்தின் வருவாய் ரூ.40 கோடியாக உயர்ந்துள்ளது. அதன்பின் கோவிட்-19 சமயங்களில் அனைவரும் தொழில்முனைவோராக ஆசைப்பட்ட காலத்தில், 2020 ஆண்டு அக்டோபர் மாதம் தனது The Burger Company-யின் franchise பிசினஸ் மாடலை உருவாக்கினார்.
100 விற்பனை நிலையங்கள்!
ஆரம்ப காலங்களில் அவர் சிறிய பணியாளர்களுடன் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். அவரும் உணவகத்தில் அனைத்து வேலையை செய்துள்ளார். தற்பொழுது இந்நிறுவனம் டெல்லி NCR உட்பட ஏழு மாநிலங்களில் 100 விற்பனை நிலையங்களைக் கொண்டுள்ளது. இவர்களின் பர்கரின் விலை ரூ.39 முதல் ரூ.239 வரை உள்ளது.
திருமணம்!
நீலம் சிங் மேட்ரிமோனியல் இணையதளம் மூலம் சந்தித்த நித்தேஷ் தன்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். நித்தேஷ் அவர்கள் அமிட்டி பல்கலைக்கழகத்தில் MBA பட்டதாரி மற்றும் வெற்றிகரமான கார்ப்பரேட் நிர்வாகியாக உள்ளார்.
வெற்றி நிறுவனம்!
மலிவான விலையில் அனைவருக்கும் சுவையான உணவை தரும் தொழிலைத் தொடங்க ஆசைப்பட்ட நீலம் சிங்கின் கனவை தற்போது அவர் நனவாக்கியுள்ளார். யாருடைய உதவியும் இல்லாமல் சொந்த உழைப்பின் மூலம் பணத்தை சேமித்து அதனை தன் தொழிலை முதலீடு செய்து தற்போது 40 கோடி வருவாயுடைய தி பர்கர் கம்பெனி நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications