மத்திய அரசு வசூலிக்கும் வரியில் 41 சதவீதம் மாநில அரசுகளுக்கு தவணை முறையில் பகிர்ந்தளித்து வருகிறது. தற்போது இந்த மாநிலங்களுக்கான வரி பகிர்வை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று பல மாநிலங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன. 16வது நிதிக்குழுவின் தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையிலான குழு பல்வேறு மாநிலங்களுக்கு சென்று அம்மாநில முதல்வர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. அந்த வகையில், அரவிந்த் பனகாரியா தலைமையிலான குழு தங்கள் மாநிலங்களுக்கு வந்தபோது, மாநிலங்களுக்கான வரி பகிர்வை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று நிதிக்குழுவிடம் குஜராத்,கேரளா,தமிழ்நாடு, கோவா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட மாநில அரசுகள் கோரிக்கை விடுத்தன.
1980ல் மாநில அரசுகளுக்கு செல்லும் வரிகளின் பங்கு 20 சதவீதமாகத்தான் இருந்தது. பின்னர் படிப்படியாக உயர்த்தப்பட்டது. தற்போது மாநில அரசுகளுக்கு செல்லும் வரியின் பங்கு 41 சதவீதமாக உயர்ந்துள்ளது. தற்போது இந்த வரி பங்கை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் மாநில அரசுகள் போர்க்கொடி தூக்கி வரும் சூழ்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, மாநிலங்களுக்கு செல்லும் வரிகளின் பங்கை குறைக்குமாறு நிதிக்குழுவிடம் பரிந்துரைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகையில், மாநிலங்களுக்கான வரி பகிர்வை தற்போதைய 41 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக குறைக்க நிதிக்குழுவிடம் பரிந்துரை செய்யும். எதிர்வரும் மார்ச் இறுதிக்குள், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையால் இந்த முன்மொழிவுக்கு (வரி பங்கு குறைப்பு) ஒப்புதல் வழங்கப்பட்டு பின்னர் நிதி ஆணையத்திற்கு அனுப்பப்படும் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுதவிர, அரசியல் ஆதாயங்களுக்காக மாநிலங்கள் ரொக்கம் வழங்குதல், கடன் தள்ளுபடிகள் மற்றும் பிற இலவசங்கள் என்று வழங்கப்படுவதை ஊக்கப்படுத்த வேண்டாம் என்றும் நிதிக் குழுவிடம் மத்திய அரசு பரிந்துரைக்கும் என தகவல். மேலும் இதனை செயல்படுத்த ஒரு வழியையும் நிதிக்குழுவிடம் மத்திய அரசு தெரிவிக்க உள்ளது. அதாவது, மாநில வரி வருவாயில் உள்ள பற்றாக்குறையை ஈடு செய்ய மாநிலங்களுக்கு வழங்கப்படும் கூட்டாட்சி மானியங்களை பெற சில நிபந்தனைகளை விதிப்பதாகும். அந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்த பின்னரே மாநிலங்களுக்கு அத்தகைய மானியங்கள் பெற தகுதி பெறும்.
மாநில அரசுகளின் வரி பங்கில் 1 சதவீதம் குறைக்கப்பட்டால், நடப்பு நிதியாண்டுக்கு எதிர்பார்க்கப்படும் வரி வசூலின் அடிப்படையில் மத்திய அரசுக்கு சுமார் ரூ.35,000 கோடி கிடைக்கும். பொருளாதார மந்தநிலை ஆண்டுகளில் மத்திய அரசின் செலவின தேவைகள் அதிகரித்துள்ளது. இதனால் தான் மாநிலங்களுக்கு செல்லும் வரி வருவாயில் பங்கினை குறைக்குமாறு மத்திய அரசு கோருகிறது. மாநிலங்களுக்கு செல்லும் வரி பகிர்வை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு விரும்புவது, மத்திய மற்றும் மாநில அரசுகள் இடையே மோதலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Story written by: Subramanian
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications