புதுசா ஒரு பொருள் வாங்கினா எல்லாத்தையும் மாத்தணும்னு தோணுதா? உங்களை அடிமையாக்கும் Diderot Effect..!

உங்களிடம் ஒரு பழைய பொருள் இருக்கும். அது சரியாகத்தான் இயங்கிக் கொண்டிருக்கும். ஆனால், திடீரென நீங்கள் விலை உயர்ந்த அல்லது புதிய வடிவமைப்புள்ள ஒரு பொருளை வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்தப் புதிய பொருளின் நேர்த்தியும் அழகும், உங்கள் வீட்டில் அல்லது உங்கள் பயன்பாட்டில் இருக்கும் மற்ற பழைய பொருள்களை எல்லாம் மங்கலாகவும், தரமற்றதாகவும் காட்ட ஆரம்பித்துவிடும்.

உடனடியாக, அதோடு பொருந்தும்படி மற்ற எல்லாவற்றையும் மாற்ற வேண்டும் என்ற ஒரு தீவிர ஆசை பிறக்கும். இது ஒரு தனிப்பட்ட செலவு செய்யும் பழக்கம் அல்ல. இது கிட்டத்தட்ட 255 வருடங்களுக்கு முன்பே கண்டறியப்பட்ட ஒரு உளவியல் தூண்டுதல். இதுதான் 'டிடரோ விளைவு' (The Diderot Effect) என்று அழைக்கப்படுகிறது.

புதுசா ஒரு பொருள் வாங்கினா எல்லாத்தையும் மாத்தணும்னு தோணுதா? உங்களை அடிமையாக்கும் Diderot Effect..!

இதுதொடர்பாக டாக்டர் ரிதேஷ் மாலிக் என்பவர் தனது LinkedIn தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், கடந்த மாதம், என்னுடைய உறவினர் பெண், ரூ.2.8 லட்சம் மதிப்புள்ள ஒரு சோபாவை வாங்கினார். 6 மாதங்களுக்குள், அந்தப் புதிய சோபாவுக்கு ஈடு கொடுக்க, மேலும் ரூ.1.45 லட்சம் செலவு செய்து காபி டேபிள், திரைச்சீலைகள், லைட்டிங் மற்றும் சுவர் ஓவியங்கள் என அனைத்தையும் மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஆனால், எல்லாமே பொருந்தாமல் இருந்தது. அதனால் இப்போது சுவர்களுக்கு மீண்டும் பெயிண்ட் அடிக்க வேண்டும் என்று நான் அவரிடம் கூறியபோது, அது வெறும் விருப்பம் அல்ல.. அவர் ஒரு உளவியல் சுழற்சியில் சிக்கியுள்ளார் என்பதை உணர்ந்ததாக மாலிக் தெரிவித்துள்ளார்.

பழங்காலத்து உளவியல் ரகசியம் : கடந்த 1769-ஆம் ஆண்டில் வாழ்ந்த பிரெஞ்சு தத்துவஞானி டெனிஸ் டிடரோட் என்பவர்தான் இந்த சிக்கலை முதன்முதலில் அனுபவித்தார். அவருக்கு அழகான, பளபளக்கும் சிகப்பு மேலங்கி ஒன்று பரிசாக கிடைத்தது. அந்தப் புதிய மேலங்கியை அணிந்தபோது, அவர் தனது அறையில் இருந்த பழைய நாற்காலி, மேசை, அலங்காரப் பொருட்கள் என எல்லாமே பழமையாக தெரிவதை கவனித்தார். அவருக்கு அந்தப் பொருந்தாத தன்மையைப் பார்த்துச் சகித்துக் கொள்ள முடியவில்லை. அதனால், ஒன்றன் பின் ஒன்றாக அனைத்தையும் புதிய, விலை உயர்ந்த பொருள்களால் மாற்றினார். இதன் விளைவு, அவர் கடனில் மூழ்கிவிட்டார்.

பின்னர், அவர் தனது அனுபவத்தை எழுதும்போது, "நான் என் பழைய மேலங்கிக்கு எஜமானாக இருந்தேன். ஆனால், இப்போது என் புதிய மேலங்கிக்கு அடிமையாகிவிட்டேன்" என்று குறிப்பிட்டார். அதாவது, ஒரு புதிய மேம்பட்ட பொருள், அதனுடன் தொடர்புடைய பழைய பொருட்களின் தரத்தை நம் மனதளவில் குறைத்து மதிப்பிட செய்து, தொடர்ந்து செலவு செய்ய நம்மை நிர்பந்திக்கிறது. இந்த விளைவு நம்மை எப்படிப் பாதிக்கிறது என்பதற்கான உதாரணங்களை நம்மைச் சுற்றியே பார்க்கலாம்.

வீட்டுச் செலவு : ஒரு விலையுயர்ந்த நவீன சோபாவை வாங்கினால், அதோடு பொருந்தும்படி காபி டேபிள், திரைச்சீலை, சுவர் பெயிண்டிங் என எல்லாவற்றையும் மாற்ற வேண்டும் என்ற ஆசையால், கூடுதல் லட்சம் ரூபாய் செலவு செய்வது.

கார் மோகம்: புதிய மாடல் காரை (ரூ.18 லட்சம்) வாங்கியவுடன், அதன் தோற்றத்தை பூர்த்தி செய்ய ரூ.1 லட்சம் கொடுத்து புதிய வீல் கவர்கள், லைட்டுகள் என பல ஆக்சஸெரீஸ்களைச் சேர்ப்பது.

தொழில்நுட்ப ஆசை : ரூ.80,000 கொடுத்து ஒரு புதிய ஐபோன் வாங்கினால், அதன் வேகம் மற்றும் தரத்துக்கு இணையாக, முன்பு வைத்திருந்த மலிவான இயர்போன்ஸ், வாட்ச் போன்றவற்றை எல்லாம் மாற்றி, ஆப்பிள் பிராண்டின் மற்ற பொருட்களையும் வாங்குவது.

இந்தியாவில் இது ஏன் தீவிரமாக உள்ளது..?: சமூக ஊடக அழுத்தம் : லட்சக்கணக்கான இந்தியர்கள் இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் மற்றவர்களின் அழகிய, நேர்த்தியான வீடுகள் மற்றும் ஆடம்பர வாழ்க்கையை பார்க்கும்போது, தங்கள் பொருட்கள் தரமற்றவை என்று மனதளவில் உணர்கிறார்கள்.

EMI எளிமை : ஒரு பெரிய செலவு ரூ.3 லட்சம் என்று இல்லாமல், மாதம் ரூ.25,000 என்ற EMI-ஆக மாறும் போது, அதை வாங்குவது மிகவும் சுலபமாக தோன்றுகிறது. இந்த வசதி, நாம் சிந்திக்கும் நேரத்தை குறைத்து, உடனடி செலவுக்கு தூண்டுகிறது.

சில்லறை வியாபாரிகளின் உத்தி : ஐகேயா போன்ற கடைகள், முழுமையாக அலங்கரிக்கப்பட்ட அறைகளை காட்சிப்படுத்துகின்றன. இது, ஒரே நேரத்தில் பல பொருட்களை வாங்க வாடிக்கையாளர்களை தூண்டுகிறது.

என்ன செய்யலாம்?: இந்த டிடரோ விளைவு என்பது உங்கள் குணாதிசயக் குறைபாடு அல்ல; அது உளவியல் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்த உளவியல் உணர்வின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட வேண்டும்.

ரூ.10,000-க்கு மேல் எந்தப் பெரிய பொருளை வாங்க முடிவெடுத்தாலும், உடனடியாக பணம் செலுத்தாமல், 3 நாட்கள் காத்திருந்து, அது உண்மையிலேயே அவசியமா என்று யோசியுங்கள்.

ஒரு பொருளை வாங்கினால், அதனுடன் வாங்குவதற்கு தேவையான அனைத்துக் கூடுதல் பொருட்களின் (கேஸ், ப்ரொடெக்டர், உதிரிபாகங்கள்) விலையையும் சேர்த்துக் கணக்கிட்டு, அந்த மொத்தச் சுமைக்குப் பிறகு வாங்குவது சாத்தியமா என்று பாருங்கள்.

புதிதாக ஒரு பொருளை வாங்கினால், அதே வகையை சேர்ந்த ஒரு பழைய பொருளைக் கொடுத்துவிடுங்கள். இது வீணான பொருட்களை குறைப்பதுடன், தேவையில்லாத கொள்முதல்களையும் கட்டுப்படுத்தும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+