சென்னை: வாகனம், தொலைக்காட்சி, வங்கி, சினிமா, ஐடி என இந்தியாவில் தற்போது பல்வேறு நிறுவனங்களும் புகழ்பெற்ற நிறுவனங்களாக இருக்கின்றன. அவற்றின் பெயர்களும் நம் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டன. இவற்றில் பெரும்பாலான நிறுவனங்களின் முழுமையான பெயர்கள் சுவாரஸ்யமாக இருக்கின்றன. அதில் சிலவற்றை நாம் தற்போது தெரிந்துகொள்ளலாம்.
டிவிஎஸ் (TVS) இந்தியாவின் புகழ்பெற்ற வாகன தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனம் ஆகும். இதன் முழு பெயர் திருக்குறுங்குடி வெங்காராம் சுந்தரம் (Thirukkurungudi Vengaram Sundram)ஆகும். திருக்குறுங்குடி வெங்காராம் சுந்தரம் ஐயங்கார் என்பவர் தான் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தை நிறுவியர். அவரது பெயர் சுருக்கமே டிவிஎஸ்.

சிஸ்கா (Syska) என்பது இந்தியாவின் புகழ்பெற்ற எல்இடி லைட் விற்பனை நிறுவனமாகும். ஸ்ரீ யோக் சந்த் கிரிபா ஆனந்த் (Sri Yogh sant kriya anant) என்ற பெயரின் சுருக்கமே சிஸ்கா ஆகும்.
ஹெச்சிஎஃப்டி (HDFC) வங்கி இந்தியாவின் புகழ்பெற்ற தனியார் வங்கி ஆகும். வங்கி சேவை மட்டுமில்லாமல் காப்பீட்டு துறையிலும் இந்த நிறுவனம் இயங்குகிறது. ஹெச்டிஎஃப்சி வங்கியின் முழு பெயர் ஹவுஸிங் டெவலப்மெண்ட் பைனான்ஸ் கார்ப்பரேஷன்(Housing development finance corporation) ஆகும்.
ஹெசிஎல் டெக் (HCL tech) இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமாகும். ஹெச்சிஎல் டெக் என்றால் ஹிந்துஸ்தான் கம்ப்யூட்டர் லிமிடெட் (Hindustan computer Ltd) என அர்த்தம். 1976ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் ஐடி சேவையில் முன்னிலையில் இருக்கிறது. தமிழ்நாட்டை சேர்ந்த ஷிவ் நாடார் தான் இதனை நிறுவியவர்.
என்டிடிவி (NDTV) இந்தியாவின் புகழ்பெற்ற செய்தி தொலைக்காட்சி நிறுவனம் ஆகும். இதன் முழுமையான பெயர் நியூ டெல்லி டெலிவிசன்(New Delhi television) என்பதாகும். 1981ஆம் ஆண்டு பிரனாய் ராய் மற்றும் ராதிகா ராய் ஆகியோரால் நிறுவப்பட்டது. தற்போது இது அதானி குழுமத்தின் கீழ் வந்துவிட்டது.
பிவிஆர் (PVR) சினிமாஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சினிமா தியேட்டர்களை நடத்தி வருகிறது. பிவிஆர் என்பதன் முழு பெயர் பிரியா வில்லேஜ் ரோட்ஷோ (Priya Village Roadshow) என்பதாகும்.
எம்ஆர்எப் (MRF) டயர்ஸ் என்பதன் முழு பெயர் மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி (Madras Rubber Factory) என்பதாகும். சென்னையை சேர்ந்த மம்மென் மாப்பிள்ளை என்பவர் 1946இல் இந்த நிறுவனத்தை தொடங்கினார்.
பேடிஎம் (PayTM) இந்தியாவில் இந்த பெயரை கேட்காதவர்களே இருக்க முடியாது. டிஜிட்டல் பண பரிமாற்ற பிரிவில் முன்னோடியாக செயல்படும் பேடிஎம் நிறுவனத்தின் முழு பெயர் பே த்ரூ மொபைல் (Pay through mobile) என்பதாகும்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications