டாலர் மீது நம்பிக்கை இல்லை.. தங்கம் மீது ஆர்வம் காட்டும் மத்திய வங்கிகள்.. என்ன காரணம்..?

இந்திய ரிசர்வ் வங்கி உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள், தற்போது அமெரிக்க டாலர் சார்ந்த சொத்துக்களை விட தங்கத்தின் மீது அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளன. இது வெறும் சந்தை உணர்வு சார்ந்த நடவடிக்கை அல்ல. மாறாக, புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் அந்நிய செலாவணி கையிருப்பைப் பாதுகாக்கும் ஒரு முடிவாகவே பார்க்கப்படுகிறது.

இந்த நிதியாண்டின் தொடக்கம் முதல் ரிசர்வ் வங்கி, தனது இருப்புகளில் தங்கத்தை சேர்த்து வருகிறது. ஆனால், அதே காலகட்டத்தில் அமெரிக்க அரசுப் பத்திரங்களில் செய்யப்படும் முதலீடுகளைத் தொடர்ந்து குறைத்து வருகிறது.

டாலர் மீது நம்பிக்கை இல்லை.. தங்கம் மீது ஆர்வம் காட்டும் மத்திய வங்கிகள்.. என்ன காரணம்..?

இந்த நிதியாண்டில் 600 கிலோகிராம் தங்கத்தை சேர்த்ததன் மூலம், ரிசர்வ் வங்கியின் மொத்தத் தங்க கையிருப்பு 880 டன்களை தாண்டியுள்ளது. அந்த வகையில், தங்கத்தின் மதிப்பு முதல்முறையாக 100 பில்லியன் அமெரிக்க டாலரை கடந்து 102.365 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

அதேசமயம், அமெரிக்க அரசுப் பத்திரங்களில் ரிசர்வ் வங்கியின் முதலீடு 219 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. இது கடந்த 7 மாதங்களில் இல்லாத குறைந்தபட்ச அளவாகும். ஒரு வருடத்திற்கு முன் 9.3% ஆக இருந்த தங்கத்தின் பங்கு, தற்போது ரிசர்வ் வங்கியின் மொத்த அந்நிய செலாவணி கையிருப்பில் 13.6% ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து பேங்க் ஆஃப் பரோடாவின் தலைமைப் பொருளாதார நிபுணர் மதன் சப்னாவிஸ் கூறுகையில், அமெரிக்கப் பொருளாதாரம் குறித்த நிச்சயமற்ற தன்மை மற்றும் வட்டி விகிதக் கொள்கையின் மீதான அச்சம் காரணமாக, ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை கையிருப்பை பல்வகைப்படுத்தும் கொள்கையின் ஒரு பகுதியாகும் என்று தெரிவித்துள்ளார்.

டாலர் மீதான நம்பிக்கை குறைவு : அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் பணவீக்கம் நீடிப்பதாலும், வட்டி விகிதங்கள் உறுதியற்ற நிலையில் இருப்பதாலும், அரசுப் பத்திரங்கள் போன்ற பாரம்பரியமான பாதுகாப்பான சொத்துக்களின் மீதான நம்பிக்கை குறைந்துள்ளது. மத்திய வங்கிகள் ஃபியட் நாணயங்கள் மீதான நம்பிக்கையை இழக்கும்போது, அவை நிலையான, உறுதியான தங்கத்தை தேடுகின்றன.

தங்கத்தின் தனித்துவமான பாதுகாப்பு : தங்கம், நாணயம் அல்லது பத்திரம் போலல்லாமல், எந்த ஒரு நாட்டின் கொள்கைக்கும் கட்டுப்படாது. இதை பணவீக்கத்தால் மதிப்பிழக்க செய்ய முடியாது; பொருளாதார தடைகளால் முடக்க முடியாது. இந்த உறுதியான தன்மையே, தங்கத்தை இருப்பு மேலாண்மையின் முக்கிய கருவியாக மீண்டும் கொண்டு வந்துள்ளது.

டாலர் ஆதிக்கத்திற்கு சவால் : இன்ஃபார்மரிக்ஸ் ரேட்டிங்ஸ் தலைமைப் பொருளாதார நிபுணர் மனோரஞ்சன் சர்மா கூறுகையில், மத்திய வங்கிகளின் இந்த தங்கச் சேமிப்பு, De-dollarisation முயற்சியால் உந்தப்படுகிறது. ரஷ்யா போன்ற நாடுகள் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகள், அமெரிக்க சொத்துக்களை வைத்திருப்பதில் பல நாடுகளை அச்சப்பட வைத்துள்ளது.

சீனா, இந்தியா, ரஷ்யா, துருக்கி போன்ற வளர்ந்து வரும் நாடுகள், டாலரின் ஆதிக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளவும், சுயாதீனமான நாணயக் கொள்கையைப் பின்பற்றவும் தங்கத்தைப் பயன்படுத்துகின்றன.

தங்கத்தின் எதிர்கால விலை : மத்திய வங்கிகள் தொடர்ந்து 4-வது ஆண்டாக (2025-ல் சுமார் 900 டன்) தங்கத்தை வாங்கவிருப்பதால், இது அதன் விலைக்கு ஒரு நிலையான அடித்தளத்தை உருவாக்கியுள்ளது. 73% மத்திய வங்கிகள், அடுத்த 5 ஆண்டுகளில் டாலரின் பங்கு குறையும் என்று எதிர்பார்ப்பதாகவும், அதே சமயம் 76% வங்கிகள் தங்கத்தின் பங்கை அதிகரிப்போம் என்றும் கூறியுள்ளன. அதேசமயம், மோர்கன் ஸ்டான்லி ஆய்வாளர்கள் அடுத்த ஆண்டு தங்கத்தின் விலை அவுன்ஸிற்கு 4,900 டாலரை தொடும் என்று கணித்துள்ளனர்.

தங்கம் என்பது ஒரு பாதுகாப்பான புகலிடம் மட்டுமல்ல. அது புவிசார் அரசியலில் ஒரு மூலோபாய கருவியாகவும் மாறிவிட்டது என்ற உண்மையை உணர்ந்துள்ளது. டாலர் மீதான உலகளாவிய நம்பிக்கை குறையும் இக்காலத்தில், தங்கம் மீண்டும் உலக நிதிப் பாதுகாப்பின் மையப் புள்ளியாக உருவெடுத்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+