இந்தியாவில் ஜிஎஸ்டி வரி விகிதத்தில் 5 மற்றும் 18 சதவீதம் என இரண்டு வரி விகிதங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற மத்திய அரசின் பரிந்துரைக்கு ஜிஎஸ்டி கவுன்சிலால் அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு ஒப்புதல் தெரிவித்து இருக்கிறது. அமைச்சர்கள் குழுவின் இந்த ஒப்புதலைத் தொடர்ந்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இது விவாதிக்கப்பட்டு விரைவிலேயே நடைமுறைக்கு வர இருக்கிறது. இது நடைமுறைக்கு வந்தால் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு பொருட்களின் விலை கணிசமாக குறையும்.
ஜிஎஸ்டி வரி மாற்றம்: இந்தியாவில் 5, 12, 18 , 28 சதவீதம் என நான்கு விகிதங்களில் ஜிஎஸ்டி வரி பிடித்தம் செய்யப்படுகிறது. இதனை 5 மற்றும் 18 சதவீதம் என இரண்டு வரி விகிதங்களாக மட்டுமே குறைக்க வேண்டும் என மத்திய அரசு ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு பரிந்துரை செய்திருந்தது. பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய சுதந்திர தின உரையின் போது மக்களுக்கு தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரி முறையில் பெரிய சீர்த்திருத்தம் இருக்கும் என்றும் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு பொருட்களின் விலை இதன் மூலம் குறைய போகிறது என்றும் தெரிவித்திருந்தார்.

அமைச்சர்கள் குழு ஒப்புதல்: இதனை அடுத்து மத்திய அரசு தன்னுடைய வரி சீர்திருத்தம் தொடர்பான பரிந்துரையை அனுப்பியிருந்தது. ஜிஎஸ்டி கவுன்சிலும் இந்த வரி சீர்த்திருத்தங்கள் தொடர்பாக ஆய்வு நடத்துவதற்கு ஒரு அமைச்சர்கள் குழுவை நியமனம் செய்திருந்தது . பீகார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி தலைமையிலான இந்த அமைச்சர்கள் குழு நேற்றும் இன்றும் முக்கிய ஆலோசனையை நடத்தியது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு மத்திய அரசு ஏன் இந்த வரி சீர்திருத்தங்களை கொண்டு வர விரும்புகிறது என்பதற்கான விளக்கத்தை எடுத்துரைத்தார் .
அடுத்து ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு செல்லும்: இந்த சூழலில் தான் அமைச்சர்கள் குழு ஜிஎஸ்டி வரி சீர்த்திருத்ததிற்கு ஒப்புதல் தெரிவித்து இருக்கிறது. ஜிஎஸ்டி வரி மாற்றத்தால் அரசுக்கு பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால் அமைச்சர்கள் குழு இதற்கு ஒரு மனதாக ஒப்புதல் தருமா என்ற கேள்வி எழுந்திருந்தது. இந்த சூழலில் தான் அமைச்சர்கள் குழு இதற்கு ஒப்புதல் தெரிவித்து இருக்கிறது என்ற தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது . அடுத்ததாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்த பரிந்துரை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு இதை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மக்களுக்கு தீபாவளி பரிசு: பிரதமர் நரேந்திர மோடி கூறியது போல தீபாவளிக்கு முன்னதாகவே பல்வேறு பொருட்களின் விலைகள் குறைவதற்கு இது வாய்ப்பினை ஏற்படுத்தி தந்துள்ளது. வருவாய் இழப்பு தொடர்பாக மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்ட விளக்கங்கள் ஏற்புடையதாக இருந்ததாலேயே அமைச்சர்கள் குழு இதற்கு ஒப்புதல் தெரிவித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பல்வேறு பொருட்களும் 5 சதவீதம் மற்றும் 18 சதவீத வரி விகிதத்திற்குள் வந்துவிடும். புகையிலை, மதுபானங்கள் , சூதாட்டம் உள்ளிட்டவை 40 சதவீத ஜிஎஸ்டி வரிக்குள் செல்லும் .
பொருட்கள் விலை குறையும்: தற்போது நடைமுறையில் இருக்கக்கூடிய 12 மற்றும் 28 சதவீத வரி விகிதங்கள் முழுவதுமாக நீக்கப்படும். 12 சதவீதத்திற்கும் இருக்கும் பெரும்பாலான பொருட்கள் 5 சதவீத வரிக்குள் வந்துவிடும், 28 சதவீதத்தின் கீழ் உள்ள பொருட்கள் 18 சதவீதத்திற்கும் கீழ் வந்துவிடும் என்பதால் நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய வீட்டு உபயோகப் பொருட்களில் தொடங்கி மளிகை பொருட்கள், மின்னணு சாதனங்கள், ஸ்மார்ட் ஃபோன்கள் என பெரும்பாலான பொருட்கள் விலை குறைவுக்கு இது காரணமாக அமையும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications