சென்னை: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் குழுவினருக்கு இடையிலான போர் தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இந்த 12 மாத காலத்தில் இஸ்ரேல் ஹமாஸ் குழுவினர் இடையிலான போர் பதற்றம் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் விலைகளில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பது குறித்து நாம் இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
2023 அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆதரவு பெற்ற ஹமாஸ் குழுவினருக்கும் இடையே மோதல் தொடங்கியது. இதன் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் உண்டானது. இந்த பதற்றம் ஓராண்டு ஆகியும் தனிந்த பாடில்லை.

இந்த பதற்றம் காரணமாக சர்வதேச அளவில் தங்கத்தின் விலை கடந்த 12 மாதங்களில் 44.8% வரை அதிகரித்துள்ளது. அதாவது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 820 டாலர்கள் வரை உயர்ந்துள்ளது. 2023 அக்டோபர் 7ஆம் தேதி ஸ்பாட் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 1810.51 டாலராக இருந்தது அதுவே தற்போது 2,653 டாலர்கள் என உயர்ந்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளின் நிலவும் போர் பதற்றம் காரணமாக பெரும்பாலான முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடு என கருதி தங்கத்திலேயே தங்களுடைய முதலீடுகளை குவிக்கின்றனர். மேலும் பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்களின் தங்க கையிருப்பை அதிகரித்துள்ளன.
எனவே தங்கத்திற்கான தேவை அதிகரித்து அதன் விலையும் அதிகரித்துள்ளது. மேலும் 2024 ஆம் ஆண்டில் ஜூலை மாதத்தில் இருந்து தான் தங்கத்தின் விலை மாதந்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருவதாக இந்த துறை சார்ந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதே வேளையில் ப்ரண்ட் கச்சா எண்ணெய் விலை 6% வரை சரிவடைந்துள்ளது அதாவது ப்ரண்ட் எனப்படும் சர்வதேச கச்சா எண்ணெய் பெஞ்ச் மார்க் ஒரு பேரல் 6.14 சதவீதம் வரை அதாவது 5.2 டாலர்கள் வரை குறைந்துள்ளது. ப்ரண்ட் ஃபியூச்சர்ஸ் மதிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு பேரல் 90.89 டாலர்களாக இருந்தது.
தற்போது அது 79 டாலர்கள் என குறைந்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் காண தேவை குறைந்து இருப்பதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவும் கச்சா எண்ணெயின் விலை சரிவடைந்துள்ளது.
மேலும் போர் பதற்றம் தொடங்கி ஓராண்டு காலம் முடிவடைந்திருக்கும் நிலையில் இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் தணியவில்லை. இதனால் கச்சா எண்ணெய் போக்குவரத்து தடைபட்டு கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்கும்.
இவ்வாறு கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து அதிகரித்தால் அது இந்திய பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். ஏனெனில் இந்தியா பெருமளவிலான கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடாக இருக்கிறது. இது ஒரு குறுகிய காலத்திற்கு இந்தியாவின் இந்தியாவில் நடப்பு கணக்கு பற்றாக்குறை ஏற்படுத்தலாம் என சொல்லப்படுகிறது. தங்கத்தின் விலை சற்றே குறையலாம் என்ற கணிப்பும் முன் வைக்கப்படுகிறது.
Written by: Devika
More From GoodReturns

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!



Click it and Unblock the Notifications