பொதுவாக இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூட்டம் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும். இந்த கூட்டத்தில்தான் முக்கிய கடனுக்கான வட்டி விகிதம் தொடர்பான நிலைப்பாடு உள்பட பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும். நிதிக் கொள்கை குழு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் பொருளாதாரம் மற்றும் சாமானிய மக்களின் வாழ்க்கையிலும் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதால், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டம் நடைபெற உள்ளது என்றாலே சந்தை வட்டாரங்கள் உள்பட அனைத்து தரப்பினரும் இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது வாடிக்கையான ஒன்றாகும்.
நடப்பு 2024-25ம் நிதியாண்டுக்கான இந்திய ரிசர்வ் வங்கியின் கடைசி நிதிக் கொள்கை குழு கூட்டம் கடந்த பிப்ரவரியில் நடைபெற்றது. அப்போது இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் அந்த கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்தது. வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வாங்கும் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்து 6.25 சதவீதமாக மாற்றி அமைத்தது. அதற்கு முன்பு கடைசியாக 2020ம் ஆண்டில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்து இருந்தது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால், கார் கடன், வீட்டு கடன் மற்றும் தனிநபர் கடன் போன்றவற்றின் வட்டி குறைந்து இஎம்ஐ குறையும்.

தற்போது நடப்பு நிதியாண்டுக்கான இந்திய ரிசர்வ் வங்கி எதிர்வரும் 2025-26ம் நிதியாண்டுக்கான ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூட்டத்தின் கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் நிதியாண்டில் மொத்தம் 6 முறை ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு நடைபெற உள்ளது.
1. 2025 ஏப்ரல் 7, 8 மற்றும் 9
2. 2025 ஜூன் 4.5 மற்றும் 6
3. 2025 ஆகஸ்ட் 5,6 மற்றும் 7
4. 2025 செப்டம்பர் 29,30 மற்றும் அக்டோபர் 1
5. 2025 டிசம்பர் 3,4 மற்றும் 5
6. 2026 பிப்ரவரி 4,5 மற்றும் 6
ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு
இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு என்பது முக்கிய வட்டி விகிதங்களை நிர்ணயிப்பதற்கும், பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு விலை நிலைத்தன்மையை பராமரிக்க நிதி கொள்கை வகுப்பதற்கும் பொறுப்பான 6 உறுப்பினர்களை கொண்ட அமைப்பாகும். பொருளாதாரம் முழுவதும் கடன் மற்றும் டெபாசிட் விகிதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் ரெப்போ விகிதத்தை முடிவு செய்ய ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நிதிக் கொள்கை கூட்டம் நடைபெறுகிறது. பணவீக்கத்தை கட்டுப்படுத்துதல், ரூபாய் மதிப்பை நிலைப்படுத்துதல் மற்றும் நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்தல் ஆகியவற்றுக்கு ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழுவின் முடிவுகள் மிகவும் முக்கியமானவை.
நிதிக் கொள்கை குழு உறுப்பினர்கள்
இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழுவின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 6. இந்திய ரிசர்வ் வங்கி சட்டப்படி, நிதிக் கொள்கை குழுவின் உறுப்பினர்களில் 3 பேர் இந்திய ரிசர்வ் வங்கியை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். பொதுவாக ரிசர்வ் வங்கியின் கவர்னர், நிதி கொள்கைக்கு பொறுப்பான துணை கவர்னர் மற்றும் மற்றொரு ரிசர்வ் வங்கி அதிகாரி ஆகியோர் ரிசர்வ் வங்கி சார்பில் இடம் பெறுவர். அதேசமயம் எஞ்சிய 3 உறுப்பினர்கள் மத்திய அரசால் நியமிக்கப்பபடுகின்றனர். 6 பேர் கொண்ட இந்த ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழுவுக்கு ரிசர்வ் வங்கியின் கவர்னர் தலைமை தாங்குவார்.
ரிசர்வ் வங்கியின் தற்போதைய 6 உறுப்பினர்கள்
1.ரிசர்வ் வங்கியின் கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா
2.ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குனர் டாக்டர் ராஜீவ் ரஞ்சன்
3.ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் எம்.ராஜேஷ்வர் ராவ்
மத்திய அரசால் நியமிக்கப்பட்டவர்கள்
4.சவுகதா பட்டாச்சார்யா
5.டாக்டர் நாகேஷ் குமார்
6.பேராசிரியர் ராம் சிங்
கடந்த அக்டோபரில் மத்திய அரசு, டெல்லி பொருளாதார பள்ளியின் இயக்குனர் ராம் சிங், பிரபல பொருளாதார நிபுணர் சவுகதா பட்டாச்சார்யா மற்றும் தொழில்துறை மேம்பாட்டு ஆய்வுகள் நிறுவனத்தின் இயக்குனர் நாகேஷ் குமார் ஆகியோரை இந்திய ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழுவில் உறுப்பினர்களாக நியமித்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்த நிதியாண்டுக்கான இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழுவின் முதல் கூட்டம் இன்னும் பத்து தினங்களில் தொடங்க உள்ளது.ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழுவின் முதல் கூட்டம் ஏப்ரல் 7ம் தேதி தொடங்கி 9ம் தேதி வரை நடைபெற உள்ளது. எதிர்வரும் நிதிக் கொள்கை குழு கூட்டத்தில் முக்கிய கடனுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைக்கும் என்று எதிர்பார்ககப்படுகிறது. ஏனென்றால் தற்சமயம் சில்லரை விலை பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அளவுக்குள் இருக்கிறது. கடந்த ஜனவரியில் நாட்டின் சில்லரை பணவீக்கம் 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு 4.31 சதவீதமாக குறைந்து இருந்தது. மேலும், கடந்த பிப்ரவரியில் நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு 3.61 சதவீதமாக குறைந்தது.
மேலும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும் வட்டி குறைப்பு கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அடுத்த நிதிக் கொள்கை குழு கூட்டத்தில் ரிசர்வ் வங்கி விட்டி விகிதத்தை குறைக்கும் என்று பலத்த எதிர்பார்ப்புகள் நிலவுகிறது. ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்தால், வங்கிகளும் வட்டி குறைப்பு பலனை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும். அதாவது வங்கிகளும் கடனுக்கான வட்டியை குறைக்கும். இதனால் வீட்டுக் கடன், பைக் லோன், கார் லோன் என பல தரப்பட்ட கடனை திருப்பி செலுத்துபவர்களின் இஎம்ஐ குறையும்.
ரிசர்வ் வங்கி வட்டியை உயர்த்தினால் வங்கிகள் உடனடியாக கடனுக்கான வட்டியை உயர்த்தி விடும். அதேசமயம் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்தால், வங்கிகள் வட்டி குறைப்பு நடடிவக்கையை மேற்கொள்ள வேகம் காட்டுவது இல்லை என்ற விமர்சனம் நிலவுகிறது. வங்கிகள் எவ்வளவு சீக்கிரம் ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு பலனை வழங்குகிறார்களோ அவ்வளவு விரைவாக கடனை திரும்ப செலுத்துபவர்களும் பலன் அடைவார்கள்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications