மத்திய அரசு நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க பல வழிகளில் நிதி திரட்டி வருகிறது. இந்த சூழ்நிலையில், மத்திய அரசே எதிர்பார்க்காத ஒரு பெரிய தொகையை டிவிடெண்டாக அரசிடம் வழங்க இந்திய ரிசர்வ் வங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது, குறுகிய கால பத்திரங்களில் ஒரு எழுச்சிக்கு வழிவகுத்துள்ளது என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
இதுவரை இல்லாத
இந்த நிதியாண்டில் இந்திய ரிசர்வ் வங்கி, மத்திய அரசுக்கு டிவிடெண்டாக ரூ.2.5 முதல் 3 லட்சம் கோடி வரை வழங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது கடந்த நிதியாண்டில் மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி வழங்கிய டிவிடெண்ட் தொகையை காட்டிலும் அதிகமாகும். அந்த நிதியாண்டில் ரிசர்வ் வங்கி இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.2.1 லட்சம் கோடியை டிவிடெண்டாக மத்திய அரசுக்கு கொடுத்தது. 2022-23ம் நிதியாண்டில் ஈட்டிய லாபத்திற்காக 2023-24ம் நிதியாண்டில் மத்திய அரசுக்கு ரூ.87,416 கோடியை ரிசர்வ் வங்கி வழங்கியது.

இது குறித்து கேர் எட்ஜ் ரேட்டிங்ஸ் நிறுவனத்தின் தலைமை பொருளாதார நிபுணர் ரஜனி சின்ஹா கூறுகையில், டாலர் விற்பனையிலிருந்து கிடைக்கும் பெரிய லாபம் காரணமாக, இவ்வளவு பெரிய தொகையை டிவிடெண்டாக வழங்க முக்கிய காரணியாக இருக்கலாம். 2024-25ம் நிதியாண்டில் பிப்ரவரி வரையிலான காலத்தில் ரிசர்வ் வங்கியின் டாலர் விற்பனை 37,160 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இது முந்தைய 2023-24ம் நிதியாண்டில் 15,300 கோடி டாலராக இருந்தது.
டாலர் விற்பனை
டாலர் விற்பனை அதிகரிப்பு மற்றும் விற்பனை விலைக்கும் கொள்முதல் விலைக்கும் இடையிலான வித்தியாசம் ஆகியவை கடந்த நிதியாண்டில் டாலர் விற்பனையிலிருந்து ரிசர்வ் வங்கி பெரிய லாபத்தை ஈட்டியிருக்கலாம். இதுதவிர, ரூபாய் மீதான வட்டி வருமானம் மற்றும் வெளிநாட்டு பத்திரங்கள் போன்ற பிற காரணிகளும் அதிக டிவிடெண்டு தொகை வழங்க காரணமாக இருந்திருக்கலாம் என்று தெரிவித்தார்.
இந்திய ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு வழங்க வாய்ப்புள்ளது, குறுகிய கால பத்திரங்களில் ஒரு எழுச்சிக்கு வழிவகுத்துள்ளது என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
மத்திய அரசு 2025-26ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், ரிசர்வ் வங்கி, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து டிவிடெண்டாக ரூ.2.6 லட்சம் கோடி கிடைக்கும் என மதிப்பிட்டு இருந்தது. தற்போது ரிசர்வ் வங்கி மட்டுமே அதனை காட்டிலும் கூடுலாக டிவிடெண்டு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவசர செலவினம்
பட்ஜெட் மதிப்பீட்டை காட்டிலும் அதிகமான ரிசர்வ் வங்கி மூலமான டிவிடெண்ட் வருவாய் மற்றும் சில திட்டங்ளில் சேமிப்பு ஆகியவற்றின் பலனாக, வளர்ச்சி மந்தநிலை அபாயங்களையும், ஏதேனும் அவசரகால செலவின தேவைகளையும் எதிர்கொள்ளும் வகையில் மத்தி அரசு நிதி நிலையில் வலுவாக உள்ளது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!



Click it and Unblock the Notifications