உலக பொருளாதார மந்தநிலை, வருவாய் சரிவு போன்ற காரணங்களால் கடந்த ஆண்டு நடுவில் இருந்து ஐடி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டன. திடீர் வேலைநீக்கம் ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சி மற்றும் கடும் நெருக்கடியான சூழலை ஏற்படுத்தியது.
இருப்பினும் இது போன்ற சூழலை எதிர்கொள்ளவது நடக்கக்கூடிய ஒன்றுதான் என்று பெரும்பாலானவர்கள் கடந்து சென்று விடுகின்றனர். அதேசமயம், சிலருக்கு நிறுவனத்தின் மீது கோபம் மற்றும் வெறுப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த கோபத்தில் சிலர் நிறுவனத்தை பழிவாங்குவதாக நினைத்து முட்டாள்தனமாக ஏதாவது செய்து தங்கள் வாழ்க்கையை சிக்கலில் தள்ளி கொள்கின்றனர். அப்படி ஒரு சம்பவம் பெங்களூருவில் அரங்கேறியுள்ளது.

நாட்டின் ஐடி தலைநகரமான பெங்ளூருவில் ஓசூர் சாலையில் நாட்டின் மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸின் (டிசிஎஸ்) திங்க் கேம்பஸ் உள்ளது. இந்த அலுவலகத்தில் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமையன்று காலையில், டிசிஎஸ் அலுவலகத்துக்கு தொலைப்பேசியில் பேசிய மர்ம நபர் ஒருவர் அலுவலக வளாகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் சிறிது நேரத்தில் வெடிக்கும் என்றும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.
வெடிகுண்டு மிரட்டல் காரணமாக அந்த வளாகத்தில் இருந்த அனைத்து பணியாளர்களும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். டிசிஎஸ் பாதுகாப்பு அலுவலர்கள் பரப்பன அக்ரஹாரா காவல் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் குறித்து தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து வெடிகுண்டு செயலிழக்கும் குழு உள்ளிட்ட காவல்துறை குழுவினர் நிறுவன வளாகத்துக்கு வந்தனர். வெடிகுண்டு செயலிழப்பு மற்றும் நாய்ப் படையினர் அந்த வளாகத்தை தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை.
வெடிகுண்டு மிரட்டல் ஒரு புரளி என்று காவல்துறையினர் உறுதி செய்ததையடுத்து, வெளியேற்றப்பட்ட ஊழியர்கள் மீண்டும் அலுவலகத்துக்கு திரும்பி வந்து தங்கள் வழக்கமான பணிகளை தொடர அனுமதிக்கப்பட்டனர்.
வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், டிசிஎஸ் நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது அந்நிறுவனத்தின் முன்னாள் பெண் ஊழியர் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக காவல்துறையின் கூறுகையில், பெங்களூருவில் இருந்து 500 கி.மீட்டர் தொலைவில் உள்ள பெலகாவியை சேர்ந்த இந்த நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் பெண் ஊழியர்தான் இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
நிறுவனத்தின் டிரைவருக்கு போன் செய்து அலுவலகத்தில் போன் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். வேலையை விட்டு நீக்கியதால் நிறுவனத்தின் மீது ஏற்பட்ட வெறுப்பு காரணமாக இந்த செயலை அந்த பெண் செய்துள்ளார். அவரை கண்டுபிடித்து கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன என்று தெரிவித்தார்.
இந்த ஆண்டில் டிசிஎஸ் நிறுவன வளாகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக புரளி வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது இது முதல் முறையல்ல. கடந்த மே மாதம் ஹைதராபாத்தில் உள்ள அந்நிறுவன வளாகத்துக்கு புரளி வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனையடுத்து அந்த வளாகத்தில் இருந்த அந்நிறுவனத்தின் 1,500 பணியாளர்களும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர் என்பது குறி்ப்பிடத்தக்கது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!



Click it and Unblock the Notifications