ஸ்டிரைக்கில் குதிக்கும் வங்கி ஊழியர்கள்.. மார்ச்24-25 வங்கி சேவை பாதிப்பு..!!

பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்புவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 9 வங்கி ஊழியர் சங்கங்களின் உயரிய அமைப்பான வங்கி சங்கங்கள் ஐக்கிய கூட்டமைப்பு அண்மையில் வேலை நிறுத்த போராட்ட நோட்டீஸை அறிவித்து இருந்தது. இதனையடுத்து வங்கி ஊழியர்கள் சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பை பேச்சுவார்த்தைக்கு இந்திய வங்கிகள் சங்கம் அழைத்தது. திட்டமிட்டப்படி இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தின. அப்போது, பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும், பணிச்சுமையை குறைக்கவும் அனைத்து காலியாக உள்ள அனைத்து பணியிடங்களுக்கும பணியாளர்களை பணியமர்த்த வேண்டும்.

பணி பாதுகாப்பு மற்றும் நியாயமான ஊதியத்தை வழங்க அனைத்து தற்காலிக ஊழியர்களையும் முறைப்படுத்த வேண்டும். பணி-வாழ்க்கை சமநிலையை மேம்படுத்த வாரத்துக்கு 5 நாள் வேலையை செயல்படுத்த வேண்டும். பொதுத்துறை வங்கிகளில் போதுமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்காக பணியாளர்கள் மற்றும் அதிகாரி இயக்குனர் பதவிகளை நிரப்புதல் வேண்டும். கிராஜூவிட்டி உச்சவரம்பை ரூ.25 லட்சமாக உயர்த்தி அதை அரசு ஊழியர்களின் சலுகைகளுடன் இணைக்க வேண்டும். ஊழியர்களுக்கு நிதி நிவாரணம் வழங்க வருமான வரியிலிருந்து கிராஜூவிட்டிக்கு விலக்கு அளிக்க வேண்டும். வாடிக்கையாளர்களின் தாக்குதல் மற்றும் துஷ்பிரயோகத்திற்கு எதிராக வங்கி அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

ஸ்டிரைக்கில் குதிக்கும் வங்கி ஊழியர்கள்.. மார்ச்24-25 வங்கி சேவை பாதிப்பு..!!

வங்கித்துறையில் நியாயமற்ற தொழிலாளர் நடைமுறைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். வங்கிகளில் நிரந்தர வேலைகளை அவுட்சோர்சிங் செய்வதை நிறுத்த வேண்டும், வங்கி ஊழியர்களுக்கான வேலைவாய்ப்பை பாதுகாக்க வேண்டும் என்பது உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வங்கி சங்கங்கள் ஐக்கிய கூட்டமைப்பு முன்வைத்தது. ஆனால் பல கோரிக்கைகளை வங்கிகள் சங்கம் ஏற்கவில்லை என தகவல். இதனையடுத்து வங்கிகள் சங்கத்துடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாக வங்கி சங்கங்கள் ஐக்கிய கூட்டமைப்பு அறிவித்தது. இதனையடுத்து போராட்டம் திட்டமிட்டப்படி நடக்கும் என்று அறிவித்தது.

வங்கி சங்கங்கள் ஐக்கிய கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எல்.சந்திரசேகர் கூறுகையில், திட்டமிட்டப்படி 24 மற்றும் 25ம் தேதிகளில் நாடு தழுவிய 2 நாள் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் நடைபெறும் என்று தெரிவித்தார். வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக ஒட்டு மொத்தமாக 4 நாட்கள் வங்கி சேவைகள் முடங்கும் அபாயம் உள்ளது. மாதத்தின் 4வது சனிக்கிழமை வரும் 22ம் தேதி வருகிறது. அதற்கு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாகும். அதற்கு அடுத்த 243,25ம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் ஈடுபட போவதாக அறிவித்துள்ளதால் தொடர்ச்சியாக 4 நாட்கள் வங்கி சேவை பாதிக்கப்படும். எனவே பொதுமக்கள் வங்கி சேவைகளை பெறுவதற்கு முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுவது நல்லது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+