மோடி 3.0: எந்தெந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்?

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்திருக்கிறது. இந்த நிலையில் குறிப்பிட்ட மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

மீண்டும் பாரதிய ஜனதா தலைமையிலான அரசே அமைந்திருப்பதால் முந்தைய ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களும் கொள்கைகளும் அவ்வாறே தொடரும் என்ற நம்பிக்கை முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

மோடி 3.0: எந்தெந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்?

Defence Fund: மோடி அரசு பாதுகாப்பு துறைக்கு அதிக முக்கியத்துவம் வழங்க கூடியது. ராணுவத்திற்கு தேவையான பொருட்களை நவீனப்படுத்த வேண்டும், நவீனமான ராணுவ உபகரணங்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய வேண்டும் என ஆத்மநிர்பார் பாரத் என்பன உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி உள்ளது.

அடுத்த 5 ஆண்டுகளில் இந்த துறை சார்ந்த பங்குகள் நல்ல வளர்ச்சி அடையும் என சொல்லப்படுகிறது. இந்தியாவில் தற்போது ஹெச்டிஎஃப்சி டிபன்ஸ் ஃபண்ட்( HDFC Defence Fund ) பாதுகாப்புத் துறை சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்கிறது.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கொண்டு வரப்பட்ட இந்த மியூச்சுவல் ஃபண்ட் இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் மிகச்சிறந்த முறையில் செயலாற்றி வரக்கூடிய நிறுவனங்களில் முதலீடு செய்கிறது.

அண்மையில் மோதிலால் ஓஸ்வால் நிஃப்டி இந்தியா டிஃபன்ஸ் இன்டெக்ஸ் ஃபண்டினை (Motilal Oswal Nifty India Defence Index Fund) அறிமுகம் செய்தது. இந்தியாவை பொறுத்தவரை 15 நிறுவனங்கள் முழுக்க முழுக்க பாதுகாப்புத் துறை சம்பந்தப்பட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளன. மே 31ஆம் தேதி நிலவரப்படி இவை ஆண்டுக்கு 177% என்ற அளவில் வளர்ச்சி அடைந்துள்ளன.

Manufacturing funds: பிரதமர் மோடி தலைமையிலான அரசு மேக் இன் இந்தியா திட்டத்தில் மிகவும் கவனம் செலுத்துகிறது. எனவே இந்தியாவில் உற்பத்தி துறை என்பது நல்ல எதிர்காலம் மிக்க துறையாகவும் இருந்து வருகிறது. இவ்வாறு உற்பத்தி துறை சார்ந்த பங்குகளை தேர்வு செய்து முதலீடு செய்யக்கூடிய மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம் என சொல்லப்படுகிறது.

கோடக் மனுஃபேக்சர் இன் இந்தியா ஃபண்ட் (Kotak Manufacture in India Fund) இரண்டு ஆண்டுகளில் 32 சதவீத லாபத்தை தந்துள்ளது. ஆதித்யா பிர்லா சன் லைப் மனுஃபேக்சரிங் ஈக்விட்டி ஃபண்ட் (Aditya Birla Sun Life Manufacturing Equity Fund) 19 சதவீத லாபத்தையும், ஐசிஐசிஐ ப்ருடன்ஷியல் மனுஃபேக்சரிங் ஃபண்ட் ( ICICI Prudential Manufacturing Fund) ஐந்து ஆண்டுகளில் 26 சதவீத லாபத்தையும் பெற்று தந்துள்ளது.

Infrastructure funds: உள்கட்டமைப்பு துறை சார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். மத்திய அரசு இந்தியாவில் சாலை கட்டமைப்பு மற்றும் ரயில் போக்குவரத்து துறை, மின்சார கட்டமைப்புகள் என பல்வேறு துறைகளிலும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

ஸ்மார்ட் ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட திட்டங்களை இதற்கு உதாரணமாக கூறலாம். எனவே இத்தகைய துறைகளில் முதலீடு செய்யக்கூடிய மியூச்சுவல் ஃபண்டுகளை தேர்வு செய்தால் நல்ல லாபம் இருக்கும் என முதலீட்டு நிபுணர்கள் கணிக்கின்றனர்.

இந்தியாவில் கோடக் இன்ஃபிராஸ்ட்ரக்சர் அண்ட எக்னாமிக் ரிஃபார்ம் ஃபண்ட் (Kotak Infrastructure And Economic Reform Fund), குவான்ட் இன்ஃபிராஸ்ட்ரக்சர் ஃபண்ட் (Quant Infrastructure Fund), டாடா இன்ஃபிராஸ்ட்ரக்சர் ஃபண்ட்( Tata Infrastructure), எஸ்பிஐ (SBI Infrastructure Fund) என பல்வேறு நிறுவனங்களின் மியூச்சுவல் ஃபண்டுகள் உள்ளன. இவற்றை தேர்வு செய்யலாம் என பரிந்துரைக்கின்றனர்.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+