ரூ.30 லட்சம் சம்பளம் தரும் வேலை வேண்டாம்.. சமோசா விற்று ரூ.200 கோடி சாம்ராஜ்யத்தை உருவாக்கிய ஜோடி!

கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை, கைநிறைய சம்பளம், பார்த்து பார்த்து கட்டிய சொந்த வீடு என எல்லோரும் ஆசைப்படும் அனைத்து வசதிகளும் இருந்தும் நிதி சிங் மற்றும் அவருடைய மனைவி ஷிகர் வீர் சிங், தங்களுடைய கம்ஃபர்ட் சோனிலிருந்து வெளியில் வந்து 2015-ஆம் ஆண்டு ஒரு சமோசா கடையை திறந்தனர். அன்று அவர்கள் திறந்த கடை தான் இன்று ரூ.200 கோடி மதிப்புள்ள ஒரு பெரு நிறுவனமாக மாறி நிற்கிறது.

கல்லூரி படிப்பும் காதல் வாழ்க்கையும்: ஹரியானாவை சேர்ந்தவர்கள் நிதி சிங் மற்றும் ஷிகர். இருவரும் குருசேத்திர பல்கலைக்கழகத்தில் ஒன்றாக பயோடெக்னாலஜி படித்து வந்தனர். அங்கு தான் இருவரும் முதன்முதலாக சந்தித்துக் கொண்டனர். 2007-ஆம் ஆண்டில் தங்கள் கல்லூரி படிப்பை முடித்த பிறகு இருவரும் வெவ்வேறு பாதைகளில் சென்றுவிட்டனர்.

ரூ.30 லட்சம் சம்பளம் தரும் வேலை வேண்டாம்.. சமோசா விற்று ரூ.200 கோடி சாம்ராஜ்யத்தை உருவாக்கிய ஜோடி!

நிதி சிங் அமெரிக்காவைச் சேர்ந்த மருந்து நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். அங்கு அவருக்கு மாத சம்பளமாக 17,000 ரூபாய் வழங்கப்பட்டது. தன் திறமையால் பல பிரமோஷன் கிடைத்ததால் 2017-ஆம் ஆண்டு வருடத்திற்கு ரூ.30 லட்சம் வருமானம் பெறும் நிலைக்கு உயர்ந்தார். ஷிகர் ஹைதராபாத்தில் உள்ள லைஃப் சென்ஸ் நிறுவனத்தில் எம்டெக் பயோ டெக்னாலஜி முடித்தார். பின்னர் பெங்களூரில் உள்ள பயோகான் நிறுவனத்தில் R&D துறையில் பணிபுரிந்து வந்தார்.

சொந்தத் தொழில் குறித்த யோசனை: சமோசாவை மட்டுமே கொண்டு ஒரு பெரிய பிராண்டை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் ஷிகருக்கு அவர் படிக்கும் போதே இருந்தது. பர்கர், பீட்சா போன்ற வெளிநாட்டு உணவுகளுக்கு பெரிய பெரிய கடைகள் வந்துவிட்டன. ஆனால் இந்திய மக்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் தின்பண்டமான சமோசா தெருவோரக்கடைகளில் மட்டும்தான் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. எனவே நாடு முழுக்க இந்த சமோசாவை கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் இருந்தது.

நிதி சிங் தன் யோசனையை ஷிகரிடம் பகிர்ந்து கொண்டார். ஷிகரும் இறுதியில் சம்மதித்தார். இதனால் 2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஷிகர் தன்னுடைய பயோகான் வேலையை ராஜினாமா செய்தார். இருவரும் இணைந்து ஒன்றாக வேலை செய்ய தொடங்கினர். பிப்ரவரி 2026-ஆம் ஆண்டு பெங்களூரில் "சமோசா சிங்" என்ற கடையை திறந்தனர்.

ஆரம்பத்தில் சிறிய கடையாக தொடங்கினர். அதற்காக தங்களுடைய சொந்த சேமிப்பை மட்டுமே பயன்படுத்தினர். ஆனால் விரைவில் ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனத்திடம் இருந்து மிகப்பெரிய ஆர்டர் கிடைத்தது. இதனால் தங்களுடைய சின்ன சமையலறையில் அவ்வளவு ஆர்டர்களை செய்ய முடியாது என்பதை உணர்ந்து ஒரு உற்பத்தி மையம் அமைக்க முடிவு செய்தனர். அதற்காக முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்ட இந்த தம்பதியினர் விரும்பவில்லை.

இதன் காரணமாக பெங்களூரில் இருந்த தங்களுடைய 4 பெட்ரூம் வீட்டை விற்க முடிவெடுத்தனர். அந்த வீட்டின் மதிப்பு சுமார் ரூ.80 லட்சம். ஆசை ஆசையாக பார்த்து வடிவமைத்த வீட்டை பிசினஸ்க்காக விற்பனை செய்தனர். இன்னும் சொல்லப்போனால் அந்த வீடு கட்டப்பட்டதிலிருந்து ஒரு நாள் கூட அவர்கள் முழுமையாக அங்கு வசிக்க வில்லை. அதற்குள்ளேயே தொழிலுக்காக அதை விற்று பணம் திரட்டினர். அந்த பணத்தை கொண்டு பெங்களூரின் எலக்ட்ரானிக் சிட்டியில் ஒரு பெரிய சமையலறையை அமைத்தனர்.

தனித்துவமான உற்பத்தி: நீண்ட நேரம் சமோசா மொறு மொறுப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக பல விஷயங்களை செய்தனர். அதேபோல வழக்கமாக பயன்படுத்தப்படும் உருளைக்கிழங்கு பட்டாணி பூரணத்திற்கு பதிலாக பட்டர் சிக்கன், கடாய் பன்னீர் போன்ற புதுமையான பூரணங்களை கொண்ட சமோசாக்களை தயார் செய்தனர். இதற்காக 10,000 மணி நேரத்திற்கு மேல் செலவிட்டதாக சமோசா சிங் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்களுடைய சமோசாக்களுக்கு வரவேற்பு அதிகரித்தது.ஆன்லைன் டெலிவரி, கார்ப்பரேட் ஆர்டர், கிளவுட் கிச்சன் என இவர்களுடைய வணிகம் தொடர்ந்து வேகம் எடுத்தது. கொரோனா பெருந் தொற்று காலத்தில் உணவுத்துறை கடும் சவால்களை சந்தித்தது. ஆனால் அதையும் தாண்டி வெற்றிகரமாக மீண்டும் வந்தனர்.

அன்று பெங்களூரில் மட்டும் தொடங்கப்பட்ட சமோசா சிங் இன்று மும்பை, புனே, சென்னை, டெல்லி, ஹைதராபாத் என பல முக்கிய நகரங்களிலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. Tracxn இணையதளத்தின் தகவல் படி சமோசா சிங் 2025-ஆம் நிதியாண்டில் ரூ.18 கோடி வருவாயை பதிவு செய்துள்ளது. தற்போது இந்நிறுவனத்தின் மதிப்பு 20.6 மில்லியன் டாலராக இருக்கிறது. அதாவது இந்திய மதிப்புக்கு 200 கோடி ரூபாய்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+