பணம் சம்பாதித்து வாழ்க்கையில் செட்டிலாக வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கிறது. தொழில் செய்தால் அல்லது நல்ல சம்பளத்தில் வேலை அல்லது வெளிநாட்டில் வேலை பார்த்தால் வேகமாக முன்னேறி விடலாம் என்ற எண்ணம் பலருக்கும் உள்ளது. அதுவும் ஒரு வகையில் உண்மைதான்.
அதேசமயம் கையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு ஏன் அலைய வேண்டும், உங்களுக்கு விவசாய நிலம் இருந்தால், இந்தியாவில் மிகவும் குறைவாகவே சாகுபடி செய்யப்படும் அற்புதமான பயிரை சாகுபடி செய்தால் நல்ல வருமானம் பார்க்கலாம். அது வேறு எதுவும் இல்லையங்க நம்ம பெருங்காயம்.

இந்திய சமையலறைகளில் எப்போதுமே பெருங்காயம் இடம் பெற்று இருக்கும். உணவின் சுவையை அதிகரிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. மேலும், உணவு பொருட்கள் மற்றும் ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பிலும் பெருங்காயம் பயன்படுத்தப்படுகிறது.
நம் நாட்டில் மிகவும் அரிதாகவே பெருங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. இதனால் பெருங்காயின் தேவை இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்யப்படுகிறது. எனவே நீங்கள் உங்க விவசாய நிலத்தில் பெருங்காயம் சாகுபடி செய்தால் நல்ல வருமானம் ஈட்ட முடியும்.
ஒரு ஹெக்டேர் பரப்பில் பெருங்காயம் சாகுபடி செய்ய ரூ.3 லட்சம் செலவாகும். ஐந்து ஆண்டுகள் சாகுபடி செய்த பின், ரூ.10 லட்சம் வரை லாபம் ஈட்டலாம். சந்தையில் ஒரு கிலோ பெருங்காயத்தின் விலை ரூ.35 முதல் 40 ஆயிரம் வரை உள்ளது.
எனவே நல்ல தரமான பெருங்காயத்தை சாகுபடி செய்தால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பெருங்காயத்தை விற்பனை செய்ய பெரிய சந்தைகளுடன் கூட்டு சேரலாம். மேலும் உங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் விற்பனை செய்யலாம்.
பெருங்காயத்தை எந்த மாதம் வேண்டுமானாலும் பயிரிடலாம் இருப்பினும் ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரையிலான காலம் உகந்ததாக இருக்கும். பெருங்காயம் வளர்ச்சிக்கு உகந்த வெப்பநிலை 20 முதல் 30 டிகிரி வரை இருக்கும். குளிர்ந்த மற்றும் உலர்ந்த நிலம் பெருங்காயம் பயிரிட பொருத்தமானது.
பெருங்காயம் குளிர் சூழலில் சிறப்பாக வளரும் தாவரமாகும். கடுமையான சூரிய ஒளி தாக்கம் தாவரத்தை அழித்து விடும். பெருங்காயம், தாவர வேரின் சாற்றில் இருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. பின் நீண்ட செயல்முறைகளுக்கு பிறகு வீட்டு பெருங்காயத்தின் வடிவத்தை எடுக்கும்.


Click it and Unblock the Notifications