ஆசியாவிலேயே மிக பணக்கார கிராமம் இந்தியாவின் இந்த மாநிலத்துல தான் இருக்கா?

சென்னை: பொதுவாக கிராமம் என்றவுடன் சேரும் சகதியுமான சாலைகள், மாட்டு வண்டிகள் மின்சாரம் இல்லாத வீடுகள், நிலத்தில் வேலை செய்யும் விவசாயிகள் ஆகியவைதான் நம் நினைவுக்கு வரும். ஆனால் பல்வேறு நாடுகளிலும் மிகவும் முன்னேறிய கிராமங்களும் இருக்கின்றன. அந்த வகையில் ஆசியாவிலேயே பணக்கார கிராமம் ஒன்று இருக்கிறது. அந்த கிராமம் சீனாவிலோ அல்லது ஜப்பானிலோ, தென்கொரியாவிலோ கிடையாது. இந்த நகரம் இந்தியாவில் இருக்கிறது.

இந்தியாவை சேர்ந்த பூஜ் பகுதியில் இருக்கும் கிராமத்தை பார்த்தால், இந்திய கிராமங்கள் குறித்த நமது எண்ணங்களே மாறிவிடும். மாதாபூர் என அறியப்படும் இந்த கிராமம் தான் ஆசியாவிலேயே மிகப் பணக்கார கிராமம். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதிக்கு உட்பட்டது இந்த கிராமம்.

ஆசியாவிலேயே மிக பணக்கார கிராமம் இந்தியாவின் இந்த மாநிலத்துல தான் இருக்கா?

இங்கே 32 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் சுமார் 7000 கோடி மதிப்பிற்கு மொத்தமாக ஃபிக்சட் டெபாசிட் வைத்திருக்கின்றனர் . ஏனெனில் இந்த கிராமத்தை சேர்ந்த பலரும் வெளிநாடு வாழ் இந்தியர்களாக இருப்பதால் இவர்களது செல்வ வளம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறதாம்.

இங்கே வரக்கூடிய 65% பணம் வெளிநாடு இந்தியர்கள் மூலம் வங்கிகள் வழியாக டெபாசிட் செய்யப்படுகிறது . மாதாப்பூரை பொறுத்தவரை சுமார் 20000 வீடுகள் இங்கே இருக்கின்றன. பெரும்பாலும் இங்கே இருப்பவர்கள் படேல் சமூகத்தை சேர்ந்தவர்கள்.

அனைத்து பொது மற்றும் தனியார் நிறுவன வங்கிகளும் இங்கே செயல்படுவது தான் ஆச்சரியம். கிட்டத்தட்ட 17 வங்கிகள் இங்கே தங்களுடைய கிளைகளை நிறுவி வங்கி செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளன. அதுமட்டுமின்றி மேலும் பல்வேறு வங்கிகளும் இங்கே தங்களது கிளைகளை திறப்பதற்கு ஆர்வமாக இருக்கின்றன. ஏனெனில் வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய பண பரிமாற்றம் என்பது இந்த கிராமத்தில் மிக அதிகமாக இருக்கிறது.

இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் ஆப்பிரிக்க நாடுகளின் கட்டுமான தொழிலில் ஈடுபடக்கூடிய நபர்கள் ஆவர். சிலர் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளிலும் வசிக்கின்றனர்.

வெளிநாட்டில் வேலை செய்தாலும் தங்களுடைய சொந்த கிராமத்துடன் அவர்கள் தொடர்ந்து பிணைப்புடன் இருப்பதாக இந்த பகுதிக்கான முன்னாள் தலைவர் போரில் கேரா தெரிவிக்கிறார். இவர்கள் பெருமளவிலான தொகையை தங்களது குடும்பத்தினருக்கு அனுப்புவதாகவும் இந்த நாள் இந்த கிராமம் மிக வளமையான செல்வ வளம் மிக்க கிராமமாக இருப்பதாகவும் கூறுகின்றனர்.

இங்கே தண்ணீர், சாலை வசதி மற்றும் பங்களாக்கள், பள்ளிகள் ,ஏரிகள், கோயில்கள் என அனைத்தும் மிக வளமையானதாக இருக்கும் என இங்கே செயல்படும் ஒரு வங்கியின் மேலாளர் கூறுகிறார். மாதாப்பூரில் மொத்தம் 20 ஆயிரம் வீடுகள் இருக்கின்றன இதில் சுமார் 1200 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் வசிப்பவர்களாக இருக்கின்றனர்.

அவர்கள் அளிக்கும் நிதி உதவி மூலம் இந்த பகுதியில் பள்ளி கல்லூரிகள் மற்றும் சுகாதாரத்துறை நீர் அணைகள் கோயில்கள் ஏரிகள் ஆகியவை மேம்படுத்தப்பட்டுள்ளன. லண்டனில் மாதாப்பூர் சங்கம் என்ற ஒன்றை நிறுவி தங்கள் கிராமத்தில் புகழை வெளி உலகிற்கு வெளிப்படுத்தி வருகிறார்களாம் இந்த கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர்கள்.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+