பொதுவாக நாம் வாங்கும் உணவு பொருட்கள் ருசியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என வாங்கி சாப்பிடுகிறோம். ஆனால் ஆடம்பர வகை உணவுகள் என சில வகையான உணவுப் பொருட்கள் உள்ளன. நாம் உண்ணும் உணவு வகைகள் நமது உடலுக்கு சத்துக்களையும் ஆற்றலையும் தர வேண்டியது அவசியம். இந்திய உணவுகளில் தற்போது உலக அளவில் மிகவும் பிரபலமடைந்திருப்பது தென்னிந்தியாவின் இட்லி, சாம்பார் மற்றும் தோசை தான்.
ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை விட பணக்காரர்களுக்கு உணவுப் பொருட்களின் விலைகள் இயல்பாகவே அதிகமாக இருக்கும். அந்தவகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்த பணக்காரர் முகேஷ் அம்பானியின் இளையமகன் ஆனந்த் அம்பானி - ராதிகா ஆகியோரின் திருமண விழா யாரும் எளிதில் மறக்க முடியாது. அவ்வளவு ஆடம்பரங்களுடன் திருமணம் நடந்தது. ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட்டின் 3 நாள் Pre-Wedding கொண்டாட்டங்களுக்கு மொத்தம் ரூ.1260 கோடி செலவாகியுள்ளதாக கூறப்படுகிறது. அதில் கேட்டரிங் ஒப்பந்தத்திற்கு மட்டும் ரூ. 200 கோடி கொடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், பிரபலங்கள் என்றாலே உடுத்தும் உடை முதல் சாப்பிடும் உணவுகள் வரை அனைத்தும் ஆடம்பரமாகதான் இருக்கும். அதன் விலைகளும் அப்படிதான் அதிகமாக இருக்கும். அந்தவகையில், நாட்டின் அரசியல் தலைவர்களும் இந்த வகையைச் சேர்ந்தவர்கள் என்பதில் விதிவிலக்கல்ல. ஏனென்றால் அவர்களும் பிரபலங்கள். கூடுதலாக, பதவி மற்றும் அந்தஸ்தும் உள்ளது. இதன் விளைவாக, அத்தகைய தலைவர்கள் ஒவ்வொரு நாளும் சாப்பிடும் உணவின் விலையும் அதிகமாக உள்ளது.
அதன்படி, நம் நாட்டின் பிரதமர் மோடி தனது அன்றாட உணவுக்கு எவ்வளவு செலவிடுகிறார் தெரியுமா?. பிரதமர் மோடி சைவ உணவை மட்டுமே சாப்பிடுகிறார். பசு நெய்யில் செய்யப்பட்ட கிச்சடியையும், வேகவைத்த காய்கறிகள் மற்றும் பழங்களையும் அவர் சாப்பிடுகிறார். பாதாம் மாவில் செய்யப்பட்ட ரொட்டி, வெண்டைக்காய், கீரை, பருப்பு, காய்கறிகள் மற்றும் சிறிது சாதம் ஆகியவற்றை அவர் சாப்பிடுகிறார்.
அவர் எப்போதும் மதிய உணவுக்குப் பிறகு shrikhand சாப்பிடுவார். இது ஒரு பாரம்பரிய இனிப்பு வகை. மாலைக்கு முன்பே உணவை முடித்துவிடுவார். அதிகாலை 4 மணிக்கு உடற்பயிற்சி செய்வார். யோகா அவசியம். அதனால்தான் இந்த வயதிலும் அவர் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறார். பிரதமர் மோடி துர்கா தேவியின் பக்தர். அவர் நிறைய பூஜை செய்கிறார். பெரும்பாலான நேரங்களில் விரதமும் இருப்பார். இது அவரது உடல்நலத்தின் ரகசியமும் கூட. இருப்பினும், அவரது உணவு செலவு மற்ற அரசியல்வாதிகளை விட குறைவு. அவர் நாடாளுமன்றத்தில் இருந்தாலும் சரி, வீட்டில் இருந்தாலும் சரி இந்த உணவு முறைகளையே கடை பிடித்து வருகிறார். அந்தவகையில், இவர் ஒருநாளைக்கு உணவுக்காக 50 டாக்கா செலவழிக்கிறார். இது இந்திய ரூபாயில் 35.78. ஆகும். முன்னதாக, காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பிரதமர் மோடியின் உணவு பட்டியல் குறித்து அவர் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். ஆனால் அவர்களால் அதை நிரூபிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications