இந்தியாவின் புகழ்பெற்ற கோயிலாக திருப்பதி திருமலை பெருமாள் கோயில் திகழ்கிறது . நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் ஏழுமலையானை தரிசிப்பதற்காக திருப்பதிக்கு வருகை தருகின்றனர் .
திருமலை திருப்பதி தேவஸ்தானம் அமைப்புதான் கோயிலை நிர்வாகம் செய்து வருகிறது. ஏழுமலையான் கோயிலுக்கு வருகை தரக்கூடிய விஐபிகளுக்கு நிர்வாகம் சார்பில் பட்டு சால்வை அணிவிக்கப்படுவது வழக்கம். ஆனால் இத்தனை ஆண்டுகளாக திருமலை கோவிலில் விஐபிகளுக்கு போர்த்தப்பட்ட சால்வை பட்டு சால்வையே இல்லை என்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகி பக்தர்களை கலங்கடிக்க வைத்துள்ளது.

2015 முதல் 2025 வரை கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக திருப்பதி தேவஸ்தானத்தில் போலியான பட்டு சால்வைகள் விநியோகம் செய்யப்பட்டிருக்கின்றன . அதை கோயில் நிர்வாகம் விஐபிகளுக்கு வழங்கி இருக்கிறது . பக்தர்கள் இவை தூய்மையான மல்பெரி பட்டு சால்வைகள் என இத்தனை ஆண்டுகளாக நினைத்திருந்தனர். ஆனால் அது வெறும் பிளைன் பாலிஸ்டர் என்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவரான பி ஆர் நாயுடு பட்டு சால்வைகளுக்கான ஒப்பந்தத்தை ஆய்வு செய்யுமாறு உத்தரவிட்டிருக்கிறார். இதனை அடுத்து பட்டு சால்வைகளை ஆய்வகத்திற்கு அனுப்பவும் கூறியுள்ளார். வழக்கமாக இந்த பட்டு சால்வை கோயிலுக்கு தானம் வழங்குபவர்களுக்கும், விஐபி தரிசன டிக்கெட்டில் வருபவர்களுக்கும் தான் வழங்கப்படும் .

ஆயிரக்கணக்கில் இந்த பட்டு சால்வை என்பது திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதற்காக பல கோடிகளை வழங்குகிறார்கள் . ஆனால் அண்மையில் நடத்தப்பட்ட விசாரணையில் இத்தனை ஆண்டுகளாக வழங்கப்பட்டது பட்டு அல்ல வெறும் பாலிஸ்டர் சால்வை என்பது தெரிய வந்திருக்கிறது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் வழங்கியிருக்கக்கூடிய ஒப்பந்தத்தின்படி இந்த சால்வை முற்றிலும் தூய்மையான மல்பெரி பட்டால் நெய்யப்பட்டதாக இருக்க வேண்டும்.
ஓம் நமோ வெங்கடேசா என்பது சமஸ்கிருத மொழியிலும் தெலுங்கு மொழியிலும் அச்சிடப்பட்டிருக்க வேண்டும் , அது தவிர சங்கு, சக்கரம் , நாமம் உள்ளிட்டவையும் அதில் அச்சிடப்பட்டிருக்க வேண்டும். சால்வையின் எடை எவ்வளவு இருக்க வேண்டும், அளவு எவ்வளவு இருக்க வேண்டும் ஆகிய அனைத்துமே அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் தான் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த பட்டு சால்வைகளை எடுத்து ஆய்வு செய்தபோது. தாங்கள் ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட எந்த ஒரு தரத்தையும் அது திருப்தி படுத்தவில்லை என்பதை கண்டுபிடித்து இருக்கின்றனர். பெங்களூரு மற்றும் தர்மாபுரத்தில் உள்ள மத்திய பட்டு வாரியத்தின் ஆய்வகத்திற்கு அனுப்பி பரிசோதனை செய்தபோது, இரண்டு ஆய்வகங்களும் அவை மல்பெரி பட்டு கிடையாது 100 சதவீதம் பாலிஸ்டர் என தெரிவித்திருக்கின்றன.
விஆர்எஸ் எக்ஸ்போர்ட் என்று நிறுவனம் தான் இத்தனை ஆண்டுகளாக இப்படி போலியாக மோசடி செய்து கிட்டத்தட்ட 55 கோடி வரை சுருட்டி இருக்கிறது. ஒவ்வொரு சால்வைக்கும் திருப்பதி தேவஸ்தானம் 1,389 ரூபாயை கட்டணமாக செலுத்தி இருக்கிறது. இந்த மோசடி தொடர்பாக ஆந்திர பிரதேச மாநில ஊழல் தடுப்பு அமைப்பு விசாரணை நடத்த வேண்டும் என தேவஸ்தான நிர்வாகம் கேட்டுக் கொண்டிருக்கிறது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications