உலகிலேயே மிகவும் பணக்கார இந்து கோவிலாக இருக்கும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலின் நிர்வாக அமைப்பான திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு (TTD) பக்தர்கள் வழங்கும் தங்க காணிக்கைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த ஆண்டு தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இருப்பினும், 1000 கிலோ தங்கம் காணிக்கையாக மக்கள் அளித்துள்ளனர்.
தங்கம் விலை தினமும் உச்சத்தை தொட்டு வரும் வேளையில், 2023 ஆம் ஆண்டில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைமை தெய்வமான ஸ்ரீ வெங்கடாஜலபதி சுவாமிக்கு 1,031 கிலோ கிராம் தங்கம் காணிக்கையாக வழங்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.773 கோடி என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த தங்கத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் தங்கக் கடன் திட்டத்தின் கீழ் சுமார் 11,329 கிலோ தங்கத்தை டெபாசிட் செய்து வைத்துள்ளது, இதன் நாணய மதிப்பு ரூ.8,496 கோடியாகும். தங்கம் விலை உயர உயர இதன் மதிப்பு உயரும். இந்த ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதி தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் $2,400 ஐ தாண்டியது.
கடந்த நான்கு ஆண்டுகளில் 4 டன் தங்கம்: 2020 ஆம் ஆண்டில் உலகளவில் கொரோனா பெருந்தொற்று, சர்வதேச பொருளாதார பிரச்சனைகள், பணிநீக்கம், பணவீக்கம் என அனைத்தையும் தாண்டி திருப்பதி வெங்கடாஜலபதி-க்கு மக்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் டிடிடிக்கு கிட்டத்தட்ட நான்கு டன் தங்கம் காணிக்கையாக அளித்துள்ளனர். வருடத்திற்கு சராசரியாக ஒரு டன் தங்கம் அதாவது 1000 கிலோ தங்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
மத்திய கிழக்கு பதற்றங்கள் மற்றும் ரஷ்யா - உக்ரைன் போர் ஆகிய உலக அசாத்திய நிலை காரணமாக தற்போது தங்கத்தின் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில், இந்தியாவில் தங்கம் விலை 10.6% உயர்ந்துள்ளது.
தங்கம் விலை வெள்ளிக்கிழமை ஆசிய சந்தை நேரத்தில் ஒரு அவுன்ஸ் 2,414 டாலர் என்ற புதிய வரலாற்று உச்சம் தொட்டு உள்ளது. ஈரான் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஈரான் நாட்டில் எவ்விதமான ஏவுகணை தாக்குதலும் நடத்தப்படவில்லை, வெடிப்பு சத்தம் கேட்டது, ராணுவம் வான் பாதுகாப்பு அமைப்புகளை ஆக்டிவேட் செய்தது என விளக்கம் கொடுத்தது.
இதன் மூலம் 2414 டாலர் வரையில் உயர்ந்த தங்கம் விலை 2385 டாலருக்கு சரிந்தது. இதேவேளையில் அமெரிக்க டாலர் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தாலும், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் தங்கம் விலை உயர்ந்தள்ளது. முதல் முறையாக தங்கம் விலை 2400 டாலர் என்ற அளவீட்டை தாண்டி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எம்சிஎக்ஸ் சந்தையிலும் காலை வர்த்தகம் துவங்கும் போது தடாலடியாக உயர்ந்து ஈரான் விளக்கத்திற்கு பின்பு குறைந்துள்ளது. எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.14 சதவீதம் குறைந்து 72,580 ரூபாயாக உள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 550 ரூபாய் உயர்ந்து 68,900 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை 600 ரூபாய் உயர்ந்து 75,160 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது ரீடைல் சந்தையில் விற்கப்படும் தங்கம் விலை, இந்த விலையை தாண்டி ஜிஎஸ்டி கட்டாயம் இருக்கும்.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் அதாவது 440 ரூபாய் உயர்ந்து 55,120 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை ஒரு கிலோ 90000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராமுக்கு 140 ரூபாய் உயர்ந்து 25,240 ரூபாயாக உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலையேற இதுதான் காரணமா? 23 மாதங்களாக தொடரும் வேட்டை!அமெரிக்காவையே ஓரங்கட்டிய நாடுகள்? ஏன்?

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி!!

ஈரான் போர் குறித்த டிரம்பின் ஒற்றை அறிவிப்பு..!! தாறுமாறாக சரிந்த தங்கம் விலை..!!

Gold price today: தங்கம் வாங்க கடைக்கு போறீங்களா? சென்னை, கோவை, மதுரையில் ஷாக் கொடுக்கும் நிலவரம்?

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

தங்கம் விலையில் நடந்த திடீர் டிவிஸ்ட்!! 6 மணி நேரத்தில் நடந்த அதிரடி மாற்றம்!!

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சாமானிய மக்கள் மகிழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: இனி வரும் நாட்களில் விலை ஏறுமா? இறங்குமா?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு; இந்த நிலை அப்படியே நீடிக்குமா?

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

Gold price: நகை பிரியர்களுக்கு குட் நியூஸ் வருமா? 3வது நாளாக குறைந்த தங்கம் விலை மீண்டும் குறையுமா?



Click it and Unblock the Notifications