அயோத்தி ராமர் வந்த பின்பும் மவுசு குறையாத திருப்பதி ஏழுமலையான்.. தங்கமாக கொட்டுது பாஸ்..!!

உலகின் பணக்கார கோவில்களின் பட்டியலில் காலம் காலமாக முதல் இடத்தில் இருக்கும் திருப்பதி ஏழுமலையான் கோவிலை நிர்வாகம் செய்யும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) அதிர்ச்சி அளிக்கும் பல முக்கியமான விஷயத்தை வெளியிட்டு உள்ளது.

அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட்ட பின்பு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் கூட்டத்தின் எண்ணிக்கை பெரிய அளவில் குறைய வாய்ப்புகள் உள்ளதாக முன்பு கணிப்புகள் வெளியானது. ஆனால் கணிப்புகளை எல்லாம் உடைத்து 12 வருடத்தில் எப்போதும் இல்லாத வகையில் ஒரு புள்ளிவிவரம் தற்போது வெளியாகியுள்ளது.

அயோத்தி ராமர் வந்த பின்பும் மவுசு குறையாத திருப்பதி ஏழுமலையான்.. தங்கமாக கொட்டுது பாஸ்..!!

திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) ஒவ்வொரு வருடமும் காணிக்கையாகப் பெற்ற தங்கம் மற்றும் பணம் குறித்த தகவல்களை அதிகாரப்பூர்வமாக வெளியிடும். அந்த வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான தரவுகள் தற்போது வெளியாகியுள்ளது.

குறிப்பாகத் தங்க நன்கொடையின் அளவில் புதிய சாதனை படைத்துள்ளது பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்த போதிலும், திருப்பதி ஏழுமலையான் மீதான பக்தியும், அயோத்தி ராமர் கோவில் திறக்கப்பட்ட பின்பும் இக்கோவில் மீதான மோகமும் குறையவில்லை.

அந்த வகையில் 2023 ஆம் ஆண்டில் மட்டும், சுமார் ரூ.773 கோடி மதிப்பிலான 1,031 கிலோ தங்கத்தைக் காணிக்கையாக TTD
தேவஸ்தானம் பெற்றுள்ளது. காணிக்கையாகப் பெற்றுள்ள தங்கத்தை TTD நிர்வாகம் வங்கியில் டெபாசிட் செய்வது வழக்கம்.

திருப்பதி தேவஸ்தானம் தற்போது, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் தங்க நாணய மாற்று திட்டத்தின் கீழ், ரூ.8,496 கோடி மதிப்பிலான 11,329 கிலோ தங்கத்தை டெபாசிட் செய்துள்ளது. திருமலை வெங்கடாசலபதிக்கு காணிக்கை செலுத்துவதில் பணம் முக்கிய ஆதாரமாக விளங்கினாலும், 2வது விருப்ப தேர்வாக இருப்பது தங்கம் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, இந்த ஆண்டு TTD அமைப்பு சுமார் ரூ.1,161 கோடி ஃபிக்ஸட் டெபாசிட் (தங்கத்தையும் சேர்த்து) செய்துள்ளது. 2013 முதல் 2024 வரையிலான ஆண்டு வாரியான ஃபிக்ஸட் டெபாசிட் விவரங்களை கீழே பார்க்க முடியும்

2013: ரூ.608 கோடி, 2014: ரூ.970 கோடி, 2015: ரூ.961 கோடி, 2016: ரூ.1, 153 கோடி, 2017: ரூ.774 கோடி, 2018: ரூ.501 கோடி, 2019: ரூ.285 கோடி, 2020: ரூ.753 கோடி, 2021: ரூ.270 கோடி, 2022: ரூ.274 கோடி, 2023: ரூ.1, 161 கோடி, 2024: ரூ.1,161 கோடி.

கொரோனா பெருந்தொற்று காலமான 2021 மற்றும் 2022 ஆண்டுகளிலும், 2019 ஆம் ஆண்டிலும் மட்டுமே ஃபிக்ஸட் டெபாசிட் ரூ.500 கோடிக்கு கீழ் குறைந்தது. இந்த ஃபிக்ஸட் டெபாசிட்களில் இருந்து வரும் வட்டி வருமானம் ஆண்டுக்கு ரூ.1,600 கோடி ஆகும்.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வங்கிகளில் உள்ள மொத்த ஃபிக்ஸட் டெபாசிட் தொகை ரூ.13,287 கோடியாக உள்ளது. அதே நேரத்தில், ஸ்ரீ வெங்கடேஸ்வர நித்ய அன்னபிரசாதம் டிரஸ்ட், ஸ்ரீ வெங்கடேஸ்வர ப்ரணதானம் டிரஸ்ட் போன்ற பல்வேறு டிரஸ்ட்டுகள் பக்தர்களிடமிருந்து பெறப்பட்ட நன்கொடையின் மதிப்பு மட்டும் 5,529 கோடி ரூபாய்.

ஒட்டுமொத்தமாக, ஏப்ரல் 2024 நிலவரப்படி, திருப்பதி அறக்கட்டளையின் வங்கிகள் மற்றும் பல அறக்கட்டளைகளின் ரொக்க இருப்பு 18,817 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதை தொடர்ந்து 2024-2025 ஆம் ஆண்டிற்கான மொத்தம் ரூ.5,141.74 கோடி பட்ஜெட்டுக்கு TTD அமைப்பின் நிர்வாக குழு ஒப்புதல் அளித்துள்ளது. ஆண்டு பட்ஜெட் ரூ.5,000 கோடியைத் தாண்டியது இதுவே முதல்முறை.

ஒருவேளை அயோத்தி ராமர் கோயில் ஆதிக்கத்தைக் குறைக்க பட்ஜெட்-ஐ விரிவாக்கம் செய்திருக்கிறதா திருமலை திருப்பதி தேவஸ்தானம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+