இந்தியாவின் முக்கிய டெக்ஸ்டைல் நகரமாக விளங்கும் திருப்பூரில் இருக்கும் முன்னணி டெக்ஸ்டைல் நிறுவனங்களுக்குத் திடீரென வெளிநாட்டு பிராண்டுகளான Primark மற்றும் வால்மார்ட் போன்றவை ஆர்டர்களைக் குவித்து வருகிறது.
3 மாதமாக வெளிநாட்டு ஆர்டர்களின் அளவு தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், பல தொழிற்சாலை புதிய வர்த்தகத்தைப் பெற முடியாமல் தவித்தது.
இந்த நிலையில் தற்போது அடுத்தடுத்து ஆர்டர்கள் குவியத் துவங்கியுள்ளது. என்ன காரணம் தெரியுமா..?
டெக்ஸ்டைல்
அமெரிக்கா, ஐரோப்பா, பிரிட்டன் நாடுகளில் இருந்து டெக்ஸ்டைல் ஆர்டர்களைப் பெற தென்னிந்திய நாடுகள் மத்தியில் அதிகப்படியான போட்டி இருக்கும் காரணத்தால் விலை போட்டியும் மிகவும் கடுமையாக இருக்கும்.
3 மாதம்
இதற்கிடையில் இந்தியாவில் டெக்ஸ்டைல் உற்பத்தி பொருட்கள் விலை தாறுமாறாக அதிகரித்த காரணத்தால் கடந்த 3 மாதமாக வெளிநாட்டில் இருந்து வரும் ஆர்டர்கள் எண்ணிக்கையும், அளவுகளும் குறைந்து வந்தது. இந்த நிலையில் 3 மாதத்திற்குப் பின் விலைவாசி குறைந்த நிலையில் திருப்பூர் நிறுவனங்களுக்கு ஆர்டர் குவிந்துள்ளது.
வியட்நாம், தாய்லாந்து, பங்களாதேஷ்
கடந்த 3 மாத காலகட்டத்தில் இந்திய தயாரிப்புகளின் விலையைக் காட்டிலும் வியட்நாம், தாய்லாந்து, பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் தயாரிப்புகளின் விலை மிகவும் குறைவான விலையில் இருந்த காரணத்தால் போட்டி கடுமையாகியது.
பருத்தி மற்றும் நூல் விலை
இக்காலகட்டத்தில் இந்திய டெக்ஸ்டைல் ஏற்றுமதியாளர் சந்தித்த முக்கியமான பிரச்சனை, பருத்தி மற்றும் நூல் விலை அதிகரிப்பு தான். இக்காரணத்தால் உள்நாட்டுச் சந்தையில் ஆடை தயாரிப்புகள் விலை அதிகரித்து, இதனால் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் விலை போரை சமாளிக்க முடியாமல் வர்த்தகத்தை இழந்தது.
நூல் விலை சரிவு
தற்போது பருத்தி மற்றும் நூல் விலை குறைந்த நிலையில் வியட்நாம், தாய்லாந்து, பங்களாதேஷ் ஆகிய நாடுகளைக் காட்டிலும் விலை குறைவாக அளிக்கப்படுவதால் புதிய வெளிநாட்டு ஆர்டர்கள் குவிந்து வருகிறது. இந்தியாவில் நூல் விலை 10 -15 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
ரூபாய் மதிப்பு
இதேவேளையில் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பும் சரிந்த நிலையில் இது ஏற்றுமதியாளர்களுக்கு கூடுதல் லாபத்தையும், வாய்ப்புகளையும் அளித்துள்ளது. இதே காரணத்தால் வியட்நாம் மற்றும் பங்களாதேஷ் நிறுவனங்களும் அதிக ஆர்டர்களைப் பெற்றுள்ளது, ஆனால் பருத்தி விலை சரிவின் வாய்ப்பு கிடைக்கவில்லை.
திருப்பூர்
திருப்பூரில் 3,000 ஆடை உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன, இதில் 18 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். திருப்பூர் நகரின் வருடாந்திர ஏற்றுமதி மதிப்பு மட்டும் 33,000 முதல் 35,000 கோடி ரூபாய் வரை உள்ளது. தற்போது சந்தையில் பருத்தி வரத்து அதிகரித்துள்ளதால், இந்திய பருத்தி ஸ்பாட் விலைகள் அக்டோபர் மாதத்தில் சுமார் 6.21% குறைந்துள்ளது.
பருத்தி ஒரு பேல் விலை
பருத்தி உற்பத்தி அதிகமாக இருந்தாலும் பருத்திக்கான டிமாண்ட் மிகவும் குறைவாகவே உள்ளது, ஆனால் தற்போது ஏற்பட்டு உள்ள விலை சரிவு மூலம் இந்திய மற்றும் வெளிநாட்டுச் சந்தையில் விற்பனை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதேபோல் பருத்தி ஒரு பேல் விலை 25000 ரூபாய் வரையில் சரியவும் வாய்ப்பு உள்ளது.
திருப்பூர் டெக்ஸ்டைல் ஏற்றுமதி
மே - ஜூன் காலாண்டில் பருத்தி விலை சுமார் 40 சதவீதம் அதிகரித்து 11 வருட உச்சத்தை எட்டியது குறிப்பிடத்தக்கது. 2025ஆம் நிதியாண்டில் திருப்பூர் டெக்ஸ்டைல் ஏற்றுமதி அளவு 50000 கோடி ரூபாய் வரையில் உயரும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!



Click it and Unblock the Notifications