டாடா குழுமம் தனது வர்த்தகத்தை தொடர்ந்து விரிவாக்கம் செய்யும் பணியில் தீவிரமாக இருப்பது அனைவருக்கும் தெரியும், ரிலையனஸ் மற்றும் அதானி குழுமத்தை போன்ற விரிவாக்கம் டாடா குழுமத்தில் இல்லை என்றாலும், தனது வர்த்தகத்தை வலிமைப்படுத்தும் நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது டாடா.
இதன் மூலம் டாடா குழுமத்தின் முக்கிய வர்த்தக பிரிவாக இருக்கும் டைட்டன் ஏற்கனவே பல பிராண்டுகள் கீழ் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வரும் வேளையில், ஆன்லைன் விற்பனையை அதிகரிக்கும் முடிவோடு பல வருடமாக இயங்கி வரும் டைட்டன் தற்போது கார்ட்லேன் என்னும் பிரபலமான நிறுவனத்தை கைப்பற்றியுள்ளது.

டாடா குழுமத்தின் பல மாத பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, டாடா குழுமத்தின் முக்கிய நிறுவனமான டைட்டன் கீழ் இயங்கி வந்த துணை நிறுவனமான கேரட்லேன் நிறுவனத்தில் எஞ்சியிருந்த 27.18% பங்குகளை இந்த ஜூவல்லரி பிராண்டின் நிறுவனர் மிதுன் சசெட்டி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து ரூ.4,621 கோடிக்கு வாங்கியுள்ளது.
இந்த பங்கு விற்பனை மூலம் கேரட்லேன் சுமார் 17,000 கோடி ரூபாய்க்கு மதிப்பீட்டை பெற்றுள்ளது. இந்தியாவின் முன்னணி ஆல்லைன் நகை விற்பனை நிறுவனமான கார்ட்லேன், இதுநாள் வரையில் தனிஷ்க் நிறுவனத்துடனான கூட்டணியில் இயங்கி வந்தது. தற்போது மொத்தமாக கைப்பற்றி டைட்டன் நிறுவனத்திற்கு சொந்தமான நிறுவனமாக மாறியுள்ளது.
சமீபத்தில் இந்தியாவின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் சேவை நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனர்களான சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால் ஆகியோர் தங்கள் பங்குகளை மொத்தமாக வால்மார்ட்-க்கு விற்றுவிட்டு வெளியேறிய நிலையில், தற்போது இந்தியாவில் 2வது ஈகாமர்ஸ் நிறுவனமாக கார்ட்லேனில் இதன் நிறுவனர்கள் இந்த பங்கு விற்பனை மூலம் வெளியேற உள்ளனர்.
சனிக்கிழமையன்று டாடா குழுமம் பங்குச்சந்தைக்கு சமர்ப்பித்த அறிக்கையில், டைட்டன் நிறுவனம் காரட்லேன் நிறுவனத்தில் 91.90 லட்சம் பங்குகளை வாங்குவதன் மூலம் இந்நிறுவனத்தில் 98.28% பங்குகளை கைப்பற்றியுள்ளதாக கூறியது.


Click it and Unblock the Notifications