மும்பை: டாடா குழுமத்திற்கு சொந்தமான பிரபல வாட்ச் மற்றும் நகை விற்பனை நிறுவனமான டைட்டன் லிமிடெட்டின் வருமானம் கடந்த காலாண்டில் 25 சதவீதம் வரை சரிவடைந்துள்ளது.
செப்டம்பர் 30ஆம் தேதியோடு முடிவடைந்த காலாண்டில் டைட்டன் நிறுவனத்தின் நிகர லாபம் 705 கோடி ரூபாயாக இருக்கிறது.
கடந்தாண்டு இதே காலகட்டத்தில் இந்த நிறுவனம் 940 கோடி ரூபாய் லாபம் ஈட்டிய நிறுவனமாக இருந்தது. ஆனால் நிறுவனத்தின் மொத்த வருமானம் கடந்த நிதியாண்டை விட தற்போது அதிகரித்திருப்பதாக தெரிகிறது.

கடந்த ஆண்டில் 10,027 கோடி ரூபாயாக இருந்த டைட்டன் லிமிடெட் நிறுவன வருமானம், நடப்பு ஆண்டில் 24 சதவீதம் அதிகரித்து 12,458 கோடி ரூபாய் என உயர்ந்துள்ளது.
நவம்பர் 7ஆம் தேதி அன்று மும்பை பங்குச்சந்தையில் டைட்டன் நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 3,135 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது.
டைட்டன் நிறுவனத்தை பொருத்தவரை நகை விற்பனை மூலம் இந்த நிறுவனத்திற்கு கிடைத்த வருமானம் செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் 10,763 கோடி ரூபாய் என இருக்கிறது. இது கடந்த ஆண்டை விட 26 சதவீதம் அதிகமாகும். குறிப்பாக இந்தியாவில் தங்களுடைய நகை விற்பனை அதிகரித்துள்ளது என டைட்டன் லிமிடெட் நிறுவனம் கூறியுள்ளது.
கடந்த பட்ஜெட் தாக்கலின் போது மத்திய அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை குறைத்தது. இதனால் தங்கத்தை நகையாக வாங்கி வைப்பதில் மக்கள் மீண்டும் ஆர்வம் காட்டத் தொடங்கினர்.
எனவே செப்டம்பர் மாதம் இந்தியாவில் குறிப்பாக தங்களுடைய நகை விற்பனை பிரிவில் தங்க நகைகள் விற்பனை அதிகரித்தது என டைட்டன் நிறுவனம் கூறியுள்ளது. இந்த காலகட்டத்தில் தங்கள் நிறுவனத்தின் தங்க விற்பனை வளர்ச்சி இரண்டு இலக்கம் என உயர்ந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் டாடா குழுமத்திற்கு சொந்தமான டைட்டன் லிமிடெட் நிறுவனம் தன்னுடைய தனிஷ்க் நகை கடைகளில் இந்தியாவின் 11 இடங்களில் புதிய கிளைகளை தொடங்கியுள்ளது.
டைட்டன் நிறுவனம் தனிஷ்க், மியா, சோயா, கேரட் லேன் ஆகிய பிராண்டுகளின் கீழ் நகை விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. தங்களுடைய கைக்கடிகார விற்பனை பிரிவில் அனலாக் கடிகாரங்கள் விற்பனை 25 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக டைட்டன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரத்தன் டாடா மறைவுக்கு பிறகு அவரது சகோதரர் நோயல் டாடா நிறுவன தலைவராக பதவியேற்றுள்ளார், இந்த நிலையில் டைட்டன் நிறுவனத்தின் லாபம் குறைந்திருப்பதாக செய்தி வந்துள்ளது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!



Click it and Unblock the Notifications