இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக விளங்கும் டாடா குழுமத்தின் முன்னணி வர்த்தக பிரிவாகவும், நாட்டின் மிகப்பெரிய நகை உற்பத்தி மற்றும் லைப்ஸ்டைல் நிறுவனமாக இருக்கும் டைட்டன் கம்பெனி தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
டைட்டன் நிறுவனத்தின் கீழ் இயங்கும் தனிஷ்க் இந்தியாவின் பெரு நகரங்களில் அசத்தி வரும் வேளையில், தற்போது 2ஆம் நிலை மற்றும் 3ஆம் நிலை நகரங்களிலும் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருகிறது. இதேபோல் வெளிநாட்டிலும் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற முக்கியமான முடிவை எடுத்துள்ளது.

இந்தியாவில் பிரபலமான நகை கடைகளான ஜோய் அலுக்காஸ், கல்யாண் ஜூவல்லர்ஸ் போன்ற பல போன்றவை வளைகுடா நாடுகளில் அதிகப்படியான வர்த்தகத்தையும், வருமானத்தையும் பெற்று வரும் வேளையில், டாடா குழுமத்தின் டைட்டன் நிறுவனமும் வளைகுடா நாடுகளில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய Damas என்னும் நகை கடை நிறுவனத்தில் பெரும் பகுதி பங்குகளை வாங்கியுள்ளது.
டைட்டன் நிறுவனத்தின் கிளை நிறுவனமான டைட்டன் ஹோல்டிங்ஸ் இன்டர்நேஷனல் FZCO மூலம், வளைகுடா நாடுகளில் பிரபலமாற விளங்கும் தமாஸ் ஜூவல்லரி நிறுவனத்தின் பெரும் பகுதி பங்குகளை கைப்பற்றுவதற்கு முக்கியமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது.
டைட்டன் நிறுவனம், தமாஸ் ஜூவல்லரி நிறுவனத்தில் சுமார் 67 சதவீத பங்குகளை 1,038 மில்லியன் திராஹம்-க்கு வாங்கியுள்ளது. இந்திய ரூபாய் ம மதிப்பில் கிட்டத்தட்ட 2500 கோடி ரூபாயாகும். இந்த ஒப்பந்தம் படி டைட்டன் ஹோல்டிங்ஸ் தமாஸ் LLC-யின் 67% பங்குகள் மற்றும் நிர்வாகத்தில் ஆதிக்கத்தை மன்னாய் கார்ப்பரேஷன் (Mannai Corporation) இலிருந்து கைப்பற்றியுள்ளது.
தமாஸ் நிறுவனம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, கத்தார், ஓமான், குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய ஆறு வளைகுடா நாடுகளில் நகை வணிகத்தை நடத்தி வருகிறது. இந்த பங்கு கைப்பற்றல் மூலம் டைட்டனுக்கு இப்பகுதியில் மிகப்பெரிய அளவிலான வர்த்தகத்தையும், வருமானத்தையும் பெற வழிவகுக்கும். டைட்டன் நகை பிராண்ட் தனது சர்வதேச வர்த்தகத்தை விரிவுபடுத்தியுள்ளது.
மேலும் மன்னாய் கார்ப்பரேஷன் தற்போது வைத்திருக்கும் மீதமுள்ள 33% பங்குகளை டைட்டன் 2029-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்குப் பின் வாங்க முடியும், ஆனால் இது இரு தரப்பு ஒப்புதல் அடிப்படையிலேயே இந்த பங்கு கைப்பற்றல் நடக்கும்.
வளைகுடா நாடுகளுக்கு டைட்டன் நுழைந்தது மூலம் ஜோய் அலுக்காஸ், கல்யாண் ஜூவல்லர்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு இப்பகுதியில் புதிய போட்டியை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை: 100 என்ற நம்பர் செய்யும் மேஜிக்..!! இப்போது நகை வாங்கலாமா?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

தங்கம் , வெள்ளி விலை தடாலடி உயர்வு: இனி தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது!!

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சாமானிய மக்கள் மகிழ்ச்சி!!

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு; இந்த நிலை அப்படியே நீடிக்குமா?

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: இனி வரும் நாட்களில் விலை ஏறுமா? இறங்குமா?

எல்லாம் காலியாக போகுது.. தங்கம், பிட்காயின் தான் இனி ராஜா! ராபர்ட் கியோசாகியின் பகீர் எச்சரிக்கை!

மதுரை மக்களே இன்று தங்க நகை வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?



Click it and Unblock the Notifications