தங்கம் வாங்குவதற்கு பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஆவலுடன் காத்திருக்கும் நேரத்தில் தங்கம் விலை இன்று ஷாக் கொடுத்துள்ளது. விரைவில் சுபமூகூர்த்த தினங்கள் வரவுள்ள நிலையில், இப்போது தங்கம் விலையேறி வருவது தங்கம் வாங்குவோரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்கம் என்பது ஒரு முதலீடாகவும், சிலருக்கு ஆபரணங்களாக பயன்படுத்தியும் வருகின்றனர். கடந்த இரு தினங்களில் தங்கம் விலை ஆனது சவரனுக்கு ரூ.800 ஆக உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி, நேற்றைய தினம் ஒரு கிராம் 22 கேரட் ரூ.7595 ஆக இருந்தது. இதற்கிடையில், இன்று அதில் 15 ரூபாய் அதிகரித்துள்ளது. அதன்படி, 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 7,610-க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 8,301க்கும் விற்பனையாகிறது.

நேற்றைய (29/01/2025) தங்கம் விலை நிலவரம்: தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் சேலம் போன்ற முக்கிய நகரங்களில் நேற்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 7,595-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ.60,760-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.75,950-க்கும் விற்பனையானது. 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 8,285-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ. 66,280-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 82,850-க்கும் விற்பனையானது.
இன்றைய (30/01/2025) 22 காரட் தங்கம் விலை நிலவரம்: சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.15 அதிகரித்து ரூ. 7,610-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ. 120 அதிகரித்து ரூ. 60,880-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.76,100-க்கும் விற்பனையாகிறது.1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.16 அதிகரித்து ரூ. 8,301-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ. 128 அதிகரித்து ரூ.66,408-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.83,010 -க்கும் விற்பனையாகிறது. 1 கிராம் 18 கேரட் தங்கம் 6,218-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ. 50,280-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ.62,850-க்கும் விற்பனையானது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்: வெள்ளியை பொருத்தவரையில் இன்று விலை ஏற்றம் கண்டுள்ளது. அதன்படி1 கிராம் வெள்ளி நேற்றைய விலையான ரூ.104 ரூபாயில் இருந்து ரூ.2 அதிகரித்து ரூ.106 ஆக விற்பனையாகிறது. அதேபோல், 1கிலோ ரூ.2000 அதிகரித்து ரூ.1,06,000-த்திற்கு விற்பனை செய்யப்படுகிறது


Click it and Unblock the Notifications