டிரம்ப் போட்ட ஒரே போடு.. ஒரே அடியா குறைந்த தங்கம்.. ரூ.14,000 குறைந்ததால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கடுமையான மோதல் நடைபெற்று வந்தது. காசா மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல், ஈரான் பயங்கரவாதிகளுக்கு உதவி வருவதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரான் ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது. இரு நாடுகளும் கடுமையான தாக்குதல்கள் நடத்தி வந்ததால், உயிரிழப்புகளும், சேதங்களும் அதிகமாகின. இதற்கு மத்தியில், இஸ்ரேலின் கோரிக்கையை ஏற்று ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதனால், பெரும் பதற்றம் நிலவியது. இந்த தாக்குதலில் ஈரானின் 3 அணு சக்தி நிலையங்கள் மற்றும் ராணுவ தளங்கள் அழிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

இதனால் உலகப்போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டது. அமெரிக்காவின் தாக்குதலால் ஈரான் உச்சகட்ட கோபம் அடைந்தது. இதையடுத்து, கத்தாரில் தோகாவில் உள்ள அமெரிக்க விமானப் படைக்குச் சொந்தமான விமான தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. ஈரானின் இந்த செயலை கண்டித்து அமெரிக்கா பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீர் திருப்பமாக இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நிறுத்தம் வருவதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ஆனால், தற்போதைக்கு போர் நிறுத்தம் குறித்த எந்த ஒப்பந்தமும் இல்லை என்று ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.

டிரம்ப் போட்ட ஒரே போடு.. ஒரே அடியா குறைந்த தங்கம்.. ரூ.14,000 குறைந்ததால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

கச்சா எண்ணெய் விலை சரிவு: இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிரடியாக அதிகரித்திருந்தது. ஆனால், தற்போது போர் நிறுத்த அறிவிப்பை அடுத்து, கச்சா எண்ணெய் விலை மீண்டும் குறையத் தொடங்கியுள்ளது. அதிபர் டிரம்பின் போர் நிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து அமெரிக்க பங்குச் சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளது. ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஆசிய வர்த்தகத்தின் தொடக்கத்தில் 5% சரிந்து, 68 டாலராகக் குறைந்துள்ளது. இந்த விலை, போர் தொடங்கிய நாளான ஜூன் 12ஆம் தேதியில் இருந்ததை விட குறைவாகும்.

தங்கம் விலை சரிவு: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே "இடைநிறுத்த ஒப்பந்தம்" அறிவித்ததைத் தொடர்ந்து, உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் தங்கத்தின் விலை கணிசமாக சரிந்துள்ளது. உலக சந்தையில் நிலவிய பதற்றம் குறைந்ததால், தங்கம் மற்றும் வெள்ளி போன்ற பாதுகாப்பான முதலீடுகளின் தேவை குறைந்தது. இது தங்க நகை வாங்க காத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு சற்று நிம்மதியை தந்துள்ளது. விலை குறைந்திருந்தாலும், தங்கத்தின் விலை அதன் உச்ச விலைக்கு அருகில் தான் உள்ளது.

இந்தியாவில் தற்போதைய தங்கம் நிலவரம் என்ன..?: 24 காரட் கொண்ட 10 கிராம் தங்கம் ரூ.1,470 குறைந்து ரூ.99,220-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு கிராமுக்கு ரூ.147 குறைந்து ரூ.9,922-க்கு விற்கப்படுகிறது.

22 காரட் கொண்ட 10 கிராம் தங்கம் ரூ.1,350 குறைந்து, ரூ.90,950-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.135 குறைந்து ரூ.9,095-க்கும் விற்பனையாகிறது.

18 காரட் கொண்ட 10 கிராம் தங்கம் ரூ.1,100 குறைந்து, ரூ.74,420-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.110 குறைந்து ரூ.7,442-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

24 காரட் கொண்ட 100 கிராம் தங்கத்தின் விலை தற்போது, ரூ.9,92,200 ஆக உள்ளது. இது சுமார் ரூ.14,200 வரை குறைந்துள்ளது.

22 காரட் கொண்ட 100 கிராம் தங்கத்தின் விலை ரூ.9,09,500 ஆக உள்ள நிலையில், இது ரூ.13,500 வரை குறைந்துள்ளது.

18 காரட் கொண்ட 100 கிராம் தங்கத்தின் விலை ரூ.7,44,200 ஆக உள்ளது. இது ரூ.1,100 வரை சரிவை கண்டுள்ளது.

MCX தங்கம் விலை : இன்றைய நிலவரப்படி, தங்கம் ரூ.97,100 ஆக விற்பனையானது. இது ரூ2,288 (-2.30%) என்ற அளவுக்கு குறைந்துள்ளது. அதேபோல் வெள்ளி விலை ரூ.1,05,625 / கிலோ ஆக இருந்த நிலையில், இது ரூ.1,134 (-1.06%) குறைந்தது. தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. இது முதலீட்டாளர்களுக்கும், நகை வாங்க விரும்புவோருக்கும் முக்கியமான நேரமாக இருக்கலாம்.

ஈரான் - இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக டிரம்ப் அறிவித்த நிலையில், உலக சந்தைகளில், தங்கத்தின் விலை இரண்டு வாரங்களில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. ஜூன் 11 ஆம் தேதிக்குப் பிறகு குறைந்த அளவை எட்டிய பின்னர், ஸ்பாட் தங்கத்தின் விலை 0.5% குறைந்து ஒரு அவுன்ஸ் $3,351.47ஆக இருந்தது. அதேபோல், அமெரிக்க ப்யூச்சர் தங்கத்தின் விலை 0.9% குறைந்து $3,365.30 ஆக இருந்தது. ஸ்பாட் வெள்ளி 0.1% குறைந்து ஒரு அவுன்ஸ் $36.10 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+