தங்கம் விலை 2 மாதம் சரிவை தொட்டது.. ஒரே நாளில் ரூ.1200 டமாலென சரிவு..!!

இந்திய மக்கள் அக்டோபர் மாதம் வரையில் தங்கம் விலையைக் கண்டு கண்ணீர் வடித்து வந்த நிலையில், நவம்பர் மாதம் குளு குளுவென தங்கம் விலை குறைந்து மனம் குளிர வைத்துள்ளது. இதேவேளையில் அடுத்த 3-4 மாதம் இந்தியாவில் தங்கம் அதிகம் விற்பனை நடக்கும் காலம் என்பதால் இந்த விலை சரிவு நாட்டு மக்கள் தங்களுடைய தங்க இருப்பை அதிகரிக்கச் சிறப்பான வழியாக அமையும்.

இதேவேளையில் உலகம் முழுவதும் பாதுகாப்பான சொத்தாகக் கருதப்படும் தங்கத்தின் விலை குறையும் போது இதில் முதலீடு செய்ய வேண்டுமா என்ற அச்சமும் நிலவுகிறது. தங்கம் விலை குறைவதால் மக்களிடம் இருக்கும் தங்கம், வங்கிகளிடம் இருக்கும் தங்கம், மத்திய அரசு, ஆர்பிஐ-யிடம் இருக்கும் தங்கத்தின் மதிப்பும் குறையும்.

தங்கம் விலை 2 மாதம் சரிவை தொட்டது.. ஒரே நாளில் ரூ.1200 டமாலென சரிவு..!!

இந்த நிலையில் இன்று சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2 மாத சரிவான 2560 டாலரை தொட்டது. இந்த சரிவு எம்சிஎக்ஸ் சந்தையில் டாலர் மதிப்பின் உயர்வைக் கடந்து 0.81 சதவீதம் சரிந்து 73,875 ரூபாய் அளவில் 10 கிராம் தங்கம் வர்த்தகமாகிறது.

இன்று ரீடைல் சந்தையில் 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை 1200 ரூபாய் சரிந்து 75,650 ரூபாயாக உள்ளது, இதேபோல் 22 கேரட் 10 கிராம் தங்கம் விலை 1100 ரூபாய் சரிந்து 69,350 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாயும், கிலோவுக்கு 2000 ரூபாயும் குறைந்து பல வாரங்களுக்குப் பின்பு 1 லட்சம் என்ற அளவீட்டில் இருந்து குறைந்து 99,000 ரூபாயாக உள்ளது.

ஏற்கனவே ரூபாய் மதிப்பு இந்திய பொருளாதாரத்தையும், மக்களின் பர்ஸையும் பதம் பார்த்து வரும் வேளையில் பாதுகாப்பாகக் கருதும் தங்கத்தின் மதிப்பு குறைவது கவலைக்குரியதாக உள்ளது. ஆனால் தங்கம் விலை சரிவுக்கும், இந்தியச் சந்தைக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை.

தங்க விலை நவம்பர் மாதத்தில் இருந்து குறைந்து வந்தாலும், கடந்த ஐந்து நாட்களாக தொடர்ந்து சரிந்து வருகிறது. ஆசிய சந்தை வர்த்தகத்தில், தங்கம் விலை ஒரு அவுன்சுக்கு 2,559-2,558 டாலராக சரிந்து, செப்டம்பர் 19-ம் தேதிக்குப் பிறகு இதுவரை இல்லாத அளவுக்குக் குறைந்தது 2 மாத சரிவைப் பதிவு செய்துள்ளது.

இந்த விலை சரிவுக்கு முக்கிய காரணம் அமெரிக்க டாலரின் பலமடைந்து வருவது தான், அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் பின், டாலர் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து, புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் தலைமையிலான புதிய நிர்வாகத்தின் பொருளாதார கொள்கைகள், அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும் என்று அதிகளவில் நம்பப்படுகிறது. இதனால், டாலர் பலம் பெற்று, தங்க விலை பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் அதிரடிகளால் அமெரிக்காவில் பணவீக்கத்தை அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதன் காரணமாக, அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டி விகிதக் குறைப்பு நடவடிக்கையை அதிரடியாக நிறுத்தலாம் என்ற நிலைப்பாடும் உள்ளது. இதன் மூலம் அமெரிக்க அரசப் பத்திரங்கள் மீதான முதலீட்டை அதிகரித்து லாபத்தையும் உயர்த்தியுள்ளது. இதனால் தங்கம் தேவையற்ற முதலீடாக தற்போது மாறியுள்ளது.

இதன் அடிப்படையில் இன்று தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை போன்ற முக்கிய நகரங்களிலும், டெல்லி, மும்பை, பெங்களூர் போன்ற நாட்டின் முக்கிய நகரங்களிலும், அமெரிக்கா, துபாய், கனடா, லண்டன் போன்ற உலக நாடுகளில் இருக்கும் முக்கிய நகரங்களிலும் இன்றைய தங்கம் விலை நிலவரத்தைப் பார்ப்போம்.

1 சவரன் தங்கம் விலை: இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் -
சென்னை - 55480 ரூபாய்
மும்பை - 55480 ரூபாய்
டெல்லி - 55600 ரூபாய்
கொல்கத்தா - 55480 ரூபாய்
பெங்களூர் - 55480 ரூபாய்
ஹைதராபாத் - 55480 ரூபாய்
கேரளா - 55480 ரூபாய்
புனே - 55480 ரூபாய்
பரோடா - 55520 ரூபாய்
அகமதாபாத் - 55520 ரூபாய்
ஜெய்ப்பூர் - 55600 ரூபாய்
லக்னோ - 55600 ரூபாய்
கோயம்புத்தூர் - 55480 ரூபாய்
மதுரை - 55480 ரூபாய்.

22 கேரட் 1 கிராம் தங்கம் விலை: இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் -
சென்னை - 6,935 ரூபாய்
மும்பை - 6,935 ரூபாய்
டெல்லி - 6,950 ரூபாய்
கொல்கத்தா - 6,935 ரூபாய்
பெங்களூர் - 6,935 ரூபாய்
ஹைதராபாத் - 6,935 ரூபாய்
கேரளா - 6,935 ரூபாய்
புனே - 6,935 ரூபாய்
பரோடா - 6,940 ரூபாய்
அகமதாபாத் - 6,940 ரூபாய்
ஜெய்ப்பூர் - 6,950 ரூபாய்
லக்னோ - 6,950 ரூபாய்
கோயம்புத்தூர் - 6,935 ரூபாய்
மதுரை - 6,935 ரூபாய்.

24 கேரட் 1 கிராம் தங்கம் விலை: இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் -
சென்னை - 7,565 ரூபாய்
மும்பை - 7,565 ரூபாய்
டெல்லி - 7,580 ரூபாய்
கொல்கத்தா - 7,565 ரூபாய்
பெங்களூர் - 7,565 ரூபாய்
ஹைதராபாத் - 7,565 ரூபாய்
கேரளா - 7,565 ரூபாய்
புனே - 7,565 ரூபாய்
பரோடா - 7,570 ரூபாய்
அகமதாபாத் - 7,570 ரூபாய்
ஜெய்ப்பூர் - 7,580 ரூபாய்
லக்னோ - 7,580 ரூபாய்
கோயம்புத்தூர் - 7,565 ரூபாய்
மதுரை - 7,565 ரூபாய்.

18 கேரட் 1 கிராம் தங்கம் விலை: இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் -
சென்னை - 5,720 ரூபாய்
மும்பை - 5,674 ரூபாய்
டெல்லி - 5,687 ரூபாய்
கொல்கத்தா - 5,674 ரூபாய்
பெங்களூர் - 5,674 ரூபாய்
ஹைதராபாத் - 5,674 ரூபாய்
கேரளா - 5,674 ரூபாய்
புனே - 5,674 ரூபாய்
பரோடா - 5,678 ரூபாய்
அகமதாபாத் - 5,678 ரூபாய்
ஜெய்ப்பூர் - 5,687 ரூபாய்
லக்னோ - 5,687 ரூபாய்
கோயம்புத்தூர் - 5,720 ரூபாய்
மதுரை - 5,720 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை: இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் -
சென்னை - 99,000 ரூபாய்
மும்பை - 89,500 ரூபாய்
டெல்லி - 89,500 ரூபாய்
கொல்கத்தா - 89,500 ரூபாய்
பெங்களூர் - 89,500 ரூபாய்
ஹைதராபாத் - 99,000 ரூபாய்
கேரளா - 99,000 ரூபாய்
புனே - 89,500 ரூபாய்
பரோடா - 89,500 ரூபாய்
அகமதாபாத் - 89,500 ரூபாய்
ஜெய்ப்பூர் - 89,500 ரூபாய்
லக்னோ - 89,500 ரூபாய்
கோயம்புத்தூர் - 99,000 ரூபாய்
மதுரை - 99,000 ரூபாய்.

உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 30.80 - 6,897 ரூபாய்
குவைத் - KWD 24.83 - 6,809 ரூபாய்
மலேசியா - MYR 368 - 6,920 ரூபாய்
ஓமன் - OMR 32.45 - 7,114 ரூபாய்
கத்தார் - QAR 308 - 7,131 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 304 - 6,829 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 110.90 - 6,954 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 307 - 7,055 ரூபாய்
அமெரிக்கா - USD 82 - 6,921 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 306.50 - 7,043 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 306.50 - 7,043 ரூபாய்
துபாய் (UAE) - AED 306.50 - 7,043 ரூபாய்
புஜைரா (UAE) - AED 306.50 - 7,043 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 306.50 - 7,043 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 306.50 - 7,043 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 308 - 7,131 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 32.45 - 7,114 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 304 - 6,829 ரூபாய்
இங்கிலாந்து - GBP 59.64 - 6,383 ரூபாய்
கனடா - CAD 113.75 - 6,851 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 121.70 - 6,643 ரூபாய்

உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:

பஹ்ரைன் - BHD 32.80 - 7,345 ரூபாய்
குவைத் - KWD 27.09 - 7,429 ரூபாய்
மலேசியா - MYR 386 - 7,258 ரூபாய்
ஓமன் - OMR 34.55 - 7,574 ரூபாய்
கத்தார் - QAR 329.50 - 7,629 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 328 - 7,368 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 122.10 - 7,656 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 331.50 - 7,618 ரூபாய்
அமெரிக்கா - USD 87 - 7,343 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 331 - 7,606 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 331 - 7,606 ரூபாய்
துபாய் (UAE) - AED 331 - 7,606 ரூபாய்
புஜைரா (UAE) - AED 331 - 7,606 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 331 - 7,606 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 331 - 7,606 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 329.50 - 7,629 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 34.55 - 7,574 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 328 - 7,368 ரூபாய்
இங்கிலாந்து - GBP 65.06 - 6,963 ரூபாய்
கனடா - CAD 120.25 - 7,242 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 132.70 - 7,244 ரூபாய்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+