தங்கம் விலை ஒரே நாளில் 600 ரூபாய் உயர்வு.. இதுக்கு மேல காத்திருந்தா ரிஸ்க்..!!

இந்தியாவில் தொடர்ந்து சரிந்து வந்த தங்கம் விலை இன்று திடீரென உயர்ந்து பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. இது திருமண சீசன் என்பதால் பல கோடி குடும்பங்கள் தங்கம் வாங்க சரியான வாய்ப்புகளை தேடி வந்துக்கொண்டு இருந்த வேளையில் இன்று ஏற்பட்ட விலை உயர்வு சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. காரணம் திருமணத்திற்காக நகை வாங்க திட்டமிட்டு இருந்த பலரும் தங்கம் விலை தொடர்ந்து குறைவதால் காத்திருந்தனர்.

இந்த சூழ்நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை தடாலடியாக உயர்ந்துள்ளது. இதனால் பல நாட்களாக காத்திருந்த மக்கள் தற்போது நகை கடைக்கு செல்ல துவங்கியுள்ளனர். டாலர் மதிப்பு, அமெரிக்க பத்திர சந்தை முதலீடுகளும் தொடர்ந்து அதிகரித்து வரும் இதே காலக்கட்டத்தில் அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரிக்கும் நிலையும், இஸ்ரேல் போர், ரஷ்ய போர் மீதான அச்சம் தங்கம் மீதான முதலீட்டை கணிசமாக உயர்த்தியுள்ளது.

தங்கம் விலை ஒரே நாளில் 600 ரூபாய் உயர்வு.. இதுக்கு மேல காத்திருந்தா ரிஸ்க்..!!

இன்று சர்வதேச ஸ்பாட் சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2560 டாலரில் இருந்து 2590 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இதன் எதிரொலியாக எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் தங்கம் விலை 0.88 சதவீதம் உயர்ந்து 74,600 ரூபாயாக உள்ளது. இதேபோல் ஒரு கிலோ வெள்ளி விலை 0.87 சதவீதம் உயர்ந்து 89,186 ரூபாயாக உள்ளது.

எம்சிஎக்ஸ் சந்தையில் ஏற்பட்ட உயர்வு ரீடைல் சந்தையில் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. வாரத்தின் முதல் நாளான இன்று 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 600 ரூபாய் உயர்ந்து 69,950 ரூபாயாக உள்ளது, இதேபோல் 24 கேரட் தங்கம் விலை 660 ரூபாய் உயர்ந்து 76,310 ரூபாயாக உள்ளது.

இதன் அடிப்படையில் இன்று தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை போன்ற முக்கிய நகரங்களிலும், டெல்லி, மும்பை, பெங்களூர் போன்ற நாட்டின் முக்கிய நகரங்களிலும், அமெரிக்கா, துபாய், கனடா, லண்டன் போன்ற உலக நாடுகளில் இருக்கும் முக்கிய நகரங்களிலும் இன்றைய தங்கம் விலை நிலவரத்தைப் பார்ப்போம்.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 55960 ரூபாய், மும்பை - 55960 ரூபாய், டெல்லி - 56080 ரூபாய், கொல்கத்தா - 55960 ரூபாய், பெங்களூர் - 55960 ரூபாய், ஹைதராபாத் - 55960 ரூபாய், கேரளா - 55960 ரூபாய், புனே - 55960 ரூபாய், பரோடா - 56000 ரூபாய், அகமதாபாத் - 56000 ரூபாய், ஜெய்ப்பூர் - 56080 ரூபாய், லக்னோ - 56080 ரூபாய், கோயம்புத்தூர் - 55960 ரூபாய், மதுரை - 55960 ரூபாய்.

22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,995 ரூபாய், மும்பை - 6,995 ரூபாய், டெல்லி - 7,010 ரூபாய், கொல்கத்தா - 6,995 ரூபாய், பெங்களூர் - 6,995 ரூபாய், ஹைதராபாத் - 6,995 ரூபாய், கேரளா - 6,995 ரூபாய், புனே - 6,995 ரூபாய், பரோடா - 7,000 ரூபாய், அகமதாபாத் - 7,000 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,010 ரூபாய், லக்னோ - 7,010 ரூபாய், கோயம்புத்தூர் - 6,995 ரூபாய், மதுரை - 6,995 ரூபாய்.

24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,631 ரூபாய், மும்பை - 7,631 ரூபாய், டெல்லி - 7,646 ரூபாய், கொல்கத்தா - 7,631 ரூபாய், பெங்களூர் - 7,631 ரூபாய், ஹைதராபாத் - 7,631 ரூபாய், கேரளா - 7,631 ரூபாய், புனே - 7,631 ரூபாய், பரோடா - 7,636 ரூபாய், அகமதாபாத் - 7,636 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,646 ரூபாய், லக்னோ - 7,646 ரூபாய், கோயம்புத்தூர் - 7,631 ரூபாய், மதுரை - 7,631 ரூபாய்.

18 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 5,770 ரூபாய், மும்பை - 5,723 ரூபாய், டெல்லி - 5,736 ரூபாய், கொல்கத்தா - 5,723 ரூபாய், பெங்களூர் - 5,723 ரூபாய், ஹைதராபாத் - 5,723 ரூபாய், கேரளா - 5,723 ரூபாய், புனே - 5,723 ரூபாய், பரோடா - 5,727 ரூபாய், அகமதாபாத் - 5,727 ரூபாய், ஜெய்ப்பூர் - 5,736 ரூபாய், லக்னோ - 5,736 ரூபாய், கோயம்புத்தூர் - 5,770 ரூபாய், மதுரை - 5,770 ரூபாய்.

10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 25,750 ரூபாய், மும்பை - 25,750 ரூபாய், டெல்லி - 25,750 ரூபாய், கொல்கத்தா - 25,750 ரூபாய், பெங்களூர் - 25,750 ரூபாய், ஹைதராபாத் - 25,750 ரூபாய், கேரளா - 25,750 ரூபாய், புனே - 25,750 ரூபாய், வதோதரா - 25,750 ரூபாய், அகமதாபாத் - 25,750 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 99,000 ரூபாய், மும்பை - 89,500 ரூபாய், டெல்லி - 89,500 ரூபாய், கொல்கத்தா - 89,500 ரூபாய், பெங்களூர் - 89,500 ரூபாய், ஹைதராபாத் - 99,000 ரூபாய், கேரளா - 99,000 ரூபாய், புனே - 89,500 ரூபாய், பரோடா - 89,500 ரூபாய், அகமதாபாத் - 89,500 ரூபாய், ஜெய்ப்பூர் - 89,500 ரூபாய், லக்னோ - 89,500 ரூபாய், கோயம்புத்தூர் - 99,000 ரூபாய், மதுரை - 99,000 ரூபாய்.

உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 30.80 - 6,896 ரூபாய்
குவைத் - KWD 24.83 - 6,814 ரூபாய்
மலேசியா - MYR 368 - 6,953 ரூபாய்
ஓமன் - OMR 32.45 - 7,113 ரூபாய்
கத்தார் - QAR 308 - 7,126 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 304 - 6,835 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 110.90 - 6,972 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 307 - 7,054 ரூபாய்
அமெரிக்கா - USD 82 - 6,920 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 306.50 - 7,042 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 306.50 - 7,042 ரூபாய்
துபாய் (UAE) - AED 306.50 - 7,042 ரூபாய்
புஜைரா (UAE) - AED 306.50 - 7,042 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 306.50 - 7,042 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 306.50 - 7,042 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 308 - 7,126 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 32.45 - 7,113 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 304 - 6,835 ரூபாய்
இங்கிலாந்து - GBP 60.51 - 6,450 ரூபாய்
கனடா - CAD 113.75 - 6,817 ரூபாய்

உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 32.80 - 7,344 ரூபாய்
குவைத் - KWD 27.09 - 7,434 ரூபாய்
மலேசியா - MYR 386 - 7,293 ரூபாய்
ஓமன் - OMR 34.55 - 7,573 ரூபாய்
கத்தார் - QAR 329.50 - 7,624 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 328 - 7,374 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 122.10 - 7,676 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 331.50 - 7,617 ரூபாய்
அமெரிக்கா - USD 87 - 7,342 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 331 - 7,605 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 331 - 7,605 ரூபாய்
துபாய் (UAE) - AED 331 - 7,605 ரூபாய்
புஜைரா (UAE) - AED 331 - 7,605 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 331 - 7,605 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 331 - 7,605 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 329.50 - 7,624 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 34.55 - 7,573 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 328 - 7,374 ரூபாய்
இங்கிலாந்து - GBP 66.01 - 7,037 ரூபாய்
கனடா - CAD 120.25 - 7,207 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 132.70 - 7,245 ரூபாய்

தங்க விலை கடந்த 6 நாட்களாக தொடர்ந்து சரிந்த நிலையில், திங்கள்கிழமை 2,570 டாலர் அளவுக்கு மீண்டுள்ளது. இருப்பினும், அமெரிக்க டாலரின் வலுவடைதல் தங்கம் விலை பெரிய அளவில் உயர்த்தாமல் கட்டுப்படுத்தலாம். அமெரிக்காவில் அதிகரிக்கும் பணவீக்கம் மற்றும் குறைவான வட்டி விகிதக் குறைப்பு எதிர்பார்ப்புகள் காரணமாக அமெரிக்க டாலர் வலுவடைந்துள்ளது. இதன் காரணமாக தங்கம் விலை உயர்ந்துள்ளது.

மேலும், அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் ஜெரோம் பவுல், டிசம்பரில் வட்டி விகிதத்தை குறைக்க அவசரம் இல்லை என்று கூறியுள்ளார். இதுவும் தங்கம் விலை நிர்ணயம் செய்யும் முக்கிய காரணியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதற்றம் மற்றும் உக்ரைன்-ரஷ்யா போர் தொடர்ந்து நீடிப்பது, தங்கத்தை ஒரு பாதுகாப்பான முதலீடாகவும் இந்த இடைப்பட்ட காலத்தில் மாற்றியுள்ளது. அமெரிக்கா, உக்ரைனுக்கு ரஷ்யாவின் உள்ளே தாக்க அனுமதி அளித்திருப்பது, தங்கம் விலை உயர்வுக்கு முக்கியமான காரணமாக உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+