தங்கம் விலை கடந்த வாரம் மூன்று ஆண்டுகளில் மிகப்பெரிய வீழ்ச்சியை கண்ட நிலையில், தற்போது புவிசார் பதற்றம் அதிகரித்ததாலும், அமெரிக்க அரசு பத்திரங்களில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் அதனை விற்பனை செய்யும் காரணத்தால் முதலீட்டு சந்தை தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது.
புவிசார் பதற்றம் அதிகரிக்க முக்கியமான காரணம், ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு, ரஷ்யா உடனான போரில் உக்ரைன்-க்கு அமெரிக்கா வழங்கிய நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த அனுமதி வழங்கியது. இதனால் உக்ரைன் - ரஷ்யா மத்தியிலான போர் மீண்டும் சூடுப்பிடிக்கும் என தெரிகிறது.

இந்த சூழ்நிலையில் தான் கடந்த 4 வருடத்தில் இல்லாத வகையில் தங்கம் விலை கடந்த 3 வாரத்தில் தடாலடியாக குறைந்து 2 மாத சரிவை தொட்டது. ஆனால் கடந்த 2 நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது, இது தங்கம் விலை உயர்வுக்கான ஆரம்பம் என வைத்துக்கொண்டால் அமெரிக்காவில் டிரம்ப் ஆட்சி அமைந்து சில மாதங்கள் வரையில் தங்கம் விலை உயர்வுடனே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2777 டாலரில் இருந்து வெறும் 15 நாளில் 2541 டாலர் வரையில் குறைந்தது. ஆனால் கடந்த 2 நாட்களில் 2606 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இதன் எதிரொலி இந்திய சந்தையிலும் எதிரொலித்துள்ளது.
எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் டிசம்பர் மாதம் முடியும் பியூச்சர்ஸ் ஆர்டர் விலை 0.49 சதவீதம் குறைந்து 75,414 ரூபாயாக உள்ளது. இதேபோல் வெள்ளி விலை 0.52 சதவீதம் உயர்ந்து 90,985 ரூபாயாக உள்ளது.
ரீடைல் சந்தையை பார்க்கும் போது 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 760 ரூபாய் உயர்ந்து 77,070 ரூபாயாக உள்ளது, இதுவே 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 700 ரூபாய் உயர்ந்து 70,650 ரூபாயாக உள்ளது.
மேலும் ஒரு கிலோ வெள்ளி விலை 2000 ரூபாய் உயர்ந்து மீண்டும் 1 லட்சம் ரூபாய் அளவீட்டை தாண்டி 1,01,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதுவே பிளாட்டினம் விலையை பார்க்கும் போது 10 கிராம் 510 ரூபாய் உயர்ந்து 26,260 ரூபாயாக உள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் பின்னர் வலுவடைந்த அமெரிக்க டாலர் தற்போது கணிசமாக வீழ்ச்சியடைந்ததே இன்றைய சரிவுக்கு மிக முக்கயமான காரணமாகவும் உள்ளது. அடுத்த நாணய கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதம் குறைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் அதிகமாக குறையாது என்ற கருத்து நிலவுகிறது.
இதனால் அமெரிக்க அரசு பத்திர மீதான வட்டி வருமானமும் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. இதனால் தங்கம் மீதான முதலீடுகள் அதிகரித்துள்ளது. தங்க விலை தற்போது அதன் அதிகப்படியான சரிவில் இருந்து மீண்டுள்ள நிலையில், இதன் விலை எப்போது உயரும் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.
மொத்தமாக புவிசார் அரசியல் அச்சங்கள், அமெரிக்க பொருளாதார தரவு மற்றும் நிதி கொள்கை முடிவுகள் ஆகியவற்றால் தங்கம் விலை அடுத்த சில நாட்களுக்கு உயர்வுடன் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கும்.
More From GoodReturns

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!



Click it and Unblock the Notifications