தங்கம் என்பது ஆபரணமாகவும், ஒரு முதலீடாகவும் மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். தங்கத்தை தினமும் வாங்குபவர்களும் இருக்கின்றனர். ஆனால், இப்போது தங்கத்தின் மீதான ஆர்வம் குறையும் வகையில் வாங்குவதற்கு பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஆவலுடன் காத்திருக்கும் நேரத்தில் தங்கம் விலை தொடர்ந்து ஷாக் கொடுத்து வருகிறது. கடந்த 2 தினங்களாக சவரனுக்கு ரூ.800 அதிகரித்த தங்கம் இன்றும் ரூ.900 அதிகரித்துள்ளது. விரைவில் சுபமூகூர்த்த தினங்கள் வரவுள்ள நிலையில், இப்போது தங்கம் விலையேறி வருவது தங்கம் வாங்குவோரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி, நேற்றைய தினம் ஒரு கிராம் 22 கேரட் ரூ.7610 ஆக இருந்தது. இதற்கிடையில், இன்று அதில் 120 ரூபாய் அதிகரித்துள்ளது. அதன்படி, 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 7,730-க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.131 அதிகரித்து ரூ. 8,4320க்கும் விற்பனையாகிறது.

நேற்றைய (30/01/2025) தங்கம் விலை நிலவரம்: தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் சேலம் போன்ற முக்கிய நகரங்களில் நேற்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 7,610-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ.60,880-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.76,100-க்கும் விற்பனையானது. 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 8,301-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ.66,408-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 83,010-க்கும் விற்பனையானது.
இன்றைய (31/01/2025) 22 காரட் தங்கம் விலை நிலவரம்: சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.120 அதிகரித்து ரூ. 7,730-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ. 960 அதிகரித்து ரூ. 61,840-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.77,300-க்கும் விற்பனையாகிறது.1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.131 அதிகரித்து ரூ. 8,432-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ. 1048 அதிகரித்து ரூ.66,408-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.84,320 -க்கும் விற்பனையாகிறது. 1 கிராம் 18 கேரட் தங்கம் 6,385-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ. 51,080-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ.63,850-க்கும் விற்பனையானது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்: வெள்ளியை பொருத்தவரையில் இன்றும் விலை ஏற்றம் கண்டுள்ளது. நேற்று கிராம் ரூ.2 அதிகரித்த நிலையில், இன்று 1 ரூபாய் அதிகரித்துள்ளது. அதன்படி1 கிராம் வெள்ளி நேற்றைய விலையான ரூ.106 ரூபாயில் இருந்து ரூ.107 ஆக உள்ளது. அதேபோல், 1கிலோ ரூ.1000 அதிகரித்து ரூ.1,07,000-த்திற்கு விற்பனை செய்யப்படுகிறது


Click it and Unblock the Notifications