தங்கம், வெள்ளி விலை சரிவு: ஈரான் போர் தீவிரமடைந்தால் இன்னும் தங்கம் விலை குறையுமா?
அமெரிக்கா - ஈரான் இடையேயான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக, ஏப்ரல் 13 அன்று இந்திய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை சடசடவென சரிந்தது. ஸ்பாட் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 2% குறைந்து $4,700-க்கு கீழேயும், ஸ்பாட் வெள்ளி அவுன்ஸ் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 2% சரிந்து $75-க்கு கீழேயும் வர்த்தகமானது.
MCX சந்தையில் தங்கம் விலை 10 கிராமுக்கு ரூ.1,100-க்கு மேல் (சுமார் 1%) சரிந்து, ரூ.1,51,500 என்ற அளவில் தடுமாறியது. MCX வெள்ளி கிலோவுக்கு கிட்டத்தட்ட 2% வீழ்ச்சியடைந்து, ரூ.2,38,600 என்ற அளவில் வர்த்தகமானது.
மறுபுறம், கச்சா எண்ணெய் விலை சுமார் 7% முதல் 9% வரை உயர்ந்து, 100 டாலர் மார்க்கைத் தாண்டியது. அமெரிக்க WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு $105 ஆகவும், பிரென்ட் கச்சா எண்ணெய் $102-க்கு மேலாகவும் வர்த்தகமானது. டாலரின் மதிப்பும் 99 என்ற அளவை தாண்டி உயர்ந்து, கடந்த வார இழப்புகளில் இருந்து ஓரளவு மீண்டுள்ளது. அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாலும், ஹார்முஸ் ஜலசந்தி தொடர்ந்து முடக்கப்பட்டிருப்பதாலும், உலகளாவிய எரிசக்தி நெருக்கடி ஏற்படுமோ என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் பரவியுள்ளது.
பாகிஸ்தானில் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. ஈரான் தனது அணுசக்தி திட்டங்களைக் கட்டுப்படுத்த மறுப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. அதேசமயம், ஹார்முஸ் ஜலசந்தியின் கட்டுப்பாடு, போர் இழப்பீடு, பிராந்திய போர் நிறுத்தம், முடக்கப்பட்ட வெளிநாட்டு சொத்துக்களுக்கான அணுகல் போன்ற கோரிக்கைகளை ஈரான் முன்வைத்ததாகக் கூறப்படுகிறது.
இந்த முக்கியமான கப்பல் பாதை முடக்கப்பட்டதால், எரிசக்தி விலைகள் கடுமையாக உயர்ந்து, பணவீக்க அபாயங்கள் அதிகரித்துள்ளன. இதனால், மத்திய வங்கிகள் வட்டி விகிதக் குறைப்பைத் தாமதப்படுத்தலாம் அல்லது கொள்கைகளை மேலும் இறுக்கமாக்கலாம் என்ற எதிர்பார்ப்புகள் வலுத்துள்ளன. இந்தச் சூழல் தங்கத்தின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. டிரேடிங் எகனாமிக்ஸ் தகவலின்படி, இந்த மோதல் தொடங்கியதிலிருந்து தங்கம் 10%-க்கும் அதிகமாகச் சரிந்துள்ளது.
Apr 13, 2026, 2:01 pm IST
இன்றைய தங்கம் விலை நேரலை: COMEX சந்தையில் தங்கம் விலை நிலவரம் எப்படி இருக்கும்?
COMEX சந்தையில் தங்கம் தற்போது ,700 முதல் ,750 என்ற வரம்பிற்குள் வர்த்தகமாகி வருகிறது. முக்கிய மூவிங் ஆவரேஜ்களுக்கு (moving averages) மேல் விலை நீடித்தாலும், பெரிய அளவில் ஏற்றம் காணப்படாமல் ஒருவித எச்சரிக்கை உணர்வே சந்தையில் நிலவுகிறது. ஒருவேளை விலை ,650-க்குக் கீழ் குறைந்தால், விற்பனை அதிகரித்து விலை ,600–,570 வரையிலும், அதையும் தாண்டினால் ,530–,500 வரையிலும் சரிய வாய்ப்புள்ளது. அதேசமயம், விலை ,750–,770-க்கு மேல் சென்றால், அது ,800–,830 வரை உயரக்கூடும்; மேலும் ,900 வரை கூட செல்ல வாய்ப்புள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், சந்தை பலவீனமாகவே உள்ளது. விலை குறையவே அதிக வாய்ப்புள்ள நிலையில், விலை உயர்ந்தாலும் அது மேல் மட்டங்களில் தடையை (resistance) சந்திக்கும் என என்ரிச் மணி (Enrich Money) நிறுவனத்தின் சிஇஓ பொன்முடி ஆர். தெரிவித்துள்ளார்.
Apr 13, 2026, 2:00 pm IST
இன்றைய வெள்ளி விலை நிலவரம்: COMEX வெள்ளி விலை கணிப்புகள்
சர்வதேச சந்தையில் வெள்ளி விலை தற்போது 75 டாலருக்குக் கீழே வர்த்தகமாகி வருகிறது. தொழில்துறை ரீதியாக ஓரளவுக்குத் தேவை இருந்தாலும், சந்தையில் பெரிய அளவில் முன்னேற்றம் காணப்படவில்லை. வெள்ளி விலை மீண்டும் 75 டாலரைத் தாண்டவில்லை என்றால், விற்பனை அழுத்தம் தொடர வாய்ப்புள்ளது. ஒருவேளை விலை 72 டாலருக்குக் கீழே குறைந்தால், அது 70 முதல் 68 டாலர் வரை சரியக்கூடும். அதேசமயம், 76 டாலருக்கு மேல் விலை நிலைபெற்றால், மீண்டும் வேகம் எடுத்து 78 முதல் 80 டாலர் வரை உயர வாய்ப்புள்ளது என்று என்ரிச் மணி (Enrich Money) சிஇஓ பொன்முடி ஆர் தெரிவித்துள்ளார்.
Apr 13, 2026, 1:59 pm IST
இன்றைய தங்கம் விலை நிலவரம்: MCX சந்தையில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நிபுணர்கள் கணிப்பு
MCX சந்தையில் தங்கம் இன்று சற்று சரிவுடன் தொடங்கி, தற்போது ₹1,51,500 முதல் ₹1,52,000 என்ற விலைக்குள் வர்த்தகமாகி வருகிறது. குறைந்த விலையில் வாங்குவதற்கு முதலீட்டாளர்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டாததால், சந்தை மந்தமாகவே காணப்படுகிறது. ஒருவேளை விலை ₹1,54,000-ஐத் தாண்டினால், அது ₹1,55,000 வரை உயர வாய்ப்புள்ளது. அதேசமயம், விலை ₹1,51,000-க்குக் கீழ் குறைந்தால், அது மேலும் சரிந்து ₹1,50,000 அல்லது ₹1,48,000 வரை செல்லக்கூடும். உலகளாவிய பொருளாதாரக் காரணிகள் பெரிய அளவில் கைகொடுக்காததால், சந்தையில் ஒருவித எச்சரிக்கை உணர்வு நிலவுகிறது. முக்கிய ஆதரவு நிலைகளைத் தக்கவைக்கத் தவறினால், தங்கம் விலை மேலும் சரிய வாய்ப்புள்ளதாக என்ரிச் மணி (Enrich Money) நிறுவனத்தின் சிஇஓ பொன்முடி ஆர் தெரிவித்துள்ளார்.
Apr 13, 2026, 1:58 pm IST
இன்றைய வெள்ளி விலை நிலவரம்: MCX வெள்ளி சந்தை கணிப்பு
MCX வெள்ளி சந்தை இன்று சரிவுடன் (Gap down) தொடங்கி, தற்போது ₹2,38,000-க்கு மேல் வர்த்தகமாகி வருகிறது. சந்தையில் நிலவும் கடும் ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், பாதுகாப்பான முதலீடு மற்றும் தொழில்துறை உலோகங்களுக்கான தேவை ஓரளவுக்கு மட்டுமே ஆதரவாக உள்ளது. ₹2,40,000 என்பது முக்கியத் தடைநிலையாக (Resistance) உள்ளதால், விலை இந்த நிலையை எட்டும்போது மீண்டும் விற்பனை அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஒருவேளை விலை ₹2,37,000-க்கு கீழ் குறைந்தால், அது மேலும் சரிந்து ₹2,35,000 முதல் ₹2,33,000 என்ற நிலைக்குச் செல்லக்கூடும். ஒட்டுமொத்தமாக சந்தை சூழல் எச்சரிக்கையுடனேயே காணப்படுகிறது. பெரிய அளவிலான விலை உயர்வுக்கான வாய்ப்புகள் தற்போது குறைவாகவே இருப்பதாக என்ரிச் மணி (Enrich Money) நிறுவனத்தின் சிஇஓ பொன்முடி ஆர் தெரிவித்துள்ளார்.
Apr 13, 2026, 11:23 am IST
தங்கம் விலை நிலவரம் நேரலை: அமெரிக்க பணவீக்கத் தரவுகள் (CPI) தங்க விலையில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
மார்ச் மாதத்திற்கான நுகர்வோர் விலை குறியீடு (CPI) தரவுகளின்படி, பணவீக்கம் 3.3 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது மே 2024-க்கு பிறகு பதிவான அதிகபட்ச உயர்வாகும். எரிசக்தி செலவுகள் 10.9% வரை உயர்ந்ததே இதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. பொதுவாக பணவீக்கம் உயரும்போது தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடாகக் கருதப்பட்டாலும், அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தைக் குறைப்பதற்கான வாய்ப்புகள் தற்போது குறைந்துள்ளன. இதனால் வட்டி விகிதங்கள் 3.50% முதல் 3.75% என்ற அளவிலேயே தொடர வாய்ப்புள்ளதாக ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் (Axis Securities) கணித்துள்ளது.
Apr 13, 2026, 10:21 am IST
கமாடிட்டி சந்தை நேரலை: கச்சா எண்ணெய் விலை அதிரடி உயர்வு!
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. திங்கள்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் விலை 9.3% உயர்ந்து, ஒரு பேரல் சுமார் 105 டாலராக வர்த்தகமாகிறது. கடந்த வார சரிவிலிருந்து மீண்டுள்ள நிலையில், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையும் 8% அதிகரித்து ஒரு பேரல் 103 டாலர் என்ற நிலையை எட்டியுள்ளது.
Apr 13, 2026, 10:20 am IST
தங்கம், வெள்ளி விலை நிலவரம் நேரலை: ஹார்முஸ் ஜலசந்தி பதற்றம்; தங்கம் விலையில் பாதிப்பு ஏற்படுமா?
ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களை அமெரிக்க கடற்படை உடனடியாகத் தடுக்கும் என அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. ஈரான் மிரட்டிப் பணம் பறிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஏப்ரல் 14 காலை 10 மணி முதல் ஈரான் துறைமுகங்களில் இருந்து வரும் அனைத்து கடல்சார் போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். இருப்பினும், ஈரான் அல்லாத பிற துறைமுகங்களில் இருந்து வரும் கப்பல்களுக்கு அனுமதி உண்டு. ஈரானின் எண்ணெய் மற்றும் எரிவாயு விற்பனையை முழுமையாக முடக்கி, அந்நாட்டின் பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்வதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.
Apr 13, 2026, 10:20 am IST
தங்கம், வெள்ளி விலை நிலவரம்: அமெரிக்கா - ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி!
பாகிஸ்தான் மத்தியஸ்தத்தில் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற அமெரிக்கா - ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இரு நாடுகளுக்கும் இடையே இன்னும் பெரிய அளவில் கருத்து வேறுபாடுகள் நீடிப்பதாக ஈரானிய அதிகாரிகளும், அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பேசிய வான்ஸ், "எதிர்பார்த்த முன்னேற்றம் இன்னும் ஏற்படவில்லை, விரைவில் நடக்கும் என நம்புகிறோம்" என்றார். ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களை உருவாக்கக் கூடாது என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது.
Apr 13, 2026, 10:07 am IST
தங்கம் விலை நிலவரம்: எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் விலை 1% சரிவு!
இன்றைய வர்த்தகத் தொடக்கத்தில், எம்சிஎக்ஸ் (MCX) சந்தையில் தங்கம் விலை 1,100 ரூபாய்க்கும் மேல் (0.73%) சரிந்து, 1,51,500 ரூபாய் என்ற அளவில் தடுமாறி வருகிறது. இன்றைய வர்த்தகத்தில் 10 கிராம் தங்கம் குறைந்தபட்சமாக 1,51,457 ரூபாய் வரை சரிந்தது. தற்போது நிலவரப்படி, எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் தங்கம் 802 ரூபாய் (0.53%) குறைந்து, 1,51,850 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது.
Apr 13, 2026, 10:05 am IST
வெள்ளி விலை நிலவரம்: எம்சிஎக்ஸ் சந்தையில் 2% மேல் சரிந்த வெள்ளி விலை!
ஏப்ரல் 13 அன்று எம்சிஎக்ஸ் (MCX) சந்தையில் வெள்ளி விலை கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. தற்போது ஒரு கிலோ வெள்ளி விலை 5,029 ரூபாய் (2.07%) குறைந்து, 2,38,245 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இன்றைய வர்த்தகத்தில் ஒரு கிலோ வெள்ளியின் விலை குறைந்தபட்சமாக 2,37,190 ரூபாய் வரை சென்றது.
Apr 13, 2026, 10:04 am IST
தங்கம் விலை நேரலை: ,700-க்கு கீழ் சரிந்தது ஸ்பாட் தங்கம் விலை!
சர்வதேச சந்தையில் ஸ்பாட் தங்கம் விலை 2% வரை சரிந்து, ஒரு அவுன்ஸ் 4,700 டாலருக்கும் கீழ் வர்த்தகமாகிறது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான முக்கிய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததே இந்த விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அத்துடன், ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) நீடிக்கும் போக்குவரத்து முடக்கம், உலகளாவிய எரிசக்தி தட்டுப்பாடு குறித்த அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது.
Apr 13, 2026, 10:03 am IST
வெள்ளி விலை கடும் சரிவு: 3% வரை குறைந்த ஸ்பாட் சில்வர் - இன்றைய நேரலை அப்டேட்ஸ்!
சர்வதேச சந்தையில் ஸ்பாட் வெள்ளி விலை 3% வரை சரிந்து, ஒரு அவுன்ஸ் 74 டாலருக்கும் கீழ் குறைந்துள்ளது. இதன் மூலம் கடந்த வாரம் ஈட்டிய லாபத்தை வெள்ளி தற்போது இழந்துள்ளது. ஈரான் எண்ணெய் மற்றும் எரிவாயு விற்பனையைத் தடுக்க ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) முடக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்ததைத் தொடர்ந்து இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இது உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
Share This Article
Story first published: Monday, April 13, 2026, 10:25 [IST]