தங்கம் விலை உயர்வு; வெள்ளி விலை சரிவு: முதலீடு செய்யும் முன்பு இதை தெரிஞ்சுக்கோங்க

இந்தியாவில் தங்கம் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. ஆனால், சர்வதேச சந்தையில் நிலவும் ஏற்ற இறக்கங்களால், வெள்ளி விலை சரிவைச் சந்திக்கக்கூடும். மே 21 நிலவரப்படி, ஸ்பாட் தங்கம் விலை வர்த்தகத்தின் தொடக்கத்தில் 1% உயர்ந்தாலும், பின்னர் அந்த உயர்வை இழந்து தற்போது $4,500-க்கு மேல் வர்த்தகமாகிறது. ஸ்பாட் வெள்ளி விலை சுமார் 1% சரிந்து, ஒரு அவுன்ஸ் $75 என்ற அளவில் விற்பனையாகி வருகிறது.

மறுபுறம், கச்சா எண்ணெய் விலைகள் தலா 1% உயர்ந்துள்ளன. அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் ஒரு பேரல் $99-க்கு அதிகமாகவும், பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல் $106-க்கு அருகிலும் வர்த்தகமாகின்றன.

தங்கம் விலை உயர்வு; வெள்ளி விலை சரிவு: முதலீடு செய்யும் முன்பு இதை தெரிஞ்சுக்கோங்க

ஈரானுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தையின் இறுதிக்கட்டத்தில் இருப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியது, முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தி விரைவில் மீண்டும் திறக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், கப்பல் போக்குவரத்து சீராகும் என்ற நம்பிக்கையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்தது. இது பணவீக்க அச்சத்தைக் குறைத்து, மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டிய அவசியத்தையும் தளர்த்தியது.

Also Read

அதே சமயம், அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் சமீபத்திய கூட்டத்தின் குறிப்புகளின்படி, பணவீக்கம் 2% இலக்கைத் தாண்டி நீடித்தால், இந்த ஆண்டு வட்டி விகித உயர்வு தேவைப்படலாம் என பெரும்பாலான அதிகாரிகள் நம்புகின்றனர். இதனால், டிசம்பர் மாதத்திற்குள் மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்துமா அல்லது இந்த ஆண்டு இறுதி வரை மாற்றாமல் வைத்திருக்குமா என்பது குறித்து முதலீட்டாளர்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது என டிரேடிங் எகனாமிக்ஸ் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+