Gold Rate: சர்ரென சரிந்த தங்கம் விலை.. 3 நாட்களில் சவரனுக்கு இவ்வளவு சரிவா?

தங்கம் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக குறைந்துள்ளது. அந்த வகையில் இன்றைய தினம் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் ஆபரண தங்கம் மற்றும் 24 கேரட் தூய தங்கத்தின் விலை என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் 50 ரூபாய் விலை சரிந்து 14,135 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் 400 ரூபாய் விலை குறைந்துள்ளது. அந்த வகையில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,13,080 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Gold Rate: சர்ரென சரிந்த தங்கம் விலை.. 3 நாட்களில் சவரனுக்கு இவ்வளவு சரிவா?

ஆபரண தங்கம் விலை இந்த வாரத்தில் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக விலை சரிந்து மக்களுக்கு நிம்மதியை தந்துள்ளது. திங்கள்கிழமை அன்று ஒரு கிராமுக்கு 15 ரூபாய் விலை குறைந்த தங்கம் நேற்று 85 ரூபாய் சரிந்தது. இன்றைய தினம் கிராமுக்கு 50 ரூபாய் குறைந்துள்ளது. இந்த வாரத்தில் இந்த 3 நாட்கள் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு 150 ரூபாயும் ஒரு சவரனுக்கு 1200 ரூபாயும் விலை சரிவை கண்டுள்ளது.

24 கேரட் தங்கம் விலையை பார்த்தால் ஒரு கிராம் 55 ரூபாய் விலை குறைந்துள்ளது. அந்த வகையில் ஒரு கிராம் 15,420 ரூபாய்க்கும் 10 கிராம் 1,54,200 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 11,905 ரூபாய்க்கும், ஒரு சவரன் 95,240 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

வெள்ளியின் விலை இன்று மாறவில்லை. தமிழ்நாட்டில் இன்று ஒரு கிராம் வெள்ளி 255 ரூபாய்க்கும் ஒரு கிலோ 2.55 லட்சத்துற்கும் விற்கப்படுகிறது. ஈரான் அமெரிக்கா போர், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலர் மதிப்பு ஆகிய மூன்றும் தான் தங்கம், வெள்ளி விலைகளை நிர்ணயம் செய்யும் காரணிகளாக உள்ளன. அந்த வகையில் ஈரான் அமெரிக்கா இடையே 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக தங்கம் விலை பெரிதாக மாற்றம் அடையாமல் இருக்கிறது. நாளை இந்த பேச்சுவார்த்தையின் போக்கினை பொறுத்து தங்கம் வெள்ளி விலை மாற்றத்தை காணலாம்.

உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் ஸ்பாட் கோல்டின் விலை 4,343 டாலராக உள்ளது. அதே போல எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை 1,52,717 ரூபாயாக வர்த்தகமாகிவருகிறது. இந்த இரண்டு சந்தையிலும் தங்கம் பெரிதாக மாற்றம் காணவில்லை.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+