இந்தியாவில் சமீப காலமாக தங்கம் விலை ஏற்றம் இறக்கம் என யூகிக்க முடியாத பாதையில் சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிய போர் பதற்றம் தங்கம் விலையை கணிசமாக பாதித்தது. அதிலும் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த ஓராண்டுக்கு தங்கம் வாங்குவதை குறைக்க சொல்லி பரிந்துரை செய்திருந்தார். இறக்குமதி செய்யப்படும் தங்கத்தை குறைக்க மத்திய அரசும், இறக்குமதி வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால் இனிவரும் காலங்களில் தங்கம் விலை தொடர்ந்து உச்சத்தை எட்டும் என்றே நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
இவை ஒருபுறம் இருந்தாலும் இன்றைய தினம் தங்கம் சற்று ஆறுதலை வழங்கியுள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 43 குறைந்து ரூ.16,124-க்கும், 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 30 குறைந்து ரூ.14,780-க்கும், 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ.25 குறைந்து ரூ.12,400-க்கும் விற்பனையாகிறது.
இறக்குமதி வரி அதிகரிப்பைத் தொடர்ந்து இந்தியர்கள் துபாய்க்கு சென்று தங்கம் வாங்கி வருகின்றனர். காலம் காலமாக துபாய் தங்கம் என்றால் இந்தியர்களுக்கு அவ்வளவு பிரியம். காரணம் அங்கு தங்கத்தின் தூய்மைக்கு எந்த சமரசமும் இருக்காது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை. இந்த நம்பிக்கைதான் தற்போது துபாய் நகை கடைக்காரர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு துபாயில் இந்தியர்கள் வாங்கும் சங்கத்தின் அளவு 10 முதல் 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் செய்து நிறுவனமான கலீஜ் டைம்ஸ் செய்து வெளியிட்டுள்ளது.

துபாயில் கிட்டத்தட்ட 1 கிராம் தங்கம் இந்திய விலையோடு ஒப்பிடுகையில் தோராயமாக 2000 ரூபாய் வரை குறைவாக இருக்கிறது. இதுவும் இந்தியர்கள் அங்கு நகை வாங்குவதற்கு முக்கிய காரணமாய் அமைகிறது. இன்று இந்தியாவில் 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ.1,28,992-க்கு விற்பனையாகிறது, 1 பவுன் 22 கேரட் தங்கம் ரூ.1,18,240-க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு பவுன் 18 கேரட் தங்கம் ரூ.99,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பொதுவாக இறக்குமதி வரி அதிகரிக்கும் போது ஒவ்வொரு நகைக்கடைக்காரரும் கூடுதல் செலவு செய்ய வேண்டி வரும். இதை வேறு வழியே இல்லாமல் பொதுமக்கள் மீது வைத்தால் தான் அவர்களுக்கும் லாபம் கிடைக்கும். இதனால்தான் எப்பொழுதெல்லாம் இறக்குமதி வரி அதிகரிக்கிறதோ? அப்பொழுதெல்லாம் தங்கத்தின் விலை உயர்கிறது.
இந்த பதிவில் நீங்கள் பார்த்தது வெறும் தங்கத்திற்கான விலை மட்டும்தான். நீங்கள் ஆபரண தங்கமாக வாங்க வேண்டுமானால் அதற்கு நகை கடைக்காரர்கள் செய்கூலி மற்றும் ஜிஎஸ்டி போன்றவற்றை சேர்த்து தான் பில் போடுவார்கள்.


Click it and Unblock the Notifications