ஜூன் 3-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி, தங்க விலையில் எந்த மாற்றமும் இல்லை. நேற்றைய விலையில் தான் இன்றும் விற்பனையாகிறது. கடந்த 2 நாட்களாகவே ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஜூன் மாதம் பிறந்ததுமே தங்கம் சவரனுக்கு 1,000 ரூபாய் குறைந்து நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியளித்தது. இந்தப் பதிவில் இன்றைய தங்க விலை நிலவரத்தைப் பார்ப்போம்.
இன்றைய தங்கம் விலை நிலவரம் (ஜூன் 03/2026): இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.15,818-க்கும், 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.14,500-க்கும், 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ.12,180-க்கும் விற்பனையாகிறது. 1 பவுன் 24 கேரட் தங்கம் ரூ.1,26,544-க்கும், 1 பவுன் 22 கேரட் தங்கம் ரூ.1,16,000-த்திற்கும், 1 பவுன் 18 கேரட் தங்கம் ரூ.97,440-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4-ஆம் தேதி 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 9,917-க்கும், 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.9,090-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதிலிருந்து இன்று வரை பார்த்தால்.. அதாவது 2026-ஆம் ஆண்டின் ஜூன் 3-ஆம் தேதி நிலவரப்படி கிராமுக்கு 5,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் மே மாதம் தங்க விலை 5.10 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக மே 14-ஆம் தேதி அன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.16,418 என்ற விலையை எட்டியது. 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.15,050 என்ற விலைக்கு விற்பனையானது.
ஒருபுறம் இறக்குமதி வரி அதிகரிப்பிலும் தங்கம் விலை நிலையாக இருப்பது மகிழ்ச்சியை கொடுத்தாலும், இனிவரும் நாட்களில் இது தொடருமா? என்ற கேள்வியையும் எழுப்புகிறது. ஏனெனில் நிபுணர்கள் அனைவரும் இனி வரும் காலங்களில் தங்கம் தொடர் உயர்வில் இருக்கும் என்ற ஒருமித்த கருத்தையே முன்வைக்கின்றனர். அப்படி இருக்கையில் இது போன்ற நாட்களை நகை வாங்குவோர் பயன்படுத்திக் கொள்வது நல்லது.
வெள்ளி விலை நிலவரம்: இன்றுடன் கடந்த 6 நாட்களாக வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. 1 கிராம் வெள்ளி ரூ.290-க்கு விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளி ரூ.2,90,000-ஆக இருக்கிறது.
மேலே கூறப்பட்டுள்ள விலை வெறும் தங்கம் மற்றும் வெள்ளிக்கானது மட்டும்தான். இதோடு செய்கூலி, ஜிஎஸ்டி ஆகியவற்றை சேர்த்து செலுத்தி தான் நகைகளாக வாங்க முடியும். திருமணம் மற்றும் வரவிருக்கும் பிற விசேஷங்களுக்காக நகை வாங்க திட்டமிட்டவர்கள் இந்த விலை குறைவை பயன்படுத்தி பலனடையலாம்.


Click it and Unblock the Notifications