விரைவில் ரூ.2 லட்சத்தை எட்டுகிறதா தங்கம்? இன்றைய ரேட் என்ன? அப்படின்னா வெள்ளி விலை!

ஜூன் 2-ஆம் தேதியான இன்றைய தினம் தங்க விலையில் எந்த மாற்றமும் இல்லை. நேற்றைய விலையில் தான் இன்றும் தொடர்கிறது. நேற்று தங்கம் விலை 1 கிராமுக்கு ரூ.142 குறைந்து ரூ.15,818-க்கு விற்பனையானது. இன்றைய தினமும் அதே விலையில் தான் தொடர்கிறது. இந்த பதிவில் தமிழ்நாட்டில் தங்க விலை நிலவரம் என்ன என்பதை பார்ப்போம்.

இன்றைய தங்கம் விலை நிலவரம் (ஜூன் 02/2026): இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.15,818-க்கும், 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.14,500-க்கும், 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ.12,180-க்கும் விற்பனையாகிறது. 1 பவுன் 24 கேரட் தங்கம் ரூ.1,26,544-க்கும், 1 பவுன் 22 கேரட் தங்கம் ரூ.1,16,000-த்திற்கும், 1 பவுன் 18 கேரட் தங்கம் ரூ.97,440-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை வெறும் தங்கத்திற்கான விலை மட்டும்தான். நீங்கள் கடைக்கு சென்று ஆபரணமாக வாங்கினால் அதற்கு ஜிஎஸ்டி, மேக்கிங் சார்ஜஸ் போன்றவற்றையெல்லாம் சேர்த்து இதை விட இன்னும் கூடுதல் தொகை செலுத்த வேண்டி வரும்.

மே 29 மற்றும் மே 30 ஆகிய தேதிகளில் சவரனுக்கு 1,000 ரூபாய் அதிகரித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது தங்கம். ஆனால் அதற்கு முன்பு சுமார் 3 நாட்கள் தொடர்ந்து சரிவை மட்டும் சந்தித்தது. அதிலிருந்து ஜூன் மாதம் பிறந்தவுடன் சவரனுக்கு 800 ரூபாய் வரை குறைந்தது.

விரைவில் ரூ.2 லட்சத்தை எட்டுகிறதா தங்கம்? இன்றைய ரேட் என்ன? அப்படின்னா வெள்ளி விலை!

தங்கத்தை மக்கள் விரும்பி வாங்குவதற்கு முக்கிய காரணமே அதன் லிக்குவிடிட்டி தான். எப்போதும் வேண்டுமானாலும் தங்கத்தை பணமாக மாற்றி பயன்படுத்தலாம். அதுவும் அவசர காலங்களில் தங்கத்தை போல உதவும் வேறொரு முதலீடு குறைவு என்று தான் சொல்ல வேண்டும். இதை நன்கு உணர்ந்தவர்கள் இந்தியர்கள். இதனால் தான் என்ன விலை உயர்வு ஏற்பட்டாலும் நகைக்கடைகளில் மட்டும் கூட்டம் குறையவே குறையாது.

சமீபத்தில் இறக்குமதி வரி உயர் 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதை கண்டிப்பாக நகை வாங்குவோரின் மீதுதான் நகை கடைக்காரர்கள் சுமத்துவார்கள் என்பதை தெரிந்து கொண்ட பலர், துபாய்க்கு சென்று நகை வாங்கி வந்தனர். இதனால் அங்கு முன்பை விட 30 சதவீதம் வரை நகை விற்பனை அதிகரித்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.

விரைவில் 10 கிராம் தங்கம் ரூ.2 லட்சத்தை எட்டும் என்று நிபுணர்கள் கூறி வருகின்றனர். இதற்கு முன்னர் 2025-ஆம் ஆண்டில் 10 கிராம் தங்கம் ரூ.1 லட்சத்தை கடக்கும் என்று கூறப்பட்டது. அதேபோல நிபுணர்களின் கருத்தை உண்மையாக்கும் வகையில் தங்கம் விலை இந்த உச்சத்தை தொட்டது. தற்போதும் இதே போல தங்கம் விலை அதிகரிக்கும் என்ற கருத்து நிலவுகிறது. இதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தங்கம் மட்டும் தான் தொடர்ந்து உயர்கிறது என்று பார்த்தால் வெள்ளி விளையும் சமீபகாலமாக உயர்வை எட்டி வருகிறது. ஆனால் கடந்த ஐந்து நாட்களாக வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. 1 கிராம் வெள்ளி ரூ.290-க்கு விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளி ரூ.2,90,000-ஆக இருக்கிறது.

இதிலிருந்து ஓராண்டுக்கு முன்னர் அதாவது 2025-ஆம் ஆண்டின் ஜூன் மாதம் இதே 1 கிலோ வெள்ளி ரூ.1,19,000-ஆக மட்டுமே இருந்தது. ஆனால் இன்று கிட்டத்தட்ட இரண்டு மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+